எச்.ஐ.வி / எய்ட்ஸ் சமூகத்தில் பன்னெடுகாலமாக உற்று நோக்கினால் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு நோய்கள் மனித சமூகத்திற்க்கு அச்சுறுத்தலாகவே இருந்து வந்துள்ளது. அம்மை, காலரா, பிளேக், தொழுநோய் என பட்டியலிடலாம். அந்த வரிசையில்தான் எச்.ஐ.வி /எய்ட்ஸ் மனித சமூகத்திற்கு அச்சுறுத்தலாகவும், சவாலாகவும் உள்ளது எச்.ஐ.வி என்றால் என்ன? HUMAN IMMUNO DEFICIENCY VIRUS என்பதைத்தான் சுருக்கமாக எச்.ஐ.வி எனக் கூறுகிறோம். அதாவது, மனித உடலில் உள்ள நோயெதிர்ப்பு சக்தியை குறைத்திடும் வைரஸ் கிருமி உள்ள நபரையே எச்.ஐ.வி தொற்றுள்ள நபர் என்கிறோம். நமது உடலில் இயற்கயாகவே ரத்தத்தில் நோயை எதிர்க்கும் வெள்ளை அணுக்கள் உள்ளது. நோய் வராமல் தடுப்பது வெள்ளை அணுக்களின் பணியே. நோய்கிருமிகள் நமது உடலின் எந்த பகுதியிலாவது நுழைந்து விட்டால், வெள்ளை அணுக்கள் ஒன்று திரண்டு நோயை உருவாக்கும் நோய்க்கிருமிகளை போராடி அழித்து நம்மை நோயிலிருந்து காக்கும். ஆனால் எச்.ஐ.வி கிருமியானது நமது விந்து / ரத்தம்/ நிணநீர் வழிபாக உள்ளே நுழையும் போது வெள்ளை அணுக்களைப் போல, தன்னை மாற்றி உள்ளே நுழைந்து வெள்ளை அணுக்களை அழிக்கத்துவங்கி விடுகிறது. வெள்ளை அணுக்களை அழிக்கத்துவங்கும் போது உடலில் எவ்வித அறிகுறிகளும் தெரிவதில்லை. வெள்ளை அணுக்கள் குறைவதால் மெல்ல மெல்ல உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைந்து பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைந்து விடுகிறது.இந்த நிலையில் பல நோய்கள் உடலின் உள்ளே புகுந்து உடலை பலவீனப்படுத்துகிறது பல நோய்களின் கூட்டு தொகுப்பையே எய்ட்ஸ் என்கிறோம் .உடலில் வைரஸ் கிருமிகள் இருக்கும் நிலையினையே எச்.ஐ.வி நிலை என்கிறோம். தொற்றில்லாத நபருடன் பாதுகாப்பில்லாமல் உடலுறவு கொள்ளும் போது எச்.ஐ.வி யை இவரால் பரப்ப முடியும். எச்.ஐ.வி உடலில் உள்ளது என்பதற்கு எவ்வித அறிகுறியும் தெறிவதில்லை. பிறரைப் போலவே இளம் வயதாக இருக்கலாம் அழகாக இருக்கலாம். ஆனாலும் அவர் கிருமிகளுடன் வாழ்பவர் ஆவர்.இந்த நிலையே எச்.ஐ.வி நிலை எய்ட்ஸ் இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை, எச்.ஐ.வி நோய்கிருமி படிப்படியாக கொன்று நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்துவிடுகின்றன. வெள்ளை அணுக்களை எச்.ஐ.வி கிருமிகள் கொல்வதால், நோயெதிர்ப்பு சக்தி குறைந்து பல்வேறு நோய்கள் ஏற்படக் காரணமாகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நிலையில் பல்வேறு நோய்களின் தாக்கதிற்கு உட்பட்ட இறுதி நிலையே எய்ட்ஸ் ஆகும். இந்த நிலை ஏற்பட 6 முதல் 12 ஆண்டுகள் ஆகும். A – அக்குயிர்ட் - தேடிப் பெற்றது. I – இம்யூன் – உடலின் பாதுகாப்பு சக்தியை அழித்தல். D – டெபிஸியன்ஸி – நோயெதிர்ப்பு சக்தி முழுவதுமாக அழித்துநோய் உடலை முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்கிறது. S – சின்ரோம் - பல்வேறு நோய்களின் தொகுப்பு. உடலில் கிருமிகள் உட்புகுந்தவுடன் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் வெள்ளை அணுக்களை அழிப்பதால்,எதிர்ப்பு சக்தி குறைய ஆரம்பிக்கும். எதிர்ப்பு சக்தி குறைய ஆரம்பிக்கும் சந்தர்ப்பத்தில் வரக்கூடிய நோய்களை சந்தர்ப்பவாத நோய்கள் என்கிரோம். சந்தர்ப்பவாத நோய்கள் – அறிகுறிகள் டி. பி - காச நோய் சளி உடலில் எடை குறைதல் மூச்சு விட சிரமம் ஏற்படுதல் காய்ச்சல் கழலை நோய் கழுத்து அரை போன்ற இடங்களில் கட்டி உருவாகுதல் காய்ச்சல் உடலில் எடை குறைதல் காண்டிடியாசிஸ் வாயில் புண் நாக்கில் எரிச்சல் உணவு விழுங்குவதில் ஏற்படடும் சிரமம் நிமோனியா இருமல் சளிகாய்ச்சல் மூச்சுவிட சிரமம் ஏற்படுதல் மஞ்சள் காமாலை பசியின்மை காய்ச்சல் உடலில் எடை குறைதல் வயிற்றுப் போக்கு வாந்தி சோர்வு தோல் வியாதிகள் அக்கி அரிப்பு ம்ரு பால் உண்ணி மூளைக்காய்ச்சல் தீராத தலைவலி கழுத்து வலி கண்பார்வை மங்குதல் வலிப்பு காய்ச்சல் சுய நினைவு இழத்தல் கண் நோய் கண்பார்வைலில் தெளிவின்மை சிலருக்கு கண்பார்வை இழப்பு எச்.ஐ.வி / எய்ட்ஸ் வருவதற்கான காரணங்கள் எச்.ஐ.வி /எய்ட்ஸ் கிருமிகள் மனித ரத்தம், விந்து, ஆண், பெண் பிறப்புறுப்பு நீர் ஆகியவற்றில் மட்டும் உயிர் வாழும். எச்.ஐ.வி கிருமி உள்ள ஆண்/பெண்ணுடன் ஆணுறை இன்றி உடலுறவு கொள்வதால் 85% மேல் எச்.ஐ.வி/எய்ட்ஸ் பரவுகிறது. பாதுகாப்பில்லாத வாய்வழிஉடலுறவு. பாதுகாப்பில்லாத ஆசன வாய்வழி உடலுறவு எச்.ஐ.வி கிருமி உள்ள தாயிடமிருந்து கருவில் இருக்கும் குழந்தைக்கு எச்.ஐ.வி ஆல் பாதிக்கப்பட்டவரின் இரத்தத்தை பெருவதன் மூலமாக. ஆணும – ஆணும் பாதுகாப்பற்ற உடலுறவு கொள்வதன் மூலமாக சுத்திகரிக்கப்படாத ஊசியை பயன்படுத்துவதால் போதை பழக்கத்தினர் கிருமி நீக்கம் செய்யப்படாத ஊசிகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வது. எச்.ஐ.வி / எய்ட்ஸ் பரவாத வழிமுறைகள் எச்.ஐ.வி / எய்ட்ஸ் ஆல் பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய கழிப்பறையை உபயோகிப்பதால் எச்.ஐ.வி / எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவருடன் உணவை பகிர்ந்து கொள்வதால். எச்.ஐ.வி / எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவரின் துணிகளை பயன்படுத்துவதாலோ, பாதிக்கப்பட்டவரை கட்டிப்பிடிப்பதால், முத்தமிடுவதால், கை குலுக்குவதால் ஒன்றாக விளையாடுவதால் ஒரே வீட்டில் வசிப்பதால் கொசு மற்றும் பூச்சி கடியால் ஒன்றாக பயணம் செய்வது மேற்கண்ட செயல்களால் எச்.ஐ.வி / எய்ட்ஸ் பரவாது. எச்.ஐ.வி / எய்ட்ஸ்-ஐ எவ்வாறு தடுக்கலாம்? திருமணத்திற்கு முன்பு உடலுறவு இல்லாதிருத்தல், திருமணத்திற்குப் பிறகு ஒருத்திக்கு ஒருவன், ஒருவனுக்கு ஒருத்தி என ஒழுக்க கட்டுப்பாட்டுடன் வாழ்வது. கணவன் / மனைவி தவிர பிற நபரோடு உடலுறவு கொள்ளும் போது, முறையாக ஆணுறை அணிந்து பாதுகாப்பான உடலுறவு கொள்வதன் மூலமாகவும் இரத்த வங்கிகளிலிருந்து பெறும் ரத்தம் பரிசோதனை செய்யப்பட்டது தான் என உறுதி செய்த பின் பயன்படுத்துவது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் ஊசியை யன்படுத்துவதாலும் எச்.ஐ.வி / எய்ட்ஸ் ஆல் பாதிக்கப்பட்ட தாய் கருவுற்றிருக்கும் போது தக்க சிகிச்சை பெறுவதன் மூலம் பிறக்கப் போகும் குழந்தைக்கு எச்.ஐ.வி / எய்ட்ஸ் வராமல் தடுக்கலாம். மேற்கண்ட முறைகளில் எச்.ஐ.வி / எய்ட்ஸ் வராமல் தடுக்க முடியும். உடலுறவு வழியாக உடலுறவின் போது, நோய் கிருமி அதிகமாக் உள்ள கசிவுகள் பாலுறவு துணைவரின் சீதச் சவ்வுப் பரப்புகளில் படும் போது இந்நோய் பரவுகிறது. தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி தொற்றுள்ள தாயிடமிருந்து குழந்தைக்கு கர்ப்பகாலம், பிரசவ நேரம் அல்லது பால் கொடுக்கும் போது பரவுகிறது. இரத்தமும் ரத்த பொருட்கள் மூலம் எச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தம் அல்லது ரத்த பொருட்கள் உடலுக்குள் செலுத்தப்படும் போது இந்த தொற்று பரவுகிறது.விபத்து ,அறுவை சிகிச்சை, ரத்தம் செலுத்துவது, பெறுவது வாயிலாக பரவலாம். போதை ஊசி பரிமாறிக் கொள்வதால் போதைப் பழக்கவழக்கமுடையவர்கள் ஒரே ஊசி மற்றும் சிரஞ்சி மூலம் பலர் பரிமாறிக் கொள்வதால் பரவுகிறது. சுத்தம் செய்யப்படாத் ஊசியை பயன்படுத்துவோர், ஊர்சி மூலம் போதை பொருட்களை பகிர்ந்து கொண்டவர்களுக்கு எச்.ஐ.வி தொற்றும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எச்.ஐ.வி தொற்று பரவ வாய்ப்பு நிறைந்த பாலுறவு முறைகள் எச்.ஐ.வி உள்ளவர் என அறியாமல் ஆணுறையற்ற உடலுறவு தெரிந்த நபர் என ஆணுறை இல்லாமல் உடலுறவு ஆணுறை இன்றி வாய்வழி உடலுறவு எப்போதும் உடலுறவுக்கு நம்மிடம் மட்டுமே வருபவர் என்ற நம்பிக்கையில் ஆணுறையை தவிர்த்தல் இது போன்ற சமயங்களில் எச்.ஐ.வி / எய்ட்ஸ் தொற்றும் வாய்ப்பும் ஆபத்தும் அதிகமாக உள்ளது. சமூகத்தில் நிலவும் தவறான நம்பிக்கை மற்றும் பழக்க வழக்கம் ஆசன வாய் மூலம் உடலுறவு முடிந்தவுடன் வெந்நீரில் உப்பு போட்டு கழுவினால் நோய் வராது ஆணுறுப்பு பெரிதாக இருந்தால் ஆணுறை தேவையில்லை விந்துவை உட்கொண்டவுடன் வேப்பிலை சாப்பிட்டால் நோய் வராது மிக இளம் வயது ஆண் / பெண்ணிடம் ஆணுறையின்றி உடல் உறவு கொண்டால் எச்.ஐ.வி வராது உடலுறவிற்குப் பின் எலுமிச்சை, சோடா போட்டு கழுவினால் எச்.ஐ.வி வராது எச்.ஐ.வி இல்லாத ஒருவரின் விந்தை உட்கொண்டால் எச்.ஐ.வி யை அழித்து விடலாம் என நினைப்பது கடவுளுக்கு வேண்டுதல் – விரதமிருப்பது – போன்ற செயல்கள். மேற்கண்ட நம்பிக்கை சார்ந்த செயல்களால் எச்.ஐ.வி தொற்றை தடுக்க முடியாது. இந்த நம்பிக்கைகள் முற்றிலும் தவறானது. எச்.ஐ.வி தொற்று பற்றி அறிந்து கொள்ள என்ன செய்ய வேண்டும் ? எச்.ஐ.வி / எய்ட்ஸ் பற்றிய குழப்பங்கள் தீர ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும் பரிசோதனை மையம் அணுக வேண்டும். அங்கு (நம்பிக்கை மையம்) எச்.ஐ.வி பற்றிய தகவலகளும் எச்.ஐ.வி பரிசோதனைக்கு முன்பான ஆலோசனை மற்றும் தகவல்களை அளிப்பர். அதன் பின்னர் சுயவிருப்பத்தின் அடிப்படையில் எச்.ஐ.வி பரிசோதனை மேற்கொள்ளப்படும். பரிசோதனை மேற்கொண்ட பிறகு பரிசோதனையின் முடிவினை ஆலோசகர், பரிசோதனைக்கு பிந்தைய ஆலோசனைகள் அளித்து தனிப்பட்ட முறையில் எச்.ஐ.வி நிலைப்பற்றி ரகசியமாக தெரிவிப்பார். எச்.ஐ.வி / எய்ட்ஸ் கிருமிகள் உடம்பில் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்துவது ரத்தபரிசோதனை மட்டுமே எலீசா மற்றும் வெஸ்டர்ன் பிளாட் பரிசோதனை இதற்கு பயன்படுகிறது டைபாய்டு (அ) மஞ்சள் காமாலை பாதிப்பு உள்ள போது பரிசோதனை செய்யக் கூடாது. இந்த சமயத்தில் பரிசோதனை செய்தால் தவறான முடிவுதான் கிடைக்கும் எச்.ஐ.வி பரிசோதனை செய்து ஆறு மாதத்திற்கு பின், மீண்டும் எச்.ஐ.வி பரிசோதனை செய்து உறுதிபடுத்தி கொள்ள வேண்டும் எச்.ஐ.வி / எய்ட்ஸ் உள்ளவர் நலமுடன் வாழ கடைபிடிக்க வேண்டியவை என்ன ? மன அழுத்தமின்றி வாழ பழகிக் கொள்ளுதல் குளிர்ந்த நீர் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் தூய்மையான வெந்நீரையே பருக வேண்டும் தேவைக்கு அதிகமான உணவு உண்ணக் கூடாது மது, சிகரெட்,பீடி,பான்பராக்,புகையிலை பொருட்களை பயனபடுத்தக்கூடாது சந்தர்ப்பவாத நோய்கள்(காய்ச்சல், காலரா, வாந்தி – பேதி) வராமல் தடுத்தல் முக்கியம்.சந்தர்ப்பவாத நோய் உருவானால் சுய வைத்தியம் செய்து கொள்ளாமல் தக்க மருத்துவரிடம் உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் மருந்து சாப்பிடுவதனை இடையில் நிறுத்தக் கூடாது. கணவன் மனைவியாக இருந்தாலும் பாதுகாப்பான உடலுறவையே மேற்கொள்ள வேண்டும் கை – கால் நகங்களை வெட்டி தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். விழிப்புணர்வுடன் செயல்பட்டால் எச்.ஐ.வி / எய்ட்ஸ் வராமல் தடுக்க முடியும் எச்.ஐ.வி / எய்ட்ஸ் பெரும்பாலும் பாதுகாப்பற்ற உடலுறவால் தான் பரவுகிறது பால்வினைத் தொற்றுள்ளோருக்கு எச்.ஐ.வி வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் பால்வினை நோய் எச்.ஐ.வி / எய்ட்ஸ் வராமல் இருக்க ஆணுறையை முறையாக பயன்படுத்தி நோய் வராமல் தடுக்கலாம் எச்.ஐ.வி / எய்ட்ஸ் இருந்தாலும் நலமுடன் மகிழ்வுடன் வாழமுடியும் எச்.ஐ.வி / எய்ட்ஸ் முழுமையாக குணப்படுத்த இதுவரை மருந்துகள் கண்டுப்டிக்கப்படவில்லை. எனவே போலி தவறான விளம்பரங்களை கண்டு ஏமார்ந்துவிடக் கூடாது எச்.ஐ.வி / எய்ட்ஸ் உடன் நீண்ட நாள் வாழ முடியும். எவ்வாறு எனில் வைரஸ் நோயெதிர்ப்பு மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைபடி எடுத்துக் கொள்ளும் போதும், முறையான உணவு பழக்கம் பாதுகாப்பான உடலுறவு, உடல் நலப்பிரச்சனைகளுக்கு உடனுக்குடன் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் போது எச்.ஐ.வி தொற்றில்லாதவர்கள் போலவே நீண்ட நாள் வாழமுடியும் எச்.ஐ.வி / எய்ட்ஸ்-ஆல் பாதிக்கப்பட்ட நபர்கள் செய்யக் கூடாதவை பாதுகாப்பற்ற உடலுறவு இரத்தம், விந்து, உடல் உறுப்புகளைத் தானம் செய்தல் பிளேடு, பல் துகக்கும் குச்சி, பிரஸ் இவைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது போதை ஊசி பழக்கம் கொண்டவர்கள், ஊசிகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது காது குத்துதல், பச்சை குத்துவது அதற்கு பயன்படும் உபகரணங்களை சுகாதாரமின்றி மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடாது எச்.ஐ.வி / எய்ட்ஸ் உள்ளோர் பாதுகாப்பான உடலுறவின் முக்கியத்துவம் கணவன் – மனைவியாக இருந்தால் கூட பாதுகாப்பான உடலுறவில் ஈடுபடல் வேண்டும் ஏனெனில் எச்.ஐ.வி கிருமியில் பல வகைகள் உள்ளன பாதுகாப்பற்ற உடலுறவை மேற்கொள்வதால் ஒவ்வொரு முறையும் பல தரப்பட்ட கிருமிகள் இருவரின் உடலினுள் செல்லும் வாய்ப்பு உள்ளது இதனால் இருவர் உடலினுள் நோய் எதிர்ப்பு சக்தி விரைவில் குறைய வாய்ப்பு உள்ளது உடலுறவு கொள்பவரில் ஒருவருக்கு எச்.ஐ.வி தொற்று இருந்தாலும் கண்டிப்பாக பாதுகாப்பான உடலுறவையே மேற்கொள்ள வேண்டும். இதனால் மற்றவருக்கு எச்.ஐ.வி தொற்று பரவாமல் தடுக்கப்படுகிறது நம்பிக்கை மைய செயல்பாடுகள் (ICTC) தனி நபருக்கு (எச்.ஐ.வி இல்லாதவருக்கு) தனி நபருக்கு (எச்.ஐ.வி உள்ளவருக்கு) பால்வினை நோய், எச்.ஐ.வி / எய்ட்ஸ் பற்றிய முழுமையான தகவல் வழங்குதல் மனநல பாதிப்பின்றி தன்னம்பிக்கையுடன் செயல்பட உரிய நேரத்தில் ஆலோசனைகள் வழங்குவதன் மூலம் எச்.ஐ.வி ஆக என்றும் இருக்க வழி காட்டி ஊக்குவித்தல் நடத்தையில் நல்மாற்றத்தை ஏற்படுத்தி பிறருக்கும் இந்த தொற்று ஏற்படாமல் தடுததல் பாதுகாப்பான வழிகளையும் – தடுப்பு நடவடிக்கைகளையும் அறியச் செய்தல் தம்பதியர்களுக்கு தகவல்களை வழங்கி தாயிடம் இருந்து குழந்தைக்கு பரவுவதை தடுத்தல் கீழே குறைப்பிடும் விசியங்களில் முடிவெடுக்க உதவுதல் தொடர் ஆலோசனைகள் வழங்குதல் உடலுறவு பழக்கம் சூழலை பிறரிடம் பகிர்தல்் கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்தல் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தல் போன்ற செயல்களுக்கு முடிவு எடுத்திட உதவி செய்தல் துவக்க நிலையிலேயே உரிய வசதிகளை தெரிவித்து அதனை பயன்படுத்தி வழ்காட்டுதல் மேலும் வசதிகளைப் பெற பரிந்துரை செய்தல் தேவையின் அடிப்படையில் ART பெற உதவுதல் மேற்கண்ட பயன்களை நம்பிக்கை மையத்தின் மூலம் பெறலாம் எய்ட்ஸ் பற்றிய பொதுவான கேள்விகளும் பதில்களும் பாதுகாப்பற்ற உடலுறவு கொண்ட எவ்வளவு நேரத்தில் எச்.ஐ.வி மற்றொருவருக்கு பரவும்? எச்.ஐ.வி தொற்று உள்ளவருடன் தொற்று இல்லாதவர் பாதுகாப்பு இல்லாமல் உடலுறவு கொண்ட அடுத்த விநாடியே அவரும் எச்.ஐ.வி தொற்றாளராக மாறுகிறார். அந்த விநாடியிலிருந்து அவரும் பிறர்க்கு எச்.ஐ.வி தொற்றை பரப்ப முடியும். இரண்டு மனைவி உள்ளவருக்கு எச்.ஐ.வி தொற்று வருமா? இரண்டு மனைவியரில் யாராவது ஒருவருக்கு எச்.ஐ.வி தொற்று இருந்தால் கணவருக்கு எச்.ஐ.வி தொற்று வரும். பால்வினை நோய் எச்.ஐ.வி ஆக மாறுமா? பால்வினை நோய் எச்.ஐ.வி யாக மாறாது. ஆனால் தொடர்ந்து நோய்த் தொற்று ஏற்படும் வகையில் ஆபத்தான நடவடிக்கை உள்ளவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று வர வாய்ப்புகள் அதிகம். திருமணமாகாத இளைஞர் அல்லது இளம் பெண்களிடம் பாலுறவு கொண்டால் எச்.ஐ.வி தொற்றாது எனக் கூறுகிறார்களே அது உண்மையா? மிகவும் தவறானது. எச்.ஐ.வி கிருமிகள், அழகைப்பார்த்தோ வயதைப் பார்த்தோ தொற்றுவது இல்லை. பாதுகாப்பற்ற முறையில் பாலுறவு வைத்துக்கொள்ளும் இருவரில் ஒருவருக்கு எச்.ஐ.வி இருந்தாலும் மற்றொருவருக்கு எச்.ஐ.வி தொற்று வருவது உறுதி. எனவே அழகைப்பார்த்து, வயதைப்பார்த்து எச்.ஐ.வி வராது என்ற முடிவிற்கு செல்லக் கூடாது. இரத்தப் பரிச்சோதனை முடிவின் மூலம்தான் உறுதிப்படுத்த முடியும். எச்.ஐ.வி யும் எய்ட்சும் ஒன்றா? வேறு வேறா? எச்.ஐ.வி நிலை வேறு எய்ட்ஸ் நிலை வேறு. எச்.ஐ.வி நிலை என்பது மனித உடலில் உள்ள நோயெதிர்ப்பு சக்தியை கொண்ட வெள்ளை அணுக்களை வைரஸ் கிருமிகள் அழிக்கத் துவங்கும். இந்த கட்டத்தில் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைந்து வரும். இச்சமயத்தில் தொற்றாளர் பிறரைப் போலவே தோற்றத்தில் இருப்பார். உடலின் வெளிபுறத்தில் எவ்வித மாற்றமும் இருக்காது. இந்நிலையில் இவர் பிறருக்கு எச்.ஐ.வியை பரப்ப முடியும். இவரது தோற்றம் செயல்பாடுகளை வைத்தும் எச்.ஐ.வி தொற்றாளர் என அடையாளம் காண முடியாது. எய்ட்ஸ் என்பது மனிதனின் நோயெதிர்ப்பு சக்தி முழுவதுமாக அழிக்கப்பட்டு, நோயெதிர்ப்பு சக்தி இல்லாத நிலையில் பல்வேறு நோய்கள் உடலை முழுமையாக ஆக்கிரமித்துக்கொள்கிறது எனவே “எச்.ஐ.வி நிலை வேறு எய்ட்ஸ் நிலை வேறு” வாந்தி பேதி தோல் நோய்கள் புற்று நோய் ,தலைவலி, எடை குறைதல் போன்ற நோய்கள் உருவாகி அது தீவிரம் அடைநது இரப்பு நிலைக்கு கொண்டு செல்லும். எச்.ஐ.வி என்பது துவக்க நிலை எய்ட்ஸ் என்பது முற்றிய பல நோய்களின் கூட்டுத்தொகுப்பு நிலையாகும் எச்.ஐ.வி/ எய்ட்ஸ் முழுமையாக குணப்படுத்த மருந்து உள்ளதா ? எச்.ஐ.வி/ எய்ட்ஸ் ஐ முழுமையாக குணப்படுத்த மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எச்.ஐ.வி ஆல் பாதிக்கப்பட்டிருப்பின் திருமணம் செய்து கொள்ளலாமா ? உடலுறவு தேவையா என பாதிக்கப்பட்டவரே முடிவு செய்தல் வேண்டும் இதனை மனதில் கொண்டு முடிவு எடுப்பது நல்லது திருமணமோ உடலுறவோ தேவை என முடிவேடுத்தால் பாதுகாப்பான முறைகளைத் தெரிந்து முறையாக கடைபிடிக்க வேண்டும். உடல் உறவு கொள்ளும் இருவரில் ஒருவருக்கு எச்.ஐ.வி இல்லாவிட்டாலும் எச்.ஐ.வி இருக்கும் நபர் பாதுக்கப்பான உடலுறவு மட்டுமே கொள்ள வேண்டும் எச்.ஐ.வி / எய்ட்ஸ் பற்றிய சந்தேகங்களுக்கு இலவச தொலைபேசி 1800 419 1800 எச்.ஐ.வி தொற்றாளர்களின் உணவுப் பழக்கம் நல்ல சத்தான சரிவிகித உணவுகளை உட்கொள்ள வேண்டும்.உடல் வளர்ச்சி தரும் ஊட்டச் சத்துக்கள் பற்றிய விபரம் தண்ணீர் புரதம் மாவுச்சத்துக்கள் கொழுப்பு மற்றும் எண்ணெய் பொருட்கள் உயிர்ச் சத்துக்கள் (விட்டமின்) தாதுப்பொருட்கள் இவற்றை சரியான நேரத்தில் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுதல் அவசியம் பழைய ஆறிப்போன உணவுகளை தவிர்த்து விட்டு அவ்வப்போது தயாரித்த சூடான உணவுகள் உண்பதே மிகவும் ஏற்றது திறந்த நிலையில் ஈக்கள் மொய்க்கும் பொருட்கள் சுகாதாரமற்ற முறையில் தயாரித்து விற்பனை செய்திடும் உணவுகளை தவிர்த்திட வேண்டும் சாப்பிட