சோள டோக்ளா தேவையான பொருட்கள் வெள்ளை சோள ரவை - 1 கப்தயிர் - 1 கப்கடலை மாவு - 1/4 கப்சமையல் சோடா - 1 சிட்டிகைமஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டிஉப்பு - தேவையான அளவுதாளிக்க கடுகு, உளுந்து - தலா 1 தேக்கரண்டிபச்சை மிளகாய் - 2கறிவேப்பிலை - சிறிதளவுஎண்ணெய் - 2 மேசைக்கரண்டிமல்லித்தழை, தேங்காய் துருவல் - அலங்கரிக்க செய்முறை சோள ரவை, கடலை மாவு, உப்பு, சமையல் சோடா இவற்றை ஒன்றாகக் கலக்கவும். தயிரில் மஞ்சள் தூளை சேர்த்து கலக்கவும். இந்தத் தயிரை ரவை கலவையில் விட்டுக் கலந்து, தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்திற்கு கலந்து வைக்கவும். விளிம்பு உள்தட்டில் எண்ணெய் தடவி, அதில் இந்த மாவுக் கலவையை விடவும். இதை இட்லிப் பாத்திரத்துக்குள் வைத்து 15 நிமிடங்கள் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். பிறகு இந்தத் தட்டை இன்னொரு தட்டில் கவிழ்த்தால் அப்படியே டோக்ளா விழுந்துவிடும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து போட்டு தாளிக்கவும். அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலையை போட்டு, தட்டில் கொட்டியிருக்கும் டோக்ளா மேல் பரப்பியது போல் கொட்டவும். மேலே, தேங்காய்த் துருவல், மல்லித்தழை தூவி அலங்கரிக்கவும். இதைத் துண்டுகளாக வெட்டி பரிமாறவும். ஆதாரம்: ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை