ஜிப்மரின் மருத்துவ நோய் எதிர்ப்பியல் துறை புதுச்சேரி ஜிப்மரின் மருத்துவ நோய் எதிர்ப்பியல் துறை (Department of Clinical Immunology, JIPMER) கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டோ இம்யூன் நோய் (Autoimmune disease) (உடலின் தன்னுடல் தாக்குநோய் ஆகும். இதில் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், தன்னைத்தானே எதிரியாகக் கருதி உடலின் ஆரோக்கியமான செல்களைத் தாக்கி அழிக்கிறது) கொண்ட நோயாளிகளுக்கு சிறப்பு மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது. இத்துறை, இவ்வகை சிக்கலான நோய்களுக்கு முழுமையான மருத்துவ சேவைகளை வழங்கும் இந்தியாவின் முன்னணி மையங்களில் ஒன்றாக வளர்ச்சி பெற்றுள்ளது. அதிநவீன மருத்துவ நோய் எதிர்ப்பு ஆய்வகம் புதுச்சேரி ஜிப்மரின் மருத்துவ நோய் எதிர்ப்பியல் துறையின் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், தற்போது அதிநவீன நோயறிதல் மற்றும் ஆராய்ச்சி வசதிகளுடன் புதிய மருத்துவ நோய் எதிர்ப்பு ஆய்வகம் (Clinical Immunology) நிறுவப்பட்டுள்ளது. இந்த வசதி புதுச்சேரி மட்டுமின்றி தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த நோயாளிகளுக்கும் பயனளிக்கும். ஆய்வகத்தின் சிறப்புகள் இந்த ஆய்வகத்தில் பல்வேறு அதிநவீன நோயறிதல் தொழில்நுட்பங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. ஆட்டோ இம்யூன் நோய்களைக் கண்டறிவதற்கான ELISA, Nephelometry மற்றும் Immunoblot உள்ளிட்ட கருவிகளுடன் கூடிய தனித்துவமான நோயறிதல் பிரிவு இதில் அமைந்துள்ளது. மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286798®=6&lang=11 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்