கம்பு பாலக் ரொட்டி தேவையான பொருட்கள் கம்பு மாவு - ஒரு கப்பாலக்கீரை - 70 கிராம்உப்பு - தேவையான அளவுநெய் / எண்ணெய் - 20 கிராம்தண்ணீர் - 20 கிராம் செய்முறை பாலக் கீரையை நன்கு கழுவி சிறிய துண்டாக வெட்ட வேண்டும். எண்ணெய் 10 மில்லி கிராம் எடுத்து கம்பு மாவில் ஊற்றி சிறிது உப்பையும் சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு போல் பிசையவும். மாவில் சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள கீரையையும் போட்டு நன்கு பிசைந்து சிறிய சிறிய உருண்டையாக தயார் செய்ய வேண்டும். பிறகு சூடான தோசை கல்லில் சப்பாத்தி போல் கையால் தட்டிப்போட்டு அதில் சிறிது எண்ணெய் ஊற்றி திருப்ப வேண்டும், இரு புறமும் வெந்தவுடன் எடுக்க வேண்டும். ஆதாரம்: ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை