தெரிந்து கொள்ள வேண்டியவை

இருமலின் வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டர்.

ஒரு சிசுவின் கையில் ரேகைகள் 3-வது மாதத்திலிருந்து உருவாகின்றன.

கை, கால்கள் நகங்களின் அடிப்பகுதியிலிருந்து அதன் மேல்பாகம் வரை வளர்வதற்கு 6 மாதங்கள் ஆகின்றன. கால் நகங்களை விட கைவிரல் நகங்கள் வேகமாக வளர்கின்றன.

ஒரு மனிதனுக்கு சரியாக தினமும் 40 முதல் 100 தலைமுடிகள் உதிர்ந்து விடுகின்றன.

கம்யூப்ட்டரில் சில மணி நேரங்கள் பணிபுரிந்து விட்டு பார்வையை சில நொடிகள் வெள்ளை நிற காகிதத்தில் செலுத்தினால் அந்தக் காகிதம் இளஞ்சிவப்பு நிறமாகத் தெரியும்.

ஆண்களின் உடல் பாகத்தில் மிகவும் வளரக்கூடிய முடி, தாடியில் வளரும் முடிதான். ஏனென்றால் ஒருவர் தனது வாழ்நாளில் தாடியை எடுக்காவிட்டால் அது 30 அடி நீளம் வரை வளர்ந்து விடும்.

60 வயதாகும் போது நாக்கின் சுவை மொட்டுகளின் பெரும் பகுதி அழிந்து போய்விடுகின்றன.

மனித தாடை 80 கிலோ எடையை இழுத்து அசைக்கக் கூடியதாகும்.

சிரிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. 6 வயது வரை குழந்தைகள் ஒரு நாளைக்கு 300 தடவைகள் சிரிக்கின்றன. 18 வயதைக் கடந்தவர்கள் ஒரு நாளைக்கு 100 தடவை மட்டுமே சிரிக்கிறார்கள்.

ஒரு மனிதனின் உடம்பில் 600-க்கும் அதிகமான தசைகள் இருக்கின்றன. இது உடல் எடையில் 40 சதவீதமாகும்.

உலகில் மனிதர்களிடம் பொதுவாக காணப்படும் ரத்த குரூப் ஓ. அபூர்வமான ரத்த குரூப் ஏ-ஹெச். இந்த ரத்த குரூப் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் உலகில் மொத்தம் 10 பேரிடம் மட்டுமே இருப்பது அறியப்பட்டுள்ளது.

மனிதனின் நரம்புகளை ஒட்டு மொத்தமாக நீளமாக்கினால் அது 45 மைல் நீளமாக இருக்கும்.

மனிதனின் உடலில் ஒரு நிமிடத்திற்கு 300 கோடி அணுக்கள் செத்து மடிகின்றன.

மனித மூளையில் 85 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது.

ஒரு மனிதனின் தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக்கும்.

ஒரு மனிதன் தனது வாழ்நாளில் 16 ஆயிரம் காலன் தண்ணீர் குடிக்கிறான்.

நமக்குள் நடக்கும் 18 அதிசியங்கள்!

வளர்ந்த மனித உடலில் 600 தசைகள். நூற்றுக்கும் மேலான இணைப்புகள். ஒரு லட்சம் கிலோமீட்டர் நீளம் உள்ள இரத்தக் குழாய்கள் 13000 மில்லியன் உயிரணுக்களும் உள்ளன.

மனிதனுக்குள்ள 206 எலும்பு களில் பெரும்பாலானவை கைகளிலும் கால்களிலும் உள்ளன.

ஆண்களில் விந்துவை உண்டாக்கும் விரை (விந்தகம்) நாள் ஒன்றுக்கு 10 மில்லியன்வரை விந்து உயிரணுக்களை உற்பத்தி செய்யும். இவை அப்படியே உயிருடன் ஆறு மாத காலம் இருந்தால் மற்றொரு உலக ஜனத்தொகையை உருவாக்கக்கூடும்.

