அறிமுகம்

உடலில் அழற்சியுற்ற உயிரணுக்களின் தொகுதிகள் காணப்படுவதே இந்நோயின் தன்மையாகும். முதன்மையாக, இந்நோயால் நுரையீரல் பாதிக்கப்படும். ஆனால், நிணநீர் சுரப்பிகள், நுரையீரல், கல்லீரல், கண்கள் மற்றும் தோலிலும், சிறுபான்மை மண்ணீரல், எலும்பு, மூட்டுகள், எலும்புப்புழை, எலும்புத்தசை, சிறுநீரகம், இதயம், இனப்பெருக்க உறுப்புகள், உமிழ்நீர்சுரப்பிகள் மற்றும் நரம்புமண்டலத்திலும் அழற்சி உயிரணுத் தொகுதிகள் உண்டாகும். இறுதியில் இவை முற்றிலுமாக மறைந்துவிடும் அல்லது வடுத்திசுக்களாக மாறும்.

நோயறிகுறிகள்

பாதிக்கப்பட்ட உறுப்பிற்கேற்ப அறிகுறிகள் மாறுபடும்:

பொதுவான அறிகுறிகள்: (Generalized symptoms)

காய்ச்சல்

எடையிழப்பு

நிணநீர்ச்சுரப்பிகள் வீக்கம்

களைப்பு

தொடர் வறட்டு இருமல்

நுரையீரல் அறிகுறிகள்

மூச்சடைப்பு

இழுப்பு

நெஞ்சுவலி

தோலில் அறிகுறிகள்: (Skin symptoms)

சொறி

நைவுப்புண்

தோல் நிறமாற்றம்

தோல் முடிச்சுகள்

கண்களில் அறிகுறிகள் (Eye symptoms)

பார்வை மங்குதல்

கண்வலி

சிவப்பு

பார்வைக் கூச்சம்

காரணங்கள்

துகள்கழலையின் சரியான காரணம் இதுவரை தெரியவில்லை. மரபியல் ரீதியாக நோய்தாக்கும் சாத்தியக்கூறுகள் இருக்கலாம். குறிப்பிட்ட பாக்டீரியா, வைரஸ், தூசி அல்லது வேதிப்பொருட்கள் போன்றவற்றால் இக்கூறுகள் தூண்டப்படலாம்.

நோய்கண்டறிதல்

உடல் பரிசோதனை மூலம் கீழ்காண்பவைகளை அறியலாம்:

அசாதாரணமான மூச்சொலிகள் (குழல் ஒலி அல்லது சலசலப்பு)

கல்லீரல் வீக்கம்

நிணநீர்ச்சுரப்பி வீக்கம்

மண்ணீரல் வீக்கம்

சொறி

பலவிதமான பிம்பச்சோதனைகள் மூலமும் துகழ்கழலையைக் கண்டறியலாம்:

நெஞ்சு எக்ஸ்-கதிர் மூலம் நுரையீரல் பாதிப்பு அல்லது நிணநீர்ச்சுரப்பி வீக்கத்தைக் கண்டறியலாம்

கணினி வரைவி ஊடுகதிர் (சி.டி.ஸ்கேன்)

நுரையீரல் காலியம் ஊடுகதிர் (Lung gallium scan)

நோய் மேலாண்மை

மருந்துகள்: அழற்சியைக் கட்டுக்குள் வைக்கப் பொதுவாக ஊக்கமருந்துகள் பரிந்துரைக்கப் படுகின்றன.

அறுவை மருத்துவம்: நுரையீரல் அல்லது கல்லீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தால் உறுப்பு மாற்றும் சிகிச்சை பரிசீலிக்கப்படும்.

ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்