பயன்படுத்தும் பிளேட் மற்றும் தண்ணீர் குடிக்க பயன்படுத்தும் டம்ளர்களையும் நன்கு கழுவி பயன்படுத்தல் வேண்டும் திட உண்வுகளையும் திரவ உணவுகளையும் சேர்த்துக் கொள்ளலாம் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை ஒரளவு அதிகரிக்கச் செய்திட இரும்புச் சத்துமிக்க உணவு வகைகளான முருங்கைக்கீரை, நெல்லிக்கனி, மக்காச்சோளம், கம்பு, ராகு, நவதானியம், பனங்கருப்பட்டி, பேரிச்சம்பழம் அவசியம் சேர்த்து கொள்ள வேண்டும் பதப்படுத்தப்பட்ட உலர்ந்த பழங்கள் சேர்த்துக் கொள்ளலாம் இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளன இவைகள் எளிதில் ஜீரணமாகக் கூடியவை ஆகும் தோல் சம்மந்தப்பட்ட நோய்கள் இருப்பின் கருவாடு, கத்திரிக்காய் போன்றவற்றை தவிர்த்திடல் வேண்டும் எந்த உணவு உடம்புக்கு ஒத்துக் கொள்ளவில்லையோ அந்த உணவை சாப்பிடாமல் தவிர்த்திடல் வேண்டும் சளி, இருமல் இருந்தால் திராட்சை, ஜூஸ், எலுமிச்சை ஜூஸ் போன்றவற்றை தவிர்த்திடல் வேன்டும் மாமிச உணவை நன்கு வேகவைத்த பிறகே சாப்பிட வேண்டும் காய்கறிகள், நார்ச்சத்து மிகுந்த கீரைகள், பழங்கள், தானியங்கள், போன்றவை சத்துமிக்க சுத்தமான உணவுகள் ஆகும் எனவே அசைவ உணவையே சாப்பிட வேண்டும் என்ற கட்டாயமில்லை உடல் எடை குறையாமல் பராமரித்தல் மிக முக்கியம் பொதுவாக உடல் மீது சிறப்புகவனம் செலுத்தி பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.அவ்வாறு பாதுகாப்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்காமல் இருக்கும் இதனால் உடல் நோய்களை எதிர்த்து போராடும் ஆற்றலை பெறமுடியும் உணவில் கவனம் செலுத்த வேண்டும் தொற்றிலாதவர்கள் சாப்பிடுவது போலவே நோயுள்ள போதும் சாப்பிட வேண்டும் அதிக காரம்ம,புளிப்பு, இனிப்பு உள்ள உணவுகளை சாப்பிடக் கூடாது பசு,எருமை,கன்று ஈனும் போது கிடைக்கும் சீம்பாலை வேகவைத்து தயாரிக்கும் சீம்பால் கட்டி நோய் எதிர்ப்பு சக்தியினை பல மடங்கு பெருக்கும் இதனை உண்பது மிகவும் நல்லது உடல் எடை கூடவும் உடலுக்கு தேவையான சக்தி பெறவும் உணவுப் பொருடக்களை சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம் தேங்காய், தயிர், மோர், பால், முட்டை, வெண்ணை, மாமிசம் பருப்பு, திராட்சை, பேரிட்சை, கோழி, மீன், முளை கட்டிய பயறு பருப்பு வகைகள், பீட்ரூட், கேரட், அரிசி, முட்டைகோஸ், சோயாபீன்ஸ், பாகற்காய், நிலக்கடலை, எள், நார்ச்சத்து மிக்க உணவுப் பொருட்கள்,ம்ணத்தக்காளி கீரை, பசலைக் கீரை, முருங்கைக் கீரை ஆகியவற்றை உணவுடன் சேர்த்து சாப்பிடல் வேண்டும் ஆவியில் நன்கு வேக வைத்த உணவுகளை சாப்பிடுவது நல்லது பொதுவாக நோயற்ற காலத்தில் மூன்று வேளை உண்ட உணவின் அளவினை நோயுள்ள காலத்தில் நானகு (அ) ஐந்து முறை என பிரித்து சாப்பிடுவது மிகவும் நல்லது உடற்பயிற்சி தினமும் உடற்பயிற்சி செய்வது நல்லது உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும் உடற்பயிற்சி உடம்பில் உள்ள தசைகளை வலுவாக்கும் சுறுசுறுப்பைத்தரும்,பசியைத் தூனடும் நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கி உடல் தசைகளை வலுவாக்கும் ஜீரணத்தை அதிகரிக்கச் செய்து உடல் சோர்வையும் தலைச் சுற்றலையும் நீக்குகிறது. புத்துணர்ச்சியோடும், மகிழ்ச்சியோடும் இருக்க உதவுகிறது மனக்குழப்பத்தைப் போக்கி மன அமைதியும் மன மகிழ்ச்சியையும் தரும் நிம்மதியான ஆழ்ந்த உறக்கத்தைத் தரும் வெயில் மழை உள்ள சமயங்களில் உடற்பயிற்சியினை செய்வதை தவிர்ப்பது நல்லது பாதுகாப்புடன் காயம் படாமல் விளையாடுவது முக்கியம் உடற்பயிற்சி செய்த பிறகு சிறிது நேரம் கழித்து, குளிக்க வேண்டும் ஒவ்வொரு நாளும் நேரத்தை ஒதுக்கி எளிய உடற்பயிற்சி செய்திடல் வேண்டும் பால் மற்றும் பாலியல் தொடர்பான செயல்பாடுகள் எச்.