அறிமுகம்

சிறு, பெருங்குடல்களின் அழற்சியே குடல் அழற்சி நோய் என அழைக்கப்படுகிறது. கிரோன் நோயும், பெருங்குடல் அழற்சிப் புண்ணுமே இந்நோயின் இரு பெரும் வகைகள்.

பெருங்குடல் அழற்சிப்புண் என்பது செரிமானப் பாதையின் ஓர் நீடித்த அழற்சியாகும். போகப்போக அறிகுறிகள் வெளிப்படும். பொதுவாக பெருங்குடல் மலக்குடல்களின் உட்புறப் படலத்தை இது பாதிக்கிறது. பெருங்குடலின் தொடர்ந்த நீட்சியாலேயே இது உண்டாகிறது.

கிரோன் நோய் என்பது செரிமானப் பாதையில் அழற்சியை ஏற்படுத்தி திசுக்களுக்குள் ஆழமாகச் சென்று பாதிக்கிறது. இதனால் வயிற்றுவலி, கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் சத்துணவின்மையும் உண்டாகும். கிரோன் நோயால் ஏற்படும் அழற்சி செரிமானப் பாதையின் பல இடங்களில் பலருக்கும் பல மாதிரி ஏற்படலாம்.

எலும்புப்புரத பெருங்குடல் அழற்சியும் நிணநீர்க்கல பெருங்குடல் அழற்சியும் பெருங்குடல் அழற்சி என்றே கருதப்படுகின்றன. ஆனால் பொதுவாக அவை பெருங்குடல் அழற்சியில் இருந்து வேறுபடுத்திப் பார்க்கப்படுகிறது.

நோயறிகுறிகள்

கிரோன் நோய் மற்றும் பெருங்குடல் அழற்சிப்புண் ஆகிய இரண்டுக்கும் முக்கிய அறிகுறிகள் ஒன்று போலவே இருக்கும்.

அவையாவன:

வயிற்றுவலி — பெருங்குடல் அழற்சிப்புண்ணை விட பெரும்பாலும் கிரோன் நோயிலேயே இது காணப்படுகிறது

மலங்கழித்தலில் மாற்றம் — நெருக்கும் அல்லது இரத்தத்துடன் வயிற்றுப்போக்கு அல்லது சிலசமயம் மலச்சிக்கல்

எடை இழப்பு

அதிகக் களைப்பு

காரணங்கள்

கிரோன் நோய் மற்றும் பெருங்குடல் அழற்சிப்புண் ஆகியவற்றின் சரியான காரணங்கள் தெரியவில்லை.

மரபியல் : குடல் அழற்சிப் நோய் மரபியலுடனும் சிற்சில அழுத்தங்களுடனும் தொடர்புடையது. தற்காப்புக்கும் தன்தடுப்பாற்றலுக்கும் வலிமையான தொடர்பு உள்ளது. அழற்சிக்கும் தொற்றுக்கும் இடையில் உள்ள மரபியல் தொடர்பைப் பராமரிப்பதில் இதற்குரிய பங்கை இது சுட்டிக்காட்டுகிறது.

நோய்கண்டறிதல்

நோய் கண்டறிய கீழ்வரும் சோதனைகளும் முறைகளும் பயன்படுத்தப்படுகின்றன:

இரத்தப் பரிசோதனை

சில எதிர்பொருட்களைக் கண்டறிய இரத்தப் பரிசோதனை நடத்தப்படுகிறது. சில வேளை இதனால் குடல் அழற்சி நோயின் வகையைக் கண்டறியலாம். ஆயினும் இதன் மூலம் உறுதியாக நோயறிதல் இயலாது.

பெருங்குடல் அகநோக்கல்

மெல்லிய, வளையும், ஒளிரும் ஒரு குழாயில் பொருத்தப்பட்ட புகைப்படக்கருவி மூலம் பெருங்குடலின் உட்பகுதி நோக்கப்படுகிறது. அப்போது ஆய்வகச் சோதனைக்காக திசு மாதிரிகளும் எடுக்கப்படுகின்றன. இதன்மூலம் கண்டறியப்பட்ட நோய் உறுதி செய்யப்படும்.

எக்ஸ்-கதிர்

நோயறிகுறிகள் கடுமையாக இருந்தால், பெருங்குடல் நச்சு அல்லது ஒட்டை இருக்கின்றனவா என்பதைக் கண்டறிய வயிற்றுப் பகுதியின் எக்ஸ்-கதிர் படம் எடுக்கப்படுகிறது.

நெகிழ்வு வளைகுடல் அகநோக்கு

ஒல்லியான, நெகிழ்வான, ஒளியுடன் கூடிய ஒரு குழாயைப் பயன்படுத்தி மருத்துவர் பெருங்குடலின் இறுதிப் பகுதியை ஆராய்கிறார்.

பேரியம் சோதனை

இச்சோதனை மூலம் முழுப்பெருங்குடலின் எக்ஸ்-கதிர் படம் எடுக்கப்படுகிறது. பேரியம் கரைசல் குடலுக்குள் செலுத்தப்படுகிறது. சில வேளைகளில் காற்றும் சேர்க்கப்படுகிறது. மலக்குடல், பெருங்குடல், சிறுகுடலின் சில பகுதிகள் நிழல் பிம்பமாக கிடைக்கின்றன. இச்சோதனை அபூர்வமாக ஆபத்து விளைவிப்பதாகும். பெருங்குடலை விரிவாக்கி பேரியத்தைப் பூசுவதற்காக அளிக்கப்படும் அழுத்தத்தின் காரணமாக குடல் கிழிவதற்கும் சாத்தியக் கூறு உண்டு.

