ஆஸ்துமா என்றால் என்ன ?

ஆஸ்துமா என்பது சுவாசக்குழல்களை பாதிக்கும் ஒரு நாள்பட்ட நோய். சுவாசக்குழல்கள் என்பது மூச்சுக் காற்றை நுரையீரலுக்குச் எடுத்துச் செல்லும் குழாய்கள் ஆகும். ஆஸ்துமா உள்ள நபர்களில், சுவாசக்குழாய்களின் உட்சுவர் வீக்கம் கண்டிருக்கும். இப்படிபட்ட வீக்கம் சுவாசக்குழாயில் அலர்ஜி எனப்படும் ஓவ்வாமையை ஏற்படுத்தக்கூடிய பொருட்களோ அல்லது மூச்சுக் குழாய்களில் எரிச்சலை ஏற்படுத்தக்கூடிய பொருட்களோ (உம். புகை, தூசி) செல்லும்போது சுவாசக்குழாய்கள் இப்படிப்பட்ட பொருட்களுக்கு எதிராக செயல்படும்.
இப்படி சுவாசக்குாழய்கள் எதிரிடையாக செயல்படும் போது சுவாசக் குழாய்களின் உள் சுற்றளவு குறைந்து, சாதாரண அளவைவிட மிக குறைந்தளவு காற்றே நுரையீரலின் காற்றுப் பரிமாணம் நடக்கும் இடத்திற்கு செல்கிறது. இதனால், நம் உடலில் உள்ள திசுக்களுக்கு செல்லும் பிராண வாயுவின் அளவும் குறைகிறது. இதன் விளைவாக, மிகுந்த சிரமத்துடன் மூச்சு விடும் நிலைமை (விசில் சத்தத்துடன்), இருமல், மார்பு பகுதி இருக்கமாகுதல் மற்றும் சுவாசக்கோளாறு போன்றவற்றை உண்டாக்குகிறது. இவை அனைத்தும் குறிப்பாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் காணப்படும்.
ஆஸ்துமா வியாதியை குணப்படுத்த முடியாது. ஆனால் ஆஸ்துமா நோய்கண்ட அநேகர் இந்த நோயினை கட்டுப்படுத்திக் கொள்கின்றனர். எனினும், ஒருசில நேரங்களில் நோயின் தாக்கம் இருப்பினும், அவர்களும் மற்றவர்களை போல சுறுசுறுப்பான வாழ்க்கை வாழ்கின்றனர். ஆஸ்துமாவின் பாதிப்பு மிகவும் கடுமையாக இருக்கும் போது சுவாசக்குழாய்களில் மிக அதிகமான அடைப்பு ஏற்பட்டு, உடலில் முக்கிய உறுப்புகளுக்கு போதிய பிராணவாயு கிடைப்பதில்லை. (உம். மூளை, ஈரல், சிறுநீரகங்கள்). இது போன்ற நேரங்களில் அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நிலை ஏற்படுகிறது. ஆஸ்துமாவின் பாதிப்பு மிகவும் கடுமையாக இருப்பின் உயிர் இழப்பும் நேரிடுகிறது.
எனவே ஒருவர் ஆஸ்துமா வியாதியினால் பாதிக்கப்பட்டால், அந்த நபர் மருத்துவரை சந்தித்து, முறைப்படி மருத்துவ உதவியை பெற்றுக்கொள்ள வேண்டும். எதனால் ஆஸ்துமா வருகிறது, அதனை எப்படி தவிர்க்கலாம் என்பதனையும், அறிந்து கொள்ள வேண்டும்.

நாம் இருக்கும் சுற்றுச்சூழலில் சில மாசுப்பட்டபொருட்கள் காணப்படுகிறது. அவை நம்மில் ஆஸ்துமா வியாதிக்கான அறிகுறிகள் மற்றும் பாதிப்புக்குளை கொண்டு வருகிறது. ஆஸ்துமா வருவதற்கான சில பொதுவான காரணங்களில் உடற்பயிற்சி, அலர்ஜின்ஸ் எனப்படும் ஒவ்வாமை பொருட்கள் எரிச்சலூட்டும் பொருட்கள் மற்றும் வைரஸ் நோய் தொற்று போன்றவையும் அடங்கும். சிலருக்கு உடற்பயிற்சி செய்யும் போதும் அல்லது வைரஸ் கிருமிகளால் தாக்கப்படும் போதும் மட்டும், ஆஸ்துமா வியாதி காணப்படுகிறது.

பொது வகையான அலர்ஜின்ஸ் (ஒவ்வா பொருட்கள்)

மிருகங்களின் உடலின் மேல் உள்ள பொடுகு (தோலில், முடியில் மற்றும் இறகுகளிலிருந்து வருபவை)

தூசி மற்றும் தூசியில் உள்ள சிறு பூச்சி (வீடுகளில் தூசியில் காணப்படுபவை)

கரப்பான்பூச்சி

மரங்கள் மற்றும் புல்களிலிந்து வரும் மகரந்தத்தூள்

மேல் பூசு பொருட்கள் ( உள்ளும் வெளியிலும் பயன்படுத்தப்படும்) - பெயின்ட், டிஸ்டம்பர் ோன்றவை

சிகரட் புகை

காற்றில் காணப்படும் மாசுப்பொருட்கள்

குளிர்ந்த காற்று அல்லது சீதோஷணநிலை மாற்றம்

வண்ணப்பூச்சுப் பொருள் மற்றும் சமைக்கும் பொழுது வரும் வாசனை

மூட்டப்பட்ட நறுமண பொருட்கள்

கடுமையான மன உணர்வுகளை வெளிப்படுத்துதல் ( அழுதல் அல்லது சிரித்தல்)

ஆஸ்பரின் மற்றும் பீட்டா பிளாக்கர்ஸ் எனப்படும் மருந்துகள்

உணவில் சல்பைட்ஸ் போன்ற பொருட்கள்(உலர்ந்த பழவகைகளில்) அல்லது மதுபான வகைகள் ( திராட்சை மது)

வயிறு மற்றும் உணவுக்குழாய் பாதிப்பினால் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஆஸ்த்துமாவின் அறிகுறிகளை, பாதிப்புகளை அதிகப்படுத்தி, மோசமான நிலைமைக்கு கொண்டு செல்லும்.

அலர்ஜின்ஸ் எனப்படும் ஒவ்வாப்பொருள் மற்றும் எரிச்சலூட்டும் பொருட்கள் எவையெனில் இராசாயனப் பொருட்கள் மற்றும் தூசிப் பொருட்கள்.

நோய்தொற்றுதல்

குடும்ப பின்னணி

குழந்தைகள் புகையிலையிலிருந்து வருகின்ற புகையினை சுவாசிக்க நேரிடும் போது, ஆஸ்துமா வருகிறது. ஒரு கர்ப்பிணிப் பெண், புகையிலையிலிருந்து வரும் புகையினை சுவாசிக்க நேரிடும் போது வயிற்றில் வளரும் குழந்தைக்கு எளிதில் ஆஸ்துமா வருகிறது.

உடற்பருமனாகுதல், பிற சுகாதாரக் கேடுகள் ஆஸ்துமா மற்றும் வியாதியோடு தொடர்புடையவைகளாக இருக்கலாம்.

நோயின் அடையாள அறிகுறிகள்

மூச்சுத்திணறல் - திடீரென பாதிப்புக்குள்ளாகுதல், அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்படுதல்

இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் பாதிப்பு மோசமாகுதல்

குளிர்ச்சியான பகுதிக்கு செல்லும்போது அல்லது உடற்பயிற்சி செய்யும் போது நிலைமை மோசமாகுதல் மற்றும் நெஞ்செரிச்சல் காணப்படும். பின்னர் தானகவே மறைந்துவிடும்

மருந்து உட்கொள்ளும் போது மூடிய சுவாசக்குழாய்கள் திறந்து சுகமாகுதல்

இருமல் அல்லது சளியுடன் கூடிய இருமல்

மூச்சு இறைப்பினால் நிலைமை மோசமாகுதல் குறிப்பாக உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது அல்லது மற்றபிற சாதாரண வேலைகளை செய்யும் போது.

கேள்வி பதில்கள்

கேள்வி: ஆஸ்துமா நோயாளிகள் எல்லாவிதமான உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ளலாமா?

பதில்: ஸ்கூபா டைவிங்,தலைக்கு மேல் பளு தூக்குதல் ஆகியவற்றைத் தவிர மற்ற எல்லா உடற் பயிற்சிகளையும் செய்யலாம்.

கேள்வி: ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஆபத்தானவை என்று எதைச் சொல்வீர்கள்.?

பதில் : கடல் மீன் உணவு, கொகோ சாக்கலேட்டுகள், உலர் பழங்கள் ஆகியவற்றால் ஏற்படும் ஒவ்வாமை, தேனி பூச்சி, கதண்டு ஆகியவை கடிக்க நேர்தல் ஆகியன மிகவும் ஆபத்தானவை.

கேள்வி: ஏசிக்கள் ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஏற்றவையா?

பதில்: நிச்சயமாக. காரணம் அவற்றில் வரும் காற்று வடிகட்டப்படுகிறது. ஆனால் அதே நேரம் அந்த காற்று வடிகட்டிகள் அவ்வப்போது சுத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும். 27 முதல் 28 டிகிரி வெப்ப நிலையில் வைத்துக் கொள்வது நல்லது அத்துடன் காற்று முகத்தில் நேரடியாக படக்கூடாது.

கேள்வி: ஆஸ்துமா நோய் முற்றிலும் குணமடையக் கூடியதா? அதற்கு வழி இருக்கிறதா?

பதில்: இல்லை. ஆனால் கட்டுப்பட்டில் வைக்க முடியும். மருந்துகள் தற்காலிக நிவாரணம் தரக்கூடியவை மட்டுமே.வாழ்க்கை முறையை ஆஸ்த்துமாவிற்கு தக்கதாக மாற்றிக்கொள்வது மிக முக்கியமானது. மன அழுத்தம் தவிர்க்கப் பட வேண்டும். ஆஸ்துமா நோயாளிகளின் பெற்றோர்கள் வாழ்க்கைத்துணைகளுக்கு இதில் அதிக பொறுப்புணர்ச்சி தேவை.

ஆஸ்துமா பற்றிய வீடியோவை காண கீழே சுட்டவும்(கிளிக் செய்யவும்)