மனநல நோய்களின் அறிகுறிகள் யாவை?

சமூக நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளை ஒப்பிட்டு, சிந்தனை, மனநிலை, செயல்பாடு ஆகியவற்றில் தடுமாற்றம் இருக்கும் நிலை மனநோய் என அழைக்கப்படுகிறது. பெரும்பாலானவர்களில் இத்தகைய அறிகுறிகள் மனஅழுத்தம் மற்றும் தனிநபர் செயல்பாட்டு குறைபாடுகளுடன் சேர்ந்தே காணப்படும்.

காரணவியலில் ஏற்படும் குறைபாடுகள்

கவனம் செலுத்துவதில் சிரமம், எளிதாக கவனம் சிதறுதல்.

தகவல்களை ஞாபகத்தில் வைத்திருக்க இயலாமை.

தகவல்களை ஆய்வதில் சிரமம் அல்லது தாமதம்.

பிரச்சினைகளை தீர்க்க அதிக முயற்சி தேவைப்படுதல்.

கோர்வையாக சிந்திக்க இயலாமை.

சிந்தனையில் ஏற்படும் குறைபாடுகள்

எண்ணங்கள் வேகமாக அல்லது மிகவும் மெதுவாக் இருப்பதாக உணர்தல்.

தேவையில்லாமல் எண்ணங்கள் ஒரு இடத்திலிருந்து பிற இடங்களுக்கு தாவுதல்.

வழக்கில் இல்லாத வார்த்தைகள் அல்லது ஒலிகளை பயன்படுத்துதல்.

செயல்படுத்த முடியாத எண்ணங்கள், வெளிக்காரணிகளால் ஏற்படுத்தப்படும் செயல்பாடுகள்.

பார்வையில் ஏற்படும் குறைபாடுகள்

பார்வையில் தடுமாற்றம்: மிகவும் பிரகாசமான வண்ணங்கள் அல்லது அதிக ஒலி ஆகியவற்றை உணர்தல்.

இல்லாத ஒலிகளை கேட்பது, அருகில யாருமில்லாத போதும் பேசுவது அல்லது சிரிப்பது.

பழகிய சூழ்நிலைகளையும் புதிதாக உணர்வது.

தொலைக்காட்சி, வானொலி அல்லது போக்குவரத்தில் மறைமுக செய்திகள் இருப்பதாக கருதுவது.

உணர்வுகளில் ஏற்படும் குறைபாடுகள்

உபயோகமற்றவராக, நம்பிக்கை இழந்து, பயனற்று இருப்பதாக உணர்தல்.

சிறு விசயங்களுக்கும் தாழ்வு மனப்பான்மை அடைதல்.

மரணம் அல்லது தற்கொலை தொடர்பான எண்ணங்கள்.

பொதுவான அம்சங்களில் ஆர்வம் அல்லது மகிழ்ச்சி இழத்தல்.

தன் திறமைகள், செல்வம் மற்றும் தோற்றம் தொடர்பான உயரிய எண்ண்ங்கள் கொள்வது.

அதீத ஊக்கம், குறைவான தூக்கம்.

எரிச்சல் மனப்பான்மை, எளிதில் கோபமடைதல்.

வெளித்தூண்டுதல் இல்லாமலே அதீத எண்ண மாற்றங்கள்.

அதீத ஆர்வம், அதிக நம்பிக்கை, பிறரை தொந்தரவு செய்தல்.

எப்போதும் அதீத கவனமுடன் இருத்தல்.

ஆர்வக்கோளாறு, பயம், அனைத்தை பற்றியும் கவலை.

பயம் காரணமாக பொதுவான நடவடிக்கைகளை (உதாரணமாக பேருந்தில் பயணம் செய்வது, மளிகை சாமான் வாங்குவது) தவிர்ப்பது.

மக்கள் மத்தியில் சங்கோஜமாக உணர்வது.

திரும்பத்திரும்ப ஒரு காரியத்தைச் செய்வது.

கவலையளிக்கும்படியான கடந்த கால நினைவுகள், கெட்ட கனவுகள்.

பிறருடன் பழகுவதில் ஏற்படும் குறைபாடுகள்

வெகு சில நெருங்கிய நண்பர்கள் மட்டுமே இருத்தல்.

சமூக சூழ்நிலைகளில் பதட்டம் மற்றும் பயம்.

வார்த்தைகள் அல்லது செயல்களில் வன்முறை.

அதீதமான குறைகள் அல்லது மிகவும் நேர்மை போன்ற கலந்தமைந்த குணம்.

சேர்ந்து இருப்பதற்கு சிரமமானவர்கள்.

பிற மக்களை புரிந்து கொள்ளாமை.

அதீத சந்தேகங்கள்.

செயல்பாட்டில் ஏற்படும் குறைபாடுகள்

வேலையை விட்டு அடிக்கடி வெளியேறுதல் அல்லது வெளியேற்றப்படுதல்.

வழக்கமான சூழ்நிலைகளிலும் எளிதாக கோபப்படுதல் அல்லது எரிச்சலடைதல்.

வேலை, பள்ளி, வீடு ஆகிய இடங்களில் மற்றவர்களுடன் ஒத்து போகாதது.

கவனம் செலுத்துவது மற்றும் வேலை செய்வதில் சிரமம்.

வீட்டில் ஏற்படும் குறைபாடுகள்

பிறருக்கு உதவி செய்ய இயலாமை.

அன்றாட வீட்டுச் செயல்களில் பதற்றம்.

வீட்டு வேலைகளை செய்ய இயலாமை.

சர்ச்சை மற்றும் சண்டைகளை நெரடியாக அல்லது மறைமுகமாக தூண்டுதல்.

தன் கவனத்தில் ஏற்படும் குறைபாடுகள்

தூய்மை மற்றும் தோற்றத்தில் கவனமின்மை.

குறைவாக அல்லது மிக அதிகமாக உண்பது.

குறைவாக அல்லது மிக அதிகமாக தூங்குதல், பகல் தூக்கம்.

உடல் நலத்தில் குறைவான கவனம் அல்லது கவனமின்மை.

உடல் அறிகுறிகளில் ஏற்படும் குறைபாடுகள்

விளக்க முடியாத, தொடர்ச்சியான உடல் அறிகுறிகள்.

அடிக்கடி தலைவலி, உடல்வலி, முதுகு வலி, கழுத்து வலி.

ஒரே நேரத்தில் பலவித உடல் உபாதைகள்.

பழக்கவழக்கங்களில் ஏற்படும் குறைபாடுகள்

கட்டுப்பாடில்லாத, இடையூறு ஏற்படுத்தும் செயல்பாடுகள்

போதைப்பொருட்கள், மது பயன்படுத்துதல்

தனக்குத்தானே நெருப்பு வைத்துக்கொள்ள விரும்புவது

கட்டுப்பாடில்லாத சூதாட்டம்

கட்டுப்பாடில்லாமல் பொருள் வாங்குதல்

குழந்தைகளிடம் ஏற்படும் குறைபாடுகள்

போதைப்பொருட்கள், மது பயன்படுத்துதல்

அன்றாட பிரச்சினைகளை சமாளிக்க இயலாமை

தூக்கம் மற்றும் உணவில் மாற்றங்கள்

உடல் உபாதைகள் பற்றிய அதிகபட்சமான புகார்கள்

சட்டத்தை மதியாமை, பள்ளிக்கு செல்லாமை, திருடுதல், பொருட்களை உடைத்தல்

உடல் எடை கூடுவது பற்றிய அதீத பயம்

எப்போதும் எதிமறையான சிந்தனை, குறைவான பசி, மரணபயம்

அடிக்கடி கோபப்படுதல்

பள்ளி செயல்பாடுகளில் குறைபாடு

அதிக முயற்சி செய்தாலும் குறைவான மதிப்பெண்கள்

அதீத கவலை, பதற்றம்

அதீத செயல்பாடுகள்

தொடரும் பயங்கரக் கனவுகள்.

கேள்வி பதில்

மனநல ஆரோக்கியம் என்றால் என்ன?

மனநல ஆரோக்கியம் என்பது மனநலப் பிரச்சனைகள் இல்லாமல் இருப்பது மட்டுமல்ல, இது நமது வாழ்வின் பல்வேறு விஷயங்களை உள்ளடக்கியதாகும். அவற்றுள் சில :

நம்மைப் பற்றி நாம் எப்படி உணர்கிறோம்

மற்றவர்களைப் பற்றி நாம் எப்படி உணர்கிறோம்

வாழ்க்கையின் தேவைகளை நாம் எப்படி சந்திக்கின்றோம்.

மனநல ரீதியாக எப்படி ஆரோக்கியமாக இருப்பது?

உங்கள் வாழ்வில் மனநல ரீதியாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் ஒருசில இலக்குகளை நோக்கி நீங்கள் செல்ல வேண்டும் என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள். அவையாதெனில்,

நான் சந்தோஷமாக இருக்க விரும்புகிறேன்

நான் எனது வாழ்வில் கவலையை அகற்ற விரும்புகிறேன்

எனது ஒவ்வொரு நாளும் எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லாமல் அமைதியாக போக வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.