காரணங்கள்

எளிதில் ஜீரணமாகாத உணவுப் பொருட்களை அளவிற்கு அதிகமாக உண்பது.

பட்டினி கிடப்பது.

குறிப்பிட்ட நேரத்தில் உணவு உட்கொள்ளாமல் நேரம் தவறி சாப்பிடுவது.

மிகச் சூடான பானங்களை அருந்துவது

சூடான உணவுப் பொருட்களை உண்பது.

காரமான மசாலா கலந்த உணவுகளை உண்பது

சத்தான உணவுவகைகளை அதிகமாக உணவில் சேர்க்காதது. குடலில் கிருமி உடையவர்கள்

மது அருந்துதல், புகை பிடித்தல், புகையிலை முதலியவைகளை அளவிற்கு அதிகமாக பயன்படுத்துதல்

கல், மண், தூசி மற்றும் கலப்படங்கள் கலந்த அசுத்தமான உணவுகளை உண்பது.

சில வகை மருந்துகளை வெகுகாலமாக மருத்துவரின் ஆலோசனையின்றி உண்பது மேலும் அதிக கவலை, மன அழுத்தம், கோபம் கொள்வது போன்றவைகளிலும் அல்சர் ஏற்படுகிறது.

உணவு முறை

காபி, டீ, போன்றவைகளை அருந்தக் கூடாது.

மது அருந்துதல், புகை பிடித்தலை அரவே விட வேண்டும்.

நேரம் தவறாமல் குறிப்பிட்ட நேரத்தில் உண்ண வேண்டும்.

உணவில் அதிகம் காரம் சேர்க்கக்கூடாது.

குறுகிய இடைவெளியில் அடிக்கடி மோர், இளநீர் ஏதாவது அருந்தலாம்.

உணவில் மணத்தக்காளிக் கீரை, அகத்திக் கீரை ஆகியவைகளை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

காய்கறிகளில் எளிதில் செரிக்கும் கத்தரிப்பிஞ்சு வெண்டைப்பிஞ்சு, வாழைப்பூ, வாழைத்தண்டு, புடலம் பிஞ்சு ஆகியவைகளை கூட்டு செய்து சாப்பிடலாம்.

எளிதில் செரிக்கும் வாழைப்பழம், ஆப்பிள் சாறு போன்றவைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஆதாரம்: இயற்கை வைத்தியம்