முன்னுரை தொற்று நோய் என்பது நோய் வாய்ப்படுதல் குறிப்பிட்ட தொற்று நோய்க்கிருமிகளின் மூலம் அல்லது நச்சுத் தன்மையுள்ள பொருட்களின் மூலமாகவோ, நேரடியாக அல்லது ஒரு மனிதனிடமிருந்து அல்லது விலங்கிற்கோ மறைமுகமாகவும் பரவுதல் தொற்று நோய்கள் என்று பெயர். இவைகள் நீர், காற்று, புழு பூச்சிகள், பொருட்கள் மூலமாக பரவுவதாக பிரிக்கலாம். இவைகள் புழு பூச்சிகள் மூலம், வாய், ஆசனவாய், ஒட்டுண்ணி, காற்று அல்லது தூசி, விலங்குகளின் மூலம் தொற்றுநோய் பரவும் குறியீட்டுச் சொற்கள் நோய்த்தொற்று (Infection) நோய் : நுண்ணனுக்கள் உடலினுள் நுழைதலை நோய்த்தொற்று என்று குறிப்பிடுகிறோம் (மனிதன் அல்லது விலங்குகளின் மூலமாக). கலத்தல் : உடலின் மேற்பரப்பில் ஏற்படக்கூடிய நோய்த்தொற்று அதோடு அல்லது துணி வகைகள், படுக்கை, பொம்மைகள், அறுவை சிகிச்சைக்காக பயன்படும் பொருட்கள் அல்லது துணிகள் அல்லது பயன்படுத்திய பொருட்கள் அல்லது நீர், பால் மற்றும் உணவுகளின் மூலம் பரவுதல். தொற்று வளருதல் : மனிதனில் அல்லது விலங்கில் தொற்று நோய் கிருமி வளர்ந்து, இனப்பெருக்கம் அடைதல் தொற்று வளருதல் ஆகும். ஆர்த்ரோபோட்ஸ் உடலின் மேற்புறத்திலும், துணிகளிலும் வளர்கிறது எடுத்துக்காட்டு இஞ்சுமைட், தொற்று வளரும் இடம் (Host) : மனிதன், விலங்கு, பறவை, ஆர்த்தோ போர்ட்ஸ் இவைகளில் தொற்று நோய் உண்டாக்கக்கூடிய கிருமி வளர்தல் ஆகும். தொற்று நோய்கள் : தொற்று நோய்கள் என்பது நோய் உண்டாகக் கூடிய காரணிகள் (Micro Organisms) அல்லது நச்சு தன்மை ஒரு மனிதனிடமிருந்து மற்றொரு மனிதனுக்கோ, ஒரு விலங்கினத்திலிருந்து மற்றொரு விலங்கிற்கோ அல்லது சுற்றுப்புறச் சுழலிருந்து மனிதனுக்கும், விலங்கிற்கும் ஏற்படக் கூடிய நோய்கள் ஆகும். கொள்ளை நோய் : ஒரே இடத்தில் ஒரே காலத்தில் பலர் ஒரே நோயினால் பாதிக்கப்பட்டு, அந்நோய் பிற இடங்களையும் பாதிக்கும். இது கொள்ளை நோய் எனப்படும். எண்டமிக் (Endemic) : ஒரே இடத்தில், ஒரே காலத்தில் பலர் ஒரே நோயினால் தாக்கப்படுவது எண்டமிக் எனப்படும். ஸ்போராடிக் : ஸ்போராடிக் என்பது நோய் பரவுதல். அந்நோய் தனிப்பட்ட இடத்திலும், எல்லா இடங்களிலும் ஆங்காங்கே சிதறி காணப்படுதல். உலக கொள்ளை நோய் : நோய் தொற்றானது உலகமெங்கும் பரவுமானால் அது உலக கொள்ளை நோய் எனப்படும். விலங்கினால் ஏற்படும் நோய் பரவுதல் (Zoonosis) : நோய்த் தொற்றானது இயற்கை சுழலில் முதுகெலும்பு உள்ள பிராணியிடமிருந்து மனிதனுக்கு பரவுதல். ஒழித்தல் : எங்கெல்லாம் நோய் பரவுகிறதோ அங்கெல்லாம் நோய்ப் பரவுதற்கான காரணிகளை ஒழித்தல். நோய் சுமக்கும் காரணிகள் : தன்னிடத்தில் எவ்வித