குதிரைவாலி அரிசி பிரியாணி தேவையான பொருட்கள் குதிரைவாலி அரிசி - 500 கிராம்பச்சைப் பட்டாணி - 50 கிராம்கேரட், பீன்ஸ் - 50 கிராம்நெய், மீல்மேக்கர், எண்ணெய் - தலா 50 கிராம்முந்திரிப் பருப்பு - 20 கிராம்இஞ்சி-பூண்டு விழுது - 3 டீஸ்பூன்மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்கறிமசால் பவுடர் - 2 டீஸ்பூன்தக்காளி, மிளகாய் வற்றல் - தலா 2பச்சை மிளகாய், ஏலக்காய் - தலா 4புதினா மல்லி இலை - சிறிதுஉப்பு - தேவையான அளவு செய்முறை அகலமான பாத்திரத்தில் எண்ணெய் அல்லது நெய் விட்டு ஏலக்காய் முந்திரி தாளித்து இஞ்சி-பூண்டு விழுது போட்டு நன்கு வாசனை வரும் வரை வதக்கி பின் நறுக்கிய காய்கறிகள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு நன்கு வதக்க வேண்டும். பின் கறிமசால் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து, அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதித்த பின் குதிரைவாலி அரிசியை போட்டு கிளறி மூடி வைத்து நன்கு வெந்த பின் எடுத்தால் பிரியாணி ரெடி. ஆதாரம்: ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை