உலக கல்லீரல் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 19 அன்று கொண்டாடப்படுகிறது. உங்கள் கல்லீரலை பற்றி அறிந்து கொள்ளுங்கள் உடல்நலம் மற்றும் முக்கிய உறுப்புகளைப் பற்றிக் கருத்தில் கொள்ளும்போது, இதயம், நுரையீரல் மற்றும் மூளை ஆகியவை முதலில் நினைவுக்கு வருகின்றன. கல்லீரல் உடலின் இரண்டாவது பெரிய உறுப்பாக இருந்தாலும், 500க்கும் மேற்பட்ட அத்தியாவசிய செயல்பாடுகளுக்குப் பொறுப்பாக இருந்தாலும், அது பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. கல்லீரல் முழு உடலுக்கும் வடிகட்டியாகச் செயல்படுகிறது. இது தீங்கு விளைவிக்கும் நச்சு பொருட்களை நீக்கி, நாம் உண்ணும் உணவுகளின் ஊட்டச்சத்துக்களை உடல் ஏர்க்கும் விதத்தில் உடைக்கிறது. ஆரோக்கியமான கல்லீரல் இல்லாமல் போனால், நச்சுகள் குவிந்து, ஊட்டச்சத்து ஏற்ப்பு குறைகிறது. மேலும் உடல் கூறு செயல்பாடு பலவீனமடைந்து, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. அழுத்தம் அல்லது பாதிக்கப்பட்ட கல்லீரல், அதன் பணிச்சுமையை முடிந்தவரை குறைப்பதன் மூலம் பயனடைகிறது. தொற்று, மரபியல் மற்றும் வாழ்க்கை முறை தேர்வுகள் உட்பட கல்லீரல் நோயை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு கூறுகள் உள்ளன. எந்த வயதிலும் கல்லீரல் பிரச்சனை ஏற்படலாம். 2025 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் 2025 ஆம் ஆண்டு உலக கல்லீரல் தினத்திற்கான கருப்பொருள் "உணவே மருந்து" என்பதாகும். சமச்சீர் ஊட்டச்சத்து கல்லீரல் ஆரோக்கியத்திற்கு ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். முழுமையான உணவுகள் (பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் புரதங்கள்) நிறைந்த ஒரு சமச்சீர் உணவு, நோயைத் தடுக்க உதவுகிறது மற்றும் கல்லீரல் செயல்பாட்டை ஆதரிக்கிறது. பலருக்கு, ஆரோக்கியமான உணவு எளிதில் கிடைக்கக்கூடியதாகவோ அல்லது மலிவு விலையிலோ இல்லை. கொள்கைகளும் வணிக தாக்கங்களும் உணவுச் சூழலை வடிவமைக்கின்றன. அரசாங்கங்கள் உணவு வழிகாட்டுதல்கள், உணவு லேபிளிங், சட்டங்கள், ஆரோக்கியமற்ற உணவுகள் மீதான வரிகள் மற்றும் பள்ளி உணவுத் திட்டங்கள் மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். இந்தக் காரணிகளில் பல, பெரும்பாலும் சாதாரண குடிமக்களின் கட்டுப்பாட்டில் இல்லை. ஆரோக்கியமான உணவுக்கு இந்த தடைகள் உள்ளன என்பதையும், ஆரோக்கியமான உணவு முறையை மிகவும் சவாலானதாக மாற்றக்கூடும் என்பதையும் அங்கீகரிப்பது முக்கியம். ஆரோக்கியமான கல்லீரலைப் பெறுவதற்கான குறிப்புகள் பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த சமச்சீரான உணவும், மெலிந்த புரதங்களும், கல்லீரலின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுகின்றன. அதே நேரத்தில் அதிகப்படியான சர்க்கரை மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் கல்லீரலை பாதிக்கும். பருமனான உடல் எடையில், 5-10% மட்டுமே எடை இழப்பு ஏற்ப்பட்டலும், கல்லீரலில் உள்ள கொழுப்பைக் கணிசமாகக் குறைத்து, கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்தும். குறிப்பிடத்தக்க சேதத்திற்குப் பிறகும், கல்லீரல் தன்னை மீண்டும் சரிசெய்துக்கொள்ளும் தனித்துவமான திறனைக் கொண்டுள்ளது. உணவை மேம்படுத்துதல் மற்றும் உடற்பயிற்சியை அதிகரித்தல் போன்ற ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் மூலம், கல்லீரல் மீண்டும் சாதாரணமாக செயல்பட உதவுகிறது. கல்லீரலின் எடையில் கொழுப்பு 5% க்கும் அதிகமாக இருந்தால், அது வீக்கம், வடுகள் மற்றும் புற்றுநோயை ஏற்படுத்தும். வளர்சிதை மாற்ற (Metabolism) செயலிழப்புடன் தொடர்புடைய ஸ்டீடோடிக் கல்லீரல் நோய் (Metabolic dysfunction–associated steatotic liver disease - MASLD) நீரிழிவு, உடல் பருமன் மற்றும் அதிக கொழுப்புடன் தொடர்புடையது. MASLD பெரும்பாலும் அதன் ஆரம்ப கட்டங்களில் எந்த அறிகுறியையும் காண்பிக்காது. சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் டிரான்ஸ்/நிறைவுற்ற கொழுப்புகள் அதிகம் உள்ள உணவுகள் கல்லீரலின் கொழுப்புகளைச் செரிமானுக்கும் திறனைக் குறைக்கும். இது கல்லீரலில் கொழுப்பு படிவதற்கும் கல்லீரல் நோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிப்பதற்கும் வழிவகுக்கும். வழக்கமான உணவு நேரங்களைப் பராமரிப்பது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் கல்லீரலில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கிறது. இரவில் தாமதமாக சாப்பிடுவது, காலை உணவைத் தவிர்ப்பது, ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே சாப்பிடுவது வளர்சிதை மாற்றக் கோளாறுகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். உணவு லேபிளிங் தகவலறிந்து, ஆரோக்கியமான தேர்வுகளைச் செய்ய பயனுள்ளதாக இருக்கும். உணவு லேபிள்கள் பொதுவாக பரிமாறும் அளவுகள், கலோரிகள், ஊட்டச்சத்துக்கள் போன்றவற்றைக் காண்பிக்கும். இந்தக் கூறுகளைப் புரிந்துகொள்வது உணவுத் தேவைகளை நிர்வகிக்கவும், அதிகப்படியான உட்கொள்ளுதுளை தவிர்க்கவும், ஆரோக்கியமான உணவுகளை தேர்வுசெய்யவும் உதவுகிறது. மூலம்: உலக கல்லீரல் தின வலைத்தளம்