ஐ.வி உள்ளோர் பாதுகாப்பான உடலுறவை கடை பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள் உடல் ஆரோக்கியப் பாதுகாப்பு வாழ் நாள் நீடிக்கும் வாய்ப்பு பால்வினை நோய்கள், மஞ்சள்காமாலை உண்டாக்கும் நோய்க் கிருமிகளால் தாக்கப்படாமல் பாதுகாப்பு வேறு வகையான எச்.ஐ.வி கிருமிகளால் தாக்கப்படாமல் பாதுகாப்பு உருவாகும் பிறருக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுக்கப்படும் எச்.ஐ.வி கிருமிகளின் எண்ணிக்கை உடலில் அதிகமாகாமல் இருக்கும் வாய்ப்பு ஆண்,பெண் இருவரும் பாஸிட்டிவ் ஆக இருத்தாலும் பாதுகாபபான உடலுறவை மட்டுமே மேற்கொள்ள வேண்டும். எச்.ஐ.வி யில் பல் வகைகள் இருப்பதால் திரும்பவும் புதிய நபரிடம் இருந்து வேறு வகையான எச்.ஐ.வி தாக்காமல் இருக்க பாதுக்கப்பான உடலுறவையே மேற்கொள்ள வேண்டும் இதனால் எச்.ஐ.வி யின் தாக்கம் நமது உடலில் அதிகம் ஆகிவிடாமல் இருக்கும் ஒருவரிடம் உள்ள வைரஸ் தாக்கம் மற்றொருவரையும் தாக்கும் வாய்ப்பு அதிகம் ஒரு ஆண் எச்.ஐ.வி பாஸிட்டிவ் ஆக இருந்தால் மற்றொரு ஆணுடன் வாய் வழி உறவு அல்லது மல வாய் உடலுறவு கொள்ளும் போது ஆணுறை அவசியம் அணிந்திட வேண்டும் ஒரு ஆணுறை ஒருமுறைதான் பயன்படுத்த வேண்டும் உடலுறவின் போது ஆணுறையுடன் KY ஜெள்ளி என்ற வழவழப்பான திரவத்தை பயன்படுத்தலாம் ஆயின்மென்ட், கிரிஸ் போன்றவற்றை பயன்படுத்தினால் ஆணுறை சேதமடையும் எனவே அவற்றை பயன்படுத்தக்கூடாது ஆணுறை ஒருவரை பால்வினை நோய் வராமல் காக்கிறது தேவையற்ற க்ர்ப்பம் உருவாகாமல் தடுக்கிறது எச்.ஐ.வி எய்ட்ஸ் ல் இருந்து காக்கிறது ஏ.ஆர். டி (ஆண்டி ரிட்ரொ வைரல் தெரபி) எச்.ஐ.வி/ எய்ட்ஸ் உள்ளவர்களுக்கான கூட்டுமருந்து சிகிச்சை எச்.ஐ.வி / எய்ட்ஸ் ஆல் பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாக குணமாக மருந்துகள் கிடையாது. ஆயினும் அவர்களது ஆரோக்கிய நிலையினை மேம்படுத்தி துன்பமின்றி வாழ வழி செய்கிறது. ஏ.ஆர்.டி மருந்துகள். எச்.ஐ.வி கிருமிகளை முழுமையாக அழிக்காது. வளர்ச்சியை, செயல்பாட்டை கட்டுப்படுத்தும். ஏ.ஆர்.டி என்றால் என்ன? ஏ.ஆர்.டி- ஆண்டி ரிட்ரொ வைரல் தெரபியின் சுருக்கமே ஏ.ஆர்.டி. (எச்.ஐ.வி/எய்ட்ஸ் உள்ளளோர்க்கான எச்.ஐ.வி கூட்டு மருத்துவ சிகிச்சை) உடலில் நோய் எதிர்ப்பை வலுப்படுத்தும் வெள்ளை அணுக்களை எச்.ஐ.வி கிருமிகள் அழித்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் செய்து விடும். இந்நிலையில்தான் ஏ.ஆர்.டி எனப்படும் கூட்டு மருந்து சிகிச்சையால் எச்.ஐ.வி கிருமியின் பெருக்கத்தை கட்டுப்படுத்தி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடி சந்தர்ப்பவாத நோய்களின் தாக்கம் குறைகிறது எச்.ஐ.வி உள்ளவர்கள் அல்லது எய்ட்ஸ் நிலையில் உள்ளவர்கள் எப்போது இருந்து ஏ.ஆர்.டி சிகிச்சையை துவங்கலாம்? CD4 எனப்படும் வெள்ளை அணுக்கள் 200-க்கும் குறைந்த நிலையில் நோய்கள் தாக்கத் துவங்கும். இந்த சமயத்தில் மருத்துவரின் ஆலோசனை மற்றும் முடிவின் அடிப்படையில் கூட்டு மருந்து சிகிச்சையை தொடங்க வேண்டும். ஏ.ஆர்.டி எடுத்துக் கொள்ளுமுன் செய்யப்பட வேண்டிய பரிசோதனை இரத்த பரிசோதனை (ஹீமோகுளோபின்) கல்லீரல் செயல்படும் தன்மைக்கான பரிசோதனை CD 4 செல் எண்ணிக்கைக்கான பரிசோதனை பெண்களுக்கான இனப்பெருக்க மண்டலப் புற்றுநோய் மற்றும் கர்ப்பம் தரித்ததன் பரிச்சோதனை சிகிச்சை பயன் தருகிறதா என்பதை அறியும் விதம் மருந்துகள் சாப்பிடும் போது CD4 எனப்படும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை கூடுதலாக இருக்க வேண்டும்.எனவே ஏ.ஆர்.டி க்காக சிகிச்சை எடுத்துக் கொள்ளும் போது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை செல் எண்ணிக்கையை பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். எண்ணிக்கையின் அடிப்படையில் மருந்துகள் செயல்படுகின்றனவா என்பதை தெரிந்து கொள்ளலாம். சிகிச்சை ஆரம்பித்து ஆறு மாதகளுக்குப் பிறகும் செல் எண்ணிக்கை அதிகரிக்காமல் இருந்தால் மருத்துவரின் ஆலோசனை பெறவும் தொடர் சிகிச்சை ஏன்? (ADHERENCE) ஏ.ஆர்.டி எனப்படும் எச்.ஐ.வி கூட்டு மருந்து சிகிச்சையில் வேளை தவறாமல்,இடையில் நிறுத்தாமல் தொடந்து உட்கொள்வதையே தொடர்சிகிச்சை என்கிறோம்.தொடர்ந்து ஏ.ஆர்.டி மருந்து சாப்பிடுவதால் CD4 செல் எண்ணிக்கை அதிகரிக்கிறது.மருந்துகளை இடையில் நிறுத்தினால் (அ)வேளை தவறி விட்டாலோ CD4 செல்களின் எண்ணிக்கை குறைந்து விடும். கிருமிகளின் செயல்களை கட்டுப்படுத்த அல்லது தடுக்கவே தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது ஏ.ஆர்.டி யால் ஏற்படும் நன்மைகள் எச்.ஐ.வி யால் பாதிக்கப்பட்டவர்களின் ஆயுளை நீட்டிக்க உதவுகிறது சந்தர்ப்பவாத நோய்களை குறைக்கின்றது நோய் எதிர்ப்பு சக்தியை (CD4 செல்)அதிகரிக்கச் செய்கிறது எய்ட்ஸ் நிலைக்கு செல்லாமல் எச்.ஐ.வி நிலையிலேயே எச்.ஐ.வி கிருமிகளின் எண்ணிக்கையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது வாழ்க்கையில் மன அழுத்தத்தை குறைத்து இயல்பு வாழ்விற்கு கொண்டு வருகிறது பிறரை எதிர்பார்த்து வாழும் நிலை குறைகிறது ஏ.ஆர்.டி கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள் அரசு பொது மருத்துவமனை –சென்னை அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை –தாம்பரம்-சென்னை மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை –எழும்பூர்-சென்னை குழந்தைகள் நல மையம் –எழும்பூர்.சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை-சென்னை வேலூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை – வேலூர் அரசு மோகன் மருத்துவ கல்லூரி மருத்துவமனை –சேலம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை –நாமக்கல் கோயமுத்தூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை –கோயம்புத்தூர் அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனை –திருச்சி அரசு மாவட்ட தலமை மருத்துவமனை –கரூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை –தர்மபுரி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை-விழுப்புரம் தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை –தஞ்சாவூர் அரசு இராஜாஜி மருத்துவ கல்லூரி மருத்துவமனை –மதுரை தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை –தேனி திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை –திருநெல்வேலி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை –விருதுநகர் கன்யாகுமரி அரசு மருத்துவ கல்ல்லூரி மருத்துவமனை –நாகர்கோவில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை –தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை-கடலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை –திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை –பெரம்பலூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை –திருவண்ணாமலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை –கிருஷ்ணகிரி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை –திண்டுக்கல் தகவல் மற்றும் புகைபட உபயம் – மேக்னம், இராசிபுரம் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுபாட்டு அமைப்பு, சென்னை.