எண்ணெய் குளியல் எண்ணெய் குளியல் காலை 6.30 - க்குள் தொடங்கி விட வேண்டும். இதமான வென்நீரில் தான் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். சீயக்காய் அல்லது நலுங்குமாவை பயன்படுத்தலாம். எளிமையான உணவுகள் உண்ண வேண்டும். எண்ணைக் குளியல் செய்த அன்று பாலுறவு கூடாது. பகலுறக்கம் கூடாது. கடுமையான வெய்யிலில் வேலை செய்யகூடாது. குளிர்ந்த உணவுகள் கண்டிப்பாக கூடாது. எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் நம்மைச் சுற்றிலும் ஒரு புகை வளையம் உருவாகின்றது என்பதை ஆய்வின் மூலம் கண்டுபிடித்திருக்கிறார்கள். இவ்வளையம் இருப்பதால் கோள்களிலிருந்து வரும் காந்த அலைகள் உடலுக்குள் நுழைய முடியாமல் போகின்றது. எண்ணெய் குளியல் செய்வதால் பலன்கள் உடற்சூடு சீராகும், அழகுகூடும், சருமம் மென்மைபெரும், ஐம்புலனுக்கும் நல்ல பலன் கிடைக்கும், தலை மயிர் நன்கு வளரும், நல்ல குரல் வளம் கிடைக்கும், எலும்புகள் பலப்படும். எண்ணெய் குளியல் நாள் அட்டவணை பெண்களும் எண்ணெய் குளிப்பும் ஞாயிறு குளித்தால் வடிவமும் அழகும் போய்விடும் திங்கள் குளித்தால் அதிகப் பொருள் சேரும் செவ்வாய் குளித்தால் துன்பம் வரும் புதன் குளித்தால் மிக புத்தி வந்திடும் வியாழன் குளித்தால் உயரறிவு போய்விடும் வெள்ளி குளித்தால் செல்வம் மிகும் சனி குளித்தால் ஆயுள் அதிகமாகும் ஆண்களும் எண்ணெய் குளிப்பும் திங்கட் கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் முடக்கு வாதம் வரும் செவ்வாய் கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் முதுகு கண்ட மாலை நோய் வரும் வியாழக்கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் கால் குடைச்சல் வரும் வெள்ளிகிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் முட வாதம் வரும் [இதனை ''அறப்பளீசுர சதகம்'' கூறுகிறது] இனி எண்ணெய் தேய்த்து குளிக்க முயலும் - அல்லது நினைக்கும் அன்பர்கள் சனி, புதன் நாட்களில் குளிக்கவும். நம் முன்னோர்கள் சனியையும், புதனையும் ஏன் தேர்தெடுத்தார்கள்? புதன் அறிவினையும், சனி ஆயுளையும் உடல் நலத்தினையும் தருவதாக உயர்வாக நினைத்தார்கள், மதித்தார்கள். எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது குளிர்ந்த நீரில் குளிக்கக் கூடாது. வெது வெதுப்பான சுடு நீரில் தான் குளிக்க வேண்டும். ஆதாரம்: உழவு ஆர்கானிக் சமூக வலைத்தளம்