கணினி வரைவி ஊடுகதிர்

பெருங்குடல் அழற்சிப்புண் அல்லது சிறுகுடல் அழற்சி இருப்பதாக மருத்துவர் சந்தேகம் அடைந்தால் வயிறு அல்லது இடுப்புப் பகுதியின் சி.டி.ஸ்கேன் எடுக்கப்படுகிறது. இது கிரோன் நோயின் அறிகுறியாகும். இச்சோதனையின் மூலம் பெருங்குடலின் எவ்வளவு பகுதி பாதிக்கப்பட்டுள்ளது எனவும் அறியலாம்.

மல மாதிரி: மலத்தில் வெள்ளையணுக்கள் இருந்தால் அது அழற்சியைக் காட்டுகிறது. பெருங்குடல் அழற்சி நோயாகவும் இருக்கலாம். பாக்டீரியா, வைரஸ், பாரசைட்டுகளால் உண்டான நோயா என அறிய மலப் பரிசோதனை அவசியம்.

காந்த அதிர்வு பிம்பம்

ஓர் எம்.ஆர்.ஐ. ஸ்கேனர் காந்தப் புலத்தையும் வானொலி அலைகளையும் பயன்படுத்தி உறுப்புகள் மற்றும் திசுக்களின் விவரமான பிம்பத்தை உண்டாக்குகிறது. பெரும்பாலான வருடிகள் (ஸ்கேனர்கள்) பெரிய குழாய் போன்ற காந்தங்கள் ஆகும். இச்சோதனையின் போது நோயாளி ஒரு நகரும் படுக்கையில் எம்.ஆர்.ஐ. இயந்திரத்துக்குள் படுக்க வைக்கப்படுகிறார். கிரோன் நோயைக் கண்டறிவதில் இதன் பயன்பாடு அதிகம். இதில் கதிர்வீச்சு இல்லை என்பது ஒரு நன்மை ஆகும். ஆசனவாய்ப் பகுதி அல்லது சிறுகுடலில் உள்ள புண்புரையை ஆராய இது குறிப்பாக பயன்படுகிறது.

பொதியுறை அகநோக்கல்

கிரோன் நோயின் அறிகுறிகள் இருந்தும் பிற சோதனைகள் அதை உறுதிப்படுத்த வில்லை என்றால் மருத்துவர் பொதியுரை அகநோக்கல் (காப்ஸ்யூல் எண்டோஸ்கோப்பி) முறையைக் கையாளுகிறார். இதில் நோயாளி ஒரு நுண் புகைபடக்கருவி கொண்ட பொதியுறையை விழுங்குவார். இதன் மூலம் செரிமானப் பாதையின் படம் எடுக்கப்பட்டு ஒரு கணினிக்கு அனுப்பப்படுகிறது. இப்படத்தின் மூலம் மருத்துவர் கிரோன் நோய் அறிகுறிகளைப் பரிசோதிப்பார். செரிமான மண்டலத்தில் பயணம் செய்து புகைப்படக் கருவி வலி எதுவும் தராமல் மலம் மூலமாக வெளியேறும்.

இரட்டை பலூன் அகநோக்கல்

நடைமுறையில் உள்ள அகநோக்கு எட்ட முடியாத இடத்தை அடைய நீளமான அகநோக்குமானி பயன்படுத்தப்படும். பொதியுறை அகநோக்கு சோதனையில் அசாதாரணமான நிலைகள் காணப்பட்டு கண்டறிதல் தெளிவாக இல்லை என்றால் இது பயன்படுத்தப்படும். இதன் மூலம் எட்ட முடியாத இடங்களிலும் திசுசோதனை செய்ய முடிகிறது. இது தனித்திறம் கொண்ட அகநோக்கு மையங்களில் பொதுவாக நடத்தப்படும். பெருங்குடல் அழற்சி நோய் இருப்பதாக ஒருவர் சந்தேகப்பட்டால் கண்டறியவும் மருத்துவத்திற்காகவும் மருத்துவரை அணுகவேண்டும்.

சிகிச்சை

சமநிலையான ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும்.

மருந்து: சல்பாசலசைன் (Sulfasalazine -Azulfidine) போன்ற எதிர் அழற்சி மருந்துகள் மூலம் நோயின் கொடூரம் கட்டுப்படுத்தப்பட்டு பராமரிப்பு மருந்தாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இவை பல வருடங்களாக கிரோன் நோய்க்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அறுவை:

குடல் அறுவை

ஸ்டிரிக்சர் பிளாஸ்டி

தற்காலிகமான அல்லது நிரந்தர கடைச்சிறுகுடல் துளைப்பு

பெருங்குடல் அழற்சி நோய் இருப்பதாக ஒருவர் சந்தேகப்பட்டால் கண்டறியவும் மருத்துவத்திற்காகவும் மருத்துவரை அணுகவேண்டும்.

ஆதாரம் :தேசிய சுகாதார இணையதளம்