நோய் கண்காணிப்பு

கர்ப்பப்பை வாய்ப் பகுதியில் உள்ள அணுக்களில் ஏற்படும் புற்றுநோய், கர்ப்பப்பை வாய்ப் புற்று நோய் எனப்படும்.

கர்ப்பப்பை வாய்ப் புற்று நோயைப் பொருத்தவரை, 95 சதவீத பெண்களுக்கு வைரஸ் காரணமாகவே ஏற்படுகிறது. அதாவது, பாலுறவில் தொடர்ந்து ஈடுபடும் பெண்களுக்கு "எச்பிவி' எனப்படும் "ஹூமன் பாப்பிலோமா வைரஸ்' காரணமாக கர்ப்பப்பை வாய்ப் புற்று நோய் ஏற்படுகிறது.

எளிய-செலவில்லாத பரிசோதனை

அதிர்ஷ்டவசமாக, ஒரு எளிமையான, குறைவான செலவினம் கொண்ட மற்றும் நம்பத்தக்க சோதனை முறையான "பேப் ஸ்மியர்' என்ற பரிசோதனை மூலம் கர்ப்பப்பை வாய்ப் புற்று நோயை, எளிதில் அது தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்பே கண்டுபிடிக்கலாம்.

கர்ப்பப் பை வாயின் மேற்பரப்பிலிருந்து அணுக்கள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படும்; இந்தச் சோதனையில் புற்று நோய் உண்டாவதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பேகூட வழக்கத்துக்கு மாறான செல்களை அடையாளம் காண முடியும்.

பாலுறவில் இடைவிடாது ஈடுபடும் அனைத்துப் பெண்களுக்கும் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறையும், 21 முதல் 39 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் "பேப் ஸ்மியர்' பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

ஆதாரம் : தினமணி நாளிதழ்