மனித இதயம் ஒரு இயல்பான வாழ்நாளில் 2000 மில்லியன் முறை துடிக்கும். இந்த கால கட்டத்தில் 500 மில்லியன் இரத்தத்தை பம்ப் செய்யும். மனிதன் தூங்கும்போது கூட இதயம் ஒரு மணி நேரத்தில் சுமார் 340 லிட்டர் இரத்தத்தை பம்ப் செய்யும். ஒரு நாளைக்கு 1 லட்சம் முறைதுடிக்கும்.

இளைஞனின் நாடித்துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 70 லிருந்து 72 முறை. ஆனால் இளம் பெண்ணின் நாடித்துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 78 லிருந்து 82 முறை இருக்கும்.

மனிதனின் சிறுநீரகத்தில் ஒரு மில்லியன் வடிகட்டிகள் இருக்கின்றன. அவை ஒரு நிமிடத்திற்கு 1.3 லிட்டர் இரத்தத்தை வடிகட்டுகின்றன. அந்த வடிப்பில் ஏற்பட்ட கழிச்சலை சிறுநீரகம் வெறியேற்றுகின்றன.

மனித உடலில் உள்ள இரத்தத்தை நிமிடத்திற்கு 4.5 லிட்டர் விகிதம் நுரையீரலில் சுத்தப்படுத்தும்.

மனித உடலில் சிவப்பணுக்களை எலும்புச் சோறு (எலும்பின் மச்சை) தயாரிக்கிறது. அந்த அணுக்கள் 100லிருந்து 120 நாட்கள் வாழ்கின்றன. மனித வாழ்வில் சுமார் அரை டண் சிகப்பணுக்கள் தயாராகும்.

ஒரு மனிதன் தன்னுடைய வாழ்நாளில் 50 டண் உணவை சாப்பிடுகிறான். 50 ஆயிரம் லிட்டர் திரவத்தை குடிக்கிறான்.

நாம் தினமும் கண் இமைகளை திறக்கவும் மூடவும் செய்கிறோம் அல்லவா? இந்த செயல் 6 வினாடிக்கு கொருமுறை நடக்கிறது. அதன்படி இந்த சிமிட்டலை நாம் நம்முடைய வாழ் நாளில் 250 மில்லியன் முறை (25 கோடிமுறை) செய்கிறோம்.

மனிதனுக்கு 15 வயது வரையில்தான் மூளை வளரும்.

சாதாரண மனிதனின் தலையில் 10 ஆயிரம் ரோமங்கள் உள்ளன.

ஒரு விஞ்ஞானி, மனிதனின் மரணத்திற்கு சில நொடிகளுக்கு முன்பு இருந்த எடையும் மரணமடைந்த உடனே இருந்த எடையும் ஒப்பிட்டு பார்த்து 21 கிராம் குறைவாக இருந்ததை அறிந்து அதன்மூலமாக ஜீவான்மாவின் எடை 21 கிராம் என்று நிரூபித்தார்.

நாம் ஒரு நிமிடத்திற்கு சுமார் 25 முறை கண் இமை களை மூடி திறக்கிறோம்.

ஒரு ஆரோக்கியமான மனிதன் ஒரு நாளில் (24 மணிகளில்) 23000 முறை மூச்சிழுப்பான்.

பெரும்பாலோர் இரவுத் தூக்கத்தில் 40 முறை அப்படியும் இப்படியும் புரளுவார்கள்.

மனித உடலில் உள்ள அனைத்து இரத்தக் குழாய்களை வரிசையாக இணைத்தால் மொத்தம் ஒரு லடசம் கி.மீ நீளத்திற்கு சேரும். அந்த நீளம் பூமத்திய ரேகையை நான்கு தடவை சுற்றிவரக்கூடும்.

மனிதன் மனமார சிரிக்கும் பொழுது 17 தசைகளும், கோபப்படும்பொழுது 43 தசைகளும் சுருக்கமடைகின்றன.

ஆதாரம்: வாழ்வியல் வலைத்தளம்