ப்ராக்கோலி நீரிழிவு, புற்றுநோய், இதயநோய், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் ரத்த அழுத்தம் போன்றவற்றை வர விடாமல் தடுப்பதில் முக்கிய பங்களிக்கிறது.

ப்ராக்கோலியில் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களை தடுக்க Sulfophane என்ற கலவை உள்ளது. இது, எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும்.

கால்சியம் மற்றும் வைட்டமின் கே அளவு ப்ராக்கோலியில் அதிகம் உள்ளது.

இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. இது ஆஸ்டியோபொரோசிஸ் (Osteoporosis) என்னும் நோய் வராமல் தடுக்க உதவும்.

ப்ராக்கோலி வைட்டமின் டி குறைப்பாட்டை தீர்க்க உதவும். இதில் அதிக அளவில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் கே, வைட்டமின் டியின் வளர்சிதையை சமநிலையில் வைக்க உதவுகிறது.

ப்ராக்கோலி புற்று நோயைத் தடுக்கும் பண்பு நிறைந்தது. இதற்குக் காரணம் இதில் உள்ள Glucoraphanin என்னும் பொருள்.

இந்தக் கூறு H.pylori என்னும் கிருமியை உடலில் இருந்து வெளியேற்றும் திறன் கொண்டது. இந்தக் கிருமி வயிற்றில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது.

இதில், Indole 3 carbinol என்னும் என்சைம் உள்ளது. இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கும் திறன் கொண்டது.

ப்ராக்கோலியை வேக வைத்து உண்டால் அது உடலுக்கு மிகவும் நல்லது.

மற்ற காய்களைக் (Cabbage, Cauliflower) காட்டிலும் வைட்டமின்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் (Flavonoids) நிறைந்து உள்ளன.

இதில் Carotene, Lutein, Zeaxanthin ஆகிய சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இதில் உள்ள தாவர ஊட்டச்சத்துகள் (Phytonutrients) நோய் எதிர்ப்பு அமைப்புக்கு நல்லது.

தைராய்டு உருவாக வழிவகுக்கும் எந்த உணவும் goitrogenic உணவு என்று அழைக்கப்படுகிறது.

Goitrogenic உணவுகள் தைராய்டு வீக்க நோய்க்கு காரணியாக இருக்கும் Goitrogen என்னும் கலவையைக் கொண்டிருக்கும்.

Goitrogens சில உணவுகளில் இயற்கையாக இருக்கும் அல்லது மருந்துகள் உட்செலுத்தப்பட்டிருக்கும்.

இது தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டில் தலையிடும். அது தைராய்டு சுரப்பி அல்லது தைராய்டு ஹார்மோன் உற்பத்தியின் போது அயோடின் சேர்க்கும்.

அது செயல்பட இது ஆன்டிபாடிகளை தூண்டுகிறது. இந்த நிலையில் தைராய்டு சுரப்பி தைராய்டு ஹார்மோனை, போதுமான அளவு உற்பத்தி செய்ய முடியாது.

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் தைராய்டு ஹார்மோனை போதுமான அளவுக்கு உற்பத்தி செய்ய முடியாது.

இந்த நிலையில் தைராய்டு சுரப்பி அதில் உள்ள அணுக்களை பெருக்கச் செய்யும். இதனால் வீக்கம் ஏற்படும். இதுவே தைராய்டு உருவாக்கத்துக்கு வழி வகுக்கும்.

ஆதாரம் : பொதுமருத்துவம் - நாளிதழ்