கடந்த சில ஆண்டுகளாக யோகக் கலை உலகளவில் மக்களிடையே பிரபலம் அடைந்துள்ளது. யோகக்கலையில் சிறப்பாக செயல்பட்டதை அங்கீகரிக்கும் வகையிலும், இத்துறையில் விரிவான பங்கேற்பு, புதுமை கண்டுபிடிப்பு, தலைமைத்துவம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையிலும் ஆண்டுதோறும் யோகா விருதுகள் வழங்கப்படுகின்றன. யோகாவுக்கு சிறந்த பங்களிப்பை வழங்குபவர்களை கவுரவிப்பதை உறுதி செய்வதற்காக, இந்திய பிரதமர், 2016 ஆம் ஆண்டு சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, யோகாவை மேம்படுத்துவதற்கும் விருதுகளை அறிவித்தார். ஆயுஷ் அமைச்சகம் பிரதமரின் யோகா விருதுகளை நிறுவியுள்ளது. சர்வதேச யோகா தினத்தன்று (21 ஜூன்) விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. விருதுகளின் வகைகள் யோகாக்கான பிரதமரின் விருதுகள்-தனிநபர்கள் (தேசிய/சர்வதேச): 2 விருதுகள். யோகாக்கான பிரதமரின் விருதுகள்- நிறுவனங்கள் (தேசிய/சர்வதேச): 2 விருதுகள். விருது ஒவ்வொரு விருதுடனும் கோப்பை, சான்றிதழ், ரூபாய் 25 லட்சம் ரொக்கம் வழங்கப்படும். விண்ணப்பிக்க தகுதி இந்த விருதுகளுக்கான விண்ணப்பதாரர்கள்/பரிந்துரைக்கப்பட்டவர்கள் யோகா பற்றிய சிறந்த அனுபவத்தையும் ஆழமான புரிதலையும் கொண்டிருக்க வேண்டும். தேசிய மற்றும் சர்வதேச அளவில் தனிநபர் பிரிவின் கீழ் விண்ணப்பதாரர்/நியமனதாரரின் குறைந்தபட்ச தகுதியான வயது 30 ஆகும். குறைந்தபட்சம் 10 (பத்து) ஆண்டுகள் சேவையில், யோகாவின் ஊக்குவிப்பு மற்றும் வளர்ச்சிக்கு சிறந்த பங்களிப்பு அளித்திருக்க வெண்டும். ஒரு விண்ணப்பதாரர் ஒரு குறிப்பிட்ட ஆண்டில், தேசிய விருது அல்லது சர்வதேச விருது என ஒரு பிரிவுக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை இந்த விருதுக்கான நடைமுறைகள் தேசிய விருதுகள் இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன. விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக மட்டுமே அனுப்பப்பட வேண்டும். ஆர்வமுள்ள தனிநபர் மற்றும் அமைப்புகள் விண்ணப்ப நடைமுறை மற்றும் பங்கேற்பைப் பற்றி தேசிய விருதுகள் இணையப் பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் நேரடியாக விண்ணப்பிக்கலாம் அல்லது யோகா துறையில் பிரபலமான தனிநபர் அல்லது அமைப்பு பரிந்துரை செய்யலாம். விண்ணப்ப சமர்ப்பிப்பு தொடக்கம்: பிப்ரவரி 21, 2026 சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 21 மார்ச், 2026