நகரத்து பெண்களை விட கிராமத்து பெண்கள் ஒரு சில கொள்கைகளில் உறுதியாக இருப்பார்கள். அதில் கணவன் சாப்பிட்டவுடன், சாப்பிடுவது என்பது இன்று வரை அவர்கள் கடைபிடித்து வரும் கொள்கையாகும்.

சில பெண்கள் வீட்டு வேலைகளை இழுத்துபோட்டு செய்து விட்டு சரியான நேரத்திற்கு சாப்பிட மாட்டார்கள். வீட்டு வேலை காரணமாக நேரம் தாண்டி விட்டால் அவ்வேளைக்குரிய உணவையே தவிர்த்து விடுவார்கள். இது பொதுவாக பல பெண்களின் குணமாகும்.

மூட்டுவலி ஏற்படக் காரணம்

நேரத்திற்கு உணவு அருந்தாமையாலும், நேரம் கழித்து உணவு அருந்துவதாலும் ஒரே நேரத்தில் அதிக உணவு உட்கொள்வதாலும் நீண்ட பட்டினி இருப்பதாலும், அஜீரணக் கோளாறு உண்டாகிறது.

இது போல் இரவில் அதிக காரம், புளித்த தயிர் போன்றவற்றை சேர்த்துக் கொள்வதாலும், சரியான நேரத்திற்க்கு சாப்பிடாமல் இருப்பதாலும், குடலில் உள்ள அபானவாயு சீற்றம் கொள்கிறது.

பொதுவாக அபான வாயு கீழ்நோக்கி பாயும் குணம் கொண்டதாகும். ஆனால் அது சீற்றம் கொள்ளும்போது மேல் நோக்கி பாய்ந்து சிரசை அடைகிறது.

அங்கிருந்து பின் கழுத்து வழியாக கீழ் இறங்கி உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் வேகமாகச் செல்கிறது. அப்போது கால் மூட்டுகளிலும், தசை நார்களிலும் செல்லும் வாய்வு அங்கேயே தங்கிவிடுகிறது.

இந்த வாய்வு நீராக மாறி நரம்புகளை உலரவைத்து நீர் கோர்க்கச் செய்கிறது. இவ்வாறு சேரும் நீரானது, வாத நீர், பித்தநீர் இரண்டுடன் கலந்து மூட்டுகளில் சளியாக மாறி மூட்டுகளை வீங்கச் செய்கிறது. இதனால் மூட்டுவலி ஏற்படுகிறது.

செய்ய வேண்டியவை

இது போல பிரச்சினைகளை தவிர்க்கவும் ஆரோக்கியமாக மூட்டு வலியின்றி வாழவும், பெண்கள் சரியான நேரத்திற்க்கு சாப்பிடவேண்டும். குறிப்பாக வயதான பெண்கள் மூட்டுவலியால் அதிகம் அவதிப்படுவர், இவர்கள் தகுந்த மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டு வீட்டில் சரியான நேரத்திற்கு சாப்பிட பழகிக் கொள்ளவேண்டும்.

வெறும் மருத்துவ சிகிச்சை மட்டும் முழுமையாக பலன் தராது. இது போல விஷயங்களில் பெண்கள் தங்களை மாற்றிகொண்டால் மட்டுமே மூட்டுவலி போன்ற நோய்களில் இருந்து முழுமையான நிவாரணம் கிடைக்கும்

ஆதாரம்: அரசு பொதுமருத்துவமனை, சென்னை