சாமை புளி பொங்கல் தேவையான பொருட்கள் சாமை - ஒரு கப்பச்சை வேர்க்கடலை - ஒரு கப்சின்ன வெங்காயம் - 10காய்ந்த மிளகாய் - இரண்டுவெந்தயம், பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்கடுகு - ஒரு டீஸ்பூன்சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்வெல்லம் - ஒரு சிறிய துண்டுநல்லெண்ணெய் - ஒரு குழிக்கரண்டிகருவேப்பிலை - சிறிதுபுளி - சிறு நெல்லிக்காய் அளவுஉப்பு - தேவையான அளவு செய்முறை புளியை ஊற வைத்து 2 கப் அளவுக்கு கரைத்துக்கொள்ளவும். பிரஷர் பேனில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம், பெருங்காயத் தூள், காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும். இதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பின்னர் புளிக்கரைசல், சாமை, சாம்பார் பொடி, உப்பு, வெல்லம், வேர்க்கடலை, ஒரு கப் தண்ணீர் சேர்த்து மூடவும். ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து இறக்கவும் வெங்காயத்துடன் சூடாக பரிமாறவும். ஆதாரம்: ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை