அறிமுகம்

புற்றுநோய் சிகிச்சை முறையின் மூன்று வித நிபுணர்களும் (மருந்தியல், கதிரியக்கம் மற்றும் அறுவை சிசிச்சை) கலந்து ஆலோசித்து ஒரு நோயாளிக்கு சிகிச்சை முறையினை முடிவு செய்வதுதான் கூட்டு குழும சிகிச்சை எனப்படும். இம்முறையே உலகின் தலைசிறந்த மருத்துமனைகளில் பின்பற்றப்படுகிறது.

நோயாளிகளுக்கு கிடைக்கும் பயன்கள்

உலகத்தரம் வாய்ந்த முன்னனி சிகிச்சை முறையின்படி ஒரு மிகச்சரியான, சிறந்த சிகிச்சை முடிவினை பெறலாம்.

புற்றுநோய் சிகிச்சை முறையின் மூன்று வித நிபுணர்களின் ஒருமித்த கருத்தை ஒரே இடத்தில் பெறுவதால் நேரம், பணம், அலைச்சல் மிச்சமாவதோடு மிகச்சிறந்த சிகிச்சை முடிவினை அறிந்துகொள்ளலாம்.

ஒவ்வொரு சிகிச்சை நிபுணரின் கருத்தை விட, அவர்களின் ஒருமித்த கருத்து மிகச்சிறந்த பலனை தருவதாக அமையும்.

நவீன மருத்துவத்தின்படி, கூட்டுக்குழுமத்தின் (Tumour Board) வரையறுக்கப்பட்ட சிகிச்சையே ஒரு தனி நிபுணர் தரும் சிகிச்சையை விட மேலானதும் மற்றும் சரியானதும் ஆகும்.

ஆதாரம் : ஹர்ஷமித்ரா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம், திருச்சி