தொற்றுநோய்களுக்கு எதிரான தேசியத் தயார் நிலை புதிதாக உருவாகும் தொற்றுநோய்களைக் கண்டறிந்து அவற்றை எதிர்கொள்வதற்கான தேசியத் தயார்நிலையை மேம்படுத்த மத்திய சுகாதார அமைச்சகம் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நோய்களை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிவதற்காக வைரஸ் ஆராய்ச்சி, நோய் கண்டறிதல் ஆய்வகங்கள் கட்டமைப்பு விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. நோய்க்கிருமிகளை விரைவாகக் கண்டறியும் வகையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் கீழ் இயங்கும் நாடு தழுவிய இந்த ஆய்வகக் கட்டமைப்பில் உள்ள ஆய்வகங்களின் எண்ணிக்கை தற்போது 163 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் 11 மண்டல ஆய்வகங்கள், 27 மாநில அளவிலான ஆய்வகங்கள், 125 மருத்துவக் கல்லூரி ஆய்வகங்கள் அடங்கும். நோய் கண்டறிதல், நோய்க்கிருமிகளின் மரபணுத் தன்மையை அறிதல் ஆகிய பணிகளுக்காக தொற்றுநோய் ஆராய்ச்சிக் கட்டமைப்புகள், நோய் கண்டறிதல் ஆய்வகங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. பொது சுகாதார அவசரநிலையின் போது மத்திய, மாநில சுகாதார அதிகாரிகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மாதிரிப் பயிற்சிகள் மூலம் பலப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் பொது சுகாதார அவசரநிலைகளைக் கையாள்வதற்கான விரிவான அணுகுமுறையின் ஒரு பகுதியாக, பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார இயக்கம் தொடங்கப்பட்டு அனைத்து நிலையிலான சுகாதார மையங்களின் திறன்களும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286953®=3&lang=1 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்