அறிமுகம்

கவலையும் பதட்டமும் நிறைந்த ஓர் விரும்பத்தகாத மனநிலையே மனவுளைச்சல் ஆகும். பொதுவாக பயவுணர்வும் கவலையுமே அதன் அம்சங்கள். மனவுளைவுக் கோளாறு ஒருவருக்கு அழிவை விளைவிக்கும். இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இறுதியில் மனவழுத்தம் கொண்டவர்களாக மாறுவார்கள்.

சில எச்சரிக்கும் அறிகுறிகளாவன:

கடுமையான அச்சம் அல்லது பயவுணர்வு

அமைதியின்மை

எளிதாகக் களைப்படைதல்

இடையூறுள்ள தூக்கம்

எடை மற்றும் பசி எடுத்தலில் கோளாறுகள்

நோயறிகுறிகள்

நோயறிகுறிகளில் அடங்கும் சில :

களைப்பு

வாய் உலர்தல்

வயிற்றுக் கோளாறுகள்

தூக்கக் கோளாறும் தலைவலியும்

தசை விறைப்பும் வலியும்

விழுங்குவதில் கடினம்

நடுக்கமும் எரிச்சல் உணர்வும்

தசை வலிப்பு

வியர்வையும் உடல் சூடாதலும்

காரணங்கள்

மனவுளைச்சலுக்கான சரியான காரணம் இதுவரை அறியப்படவில்லை.

மூளையில் உள்ள சில வேதிப்பொருட்கள் சமநிலை இழப்பதாலேயே மனவுளைச்சல் கோளாறு உண்டாகிறது என்று சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இவ்வேதியற் பொருட்கள் நரம்புக்கடத்திகள் எனப்படும்.

மனவுளைச்சலின் பிற காரணங்கள் வருமாறு:

புதிய வேலை, திருமணம், மகப்பேறு, பிரிவு போன்ற மாற்றங்களின் காரணமாகப் பலருக்கு மனவுளைச்சல் ஏற்படுகிறது.

ஆஸ்துமாவுக்காக உள்ளுறிஞ்சும் மருந்துகள், தைராய்ட் மருந்துகள், உணவுக்கட்டுப்பட்டு மாத்திரைகள் போன்ற சில மருந்துகளும் மனவுளைச்சலை உண்டாக்கலாம்.

காஃபைன், மது, புகையிலைப் பொருட்களும் மனவுளைச்சலை ஏற்படுத்தும்.

நோய் கண்டறிதல்

குறிகளும் அறிகுறிகளும் கொண்டு இதனைக் கண்டறியலாம். உளவியல் மதிப்பாய்வும் உதவும்.

நோய் மேலாண்மை

மனவுளைச்சலுக்கு உளவியல் முறைப்படி அல்லது மருந்துகளால் அல்லது இரண்டு வகையிலும் மருத்துவம் அளிக்க முடியும்.

உளவியல் சிகிச்சை: அறிவாற்றல் நடத்தை சிகிச்சை எனப்படும் இம்முறை மனவுளைச்சலுக்கு மருத்துவம் அளிக்கப் பயன்படுகிறது. இது ஒருவருக்குப் பல வழிகளில் சிந்திக்கவும், நடந்து கொள்ளவும், சூழ்நிலைகளுக்கு ஏற்ப செயல்படவும், மனவுளைச்சலையும் கவலையையும் குறைக்கவும் உதவுகிறது.

மருந்து: சில வேளைகளில் மருத்துவர்கள் மனவுளைச்சலுக்கு மருந்துகளையும் பரிந்துரைக்கின்றனர். இரு வகையான மருந்துகள் உண்டு: மனவுளைச்சலுக்கு எதிர்மருந்துகள் மற்றும் மனவழுத்தத்திற்கு எதிர்மருந்து. எதிர்மனவுளைச்சல் மருந்துகள் ஆற்றல் வாய்ந்தவை. அவற்றில் பல வகை உண்டு. சில உடனடியாக செயல்படும். ஆனால் அவைகளை நீண்ட காலத்திற்கு உட்கொள்ளக் கூடாது.

எதிர்மனவழுத்த மருந்துகள் மனவுளைச்சலுக்கும் உதவுகின்றன. அவைகள் செயல்படத் தொடங்க பல வாரங்கள் எடுத்துக்கொள்ளும். தலைவலி, குமட்டல் அல்லது தூக்க பாதிப்பு ஆகிய பக்கவிளைவுகள் ஏற்படலாம்.

எதிர்மனவழுத்த மருந்துகள் பலருக்கு பாதுகாப்பானதும் பயனளிப்பதுவுமாக இருந்தாலும் சிலருக்கு, குறிப்பாக குழந்தைகள், இளம்வயதினர் ஆகியோருக்கு ஆபத்தானவையாகும். மருத்துவரின் பரிந்துரையின் பேரிலேயே இவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

தடுப்புமுறை

இன்றைய வாழ்க்கையில் அனைவருமே மனவழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். யோகா, தியானம், விளையாட்டுகள், இசை போன்றவற்றில் ஈடுபட்டு மனவழுத்தத்தில் இருந்து விடுபட வேண்டும்.

மேலும், ஓய்வு நேரங்களில் பொழுதுபோக்கு வேலைகளில் ஈடுபடலாம்.

ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்