சீசனுக்கு ஏற்ற காய்கறிகள், பழங்கள் உட்கொள்வது உடலுக்கு ஊட்டம் தரும் என்று உணவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். பனிக்காலத்தில் இந்த காய்கறிகளை உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கிறது

அதிரடி ஆரஞ்சு

சிட்ரஸ் அமிலச்சத்து நிறைந்த பழங்கள் உடல் நலத்திற்கு ஏற்றது. இதில் உடலுக்குத் தேவையான வைட்டமின் சி சத்து நிறைந்தது. இதில் உள்ள பொட்டாசியம், போலேட், தாது உப்புகள், நார்ச்சத்து உடலுக்கு ஊட்டம் தரக்கூடியது.

ஊட்டம் தரும் ஆப்பிள்

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவர் தேவையில்லை என்பார்கள். அந்த அளவிற்கு பனிக்காலத்தில் ஆப்பிள் சாப்பிடுவது பயன்தரக்கூடியது. நொறுக்குத் தீனிக்கு பதிலாக ஆப்பிள் சாப்பிடுவது உடலுக்கு உற்சாகம் தரும்.

கண்ணுக்கு ஒளி தரும் காரட்

கிழங்கு வகை காயான காரட் உடலுக்கு ஏற்ற ஊட்டச்சத்துக்களை கொண்டது. கரோட்டின் சத்தும், வைட்டமின் ஏ சத்தும் அதிகம் கொண்டுள்ளது. மேலும் வைட்டமின் பி,சி,டி,ஈ மற்றும் கே போன்ற உயிர்சத்துக்கள் அதிகம் உள்ளன. கால்சியம் பெக்டேட் காரட்டில் அதிகம் உள்ளது. இது பனிக்காலத்தில் நோய் ஏற்படுவதை தடுக்கிறது.

கடுகு இலைகள்

பனிக் காலத்தில் கடுகு செடியில் இருந்து கிடைக்கும் இலைக்கள் மிகவும் சத்து நிறைந்ததாக உணவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர். பச்சை கடுகில் ஆண்டிஆக்ஸிடென்ட்கள் அதிகம் காணப்படுகின்றன. மேலும் வைட்டமின்கள், தாது உப்புகள், கரோட்டீன்கள் அதிகம் உள்ளன.

பச்சை பட்டாணி

பச்சைப்பட்டாணியை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது ஊட்டச்சத்தினை அதிகரிக்கும். இது வயிறு புற்றுநோயை குணப்படுத்தும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நார்ச்சத்து டர்னிப்

கிழங்குவகை காய்கறியான டர்னிப்பில் போலேட், நார்ச்சத்து, வைட்டமின்கள், தாது உப்புகள் அதிகம் உள்ளன. இந்த டர்னிப் வகை காய்கறியை பனிக் காலத்தில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்

பாலக்கீரை

சத்து நிறைந்த உணவாக கொண்டாடப்படும் பாலக்கீரையில் ப்ளேவனாய்டுகள் அதிகம் உள்ளன. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்டுகள் பனிக்காலத்தில் ஏற்படும் நோய்களை தடுக்கிறது.

வெந்தையக்கீரை

உடலுக்கு குளிர்ச்சி தரும் வெந்தயக்கீரையில் வைட்டமின்கள், தாது உப்புக்கள் அதிகம் உள்ளன. இது நார்ச்சத்து அதிகம் கொண்டது. இது உடலின் கொழுப்புச்சத்தை குறைக்க உதவுகிறது. இது நீரிழிவு நோயை குணப்படுகிறது. வெந்தைய சப்பாத்தி பனிக்காலத்திற்கு ஏற்ற உணவு.

முள்ளங்கி சாம்பார்

பனிக்காலத்தில் முள்ளங்கி சாம்பார் அதிகம் சேர்த்துக்கொள்வது உடலுக்கு ஏற்றது என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். இந்த காய்கறியில் பொட்டாசியம், போலிக் அமிலம் அதிகம் உள்ளது. இதனை சாலட் போலவும் சாப்பிடலாம்.

ஆதாரம்: பாட்டு ரசிகன் (பதிவர்)