நோய் அறிகுறியுமின்றி உடலின் உட்புறத்திலோ, வெளியிலோ நோய் நுண்ணுயிர்களைச் சுமந்து செல்லும் மனிதர்களை நோய் சுமக்கும் காரணி மனிதர் என்கிறோம். நீரினால் பரவும் நோய்கள் டைப்பாய்டு ஈரம் டைப்பாய்டு ஜூரம் என்பது தீவிர நோய் தொற்று நோய் பரப்பும் நுண்ணுயிர் சாலமொனெல்லா டைபி. பரவும் விதம் : மலம் வாய் வழியாக அல்லது சிறுநீர் - வாய் வழியாக நோய் முற்றும் காலம் : 10-15 நாட்கள் அறிகுறிகளும், அடையாளங்களும் : தொடர்ந்து ஜீரம் 3 முதல் 4 வாரங்கள் - மேலும் அதிக காய்ச்சல், தலைவலி, இருமல் மற்றும் தொண்டைபுண், இரைப்பையில் வலி, வயிற்று வலி, மலச்சிக்கல். சிறுநீர் மற்றும் மலத்திலும், நுண்ணுயிர் பரிசோதனை செய்யும் போது பாசிடிவ் வாக இருக்கும். மண்ணீரல் வீக்கமடைதல், வயிற்று உப்புசம் , தொட்டால் வலி, நாடி துடிப்பு குறைதல், பலவீனமான நாடித்துடிப்பு. ரோஜா நிறப்புள்ளிகள் - 2வது வாரத்தில் தெரியும் சிக்கல்கள் : 30% சிகிச்சை பெறாமல் இருப்பவர்கள், குடலில் இரத்த ஒழுக்கு அதிர்ச்சி மெலினா (கரும் சிவப்பு நிறத்தில் இரத்தத்துடன் கூடிய மலம்). குடலில் ஓட்டை விழுதல் - மூன்றாவது வாரம் சிறுநீர் தேக்கம், நிமோனியா, திரோம்போபிளிபைட்டிஸ், மையோகார்டைட்டிஸ், சைக்கோசிஸ், கோலிசிஸ் டைட்டிஸ், நெப்ரைட்டிஸ், ஆஸ்டியோ மைலைட்டிஸ். சிகிச்சை : மருந்து குளோரோபினிக்கால், ஆம்பிசிலின், அமாக்சிலின், ட்ரைமெத்தோபிரிம், சல்பாமித்தாசோல் - இவ்வகை மருந்துகள் மருத்துவரின் உத்தரவின் பேரில் கொடுக்க வேண்டும். இந்த மருந்துகள் எடுத்து கொள்ளும் போது அதிக நீர் ஆகாரங்களை கொடுக்க வேண்டும். எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவு பொருட்களை கொடுக்க வேண்டும் தடுப்பு நடவடிக்கை I. தடுக்க கூடிய வழிமுறைகள் : சுற்றுப்புறசூழலை கட்டுப்படுத்துதல் நோய் தடுப்பு முறை: i) ஆரம்ப நிலையில் நோயை கண்டறிதல் ii) மலம் பரிசோதனை செய்தல் (மிகவும் முக்கியமானது) ii) அறிவித்தல் நோய் வந்தவுடன் அறிவித்தல் மிகவும் முக்கியமானது. iv) தனித்து வைத்தல் : கூடுமானால் தனி அறையில் (அல்லது) பொது வார்டில் தனிப்படுத்தும் முறை கவனிப்பு, கைக் கழுவதிலும், கழிவுகளைத் தொற்று நீக்குவதிலும், தின கவனம் செலுத்தப்பட வேண்டும். தொற்று நீக்கம் : நோயாளிகள் பயன்படுத்திய பொருட்கள், துணி வகைகளை 5% லைசாலில் 2 மணி நேரம் ஊறவைத்து கழுவ வேண்டும். மலத்தின் மூலம் மற்றும் சிறுநீரின் மூலம் ஏற்படும் நோய் பரவும் முறைகளை அழித்தல் அழுக்கடைந்த துணிவகைகள் மற்றும் ஆடைகள் 2% குளோரின் ஊறவைத்து உலர வைத்து நுண்ணுயிரறச் செய்தல் அவசியம். கை கழுவும் முறை முக்கியமானது. 3-4 மாதங்கள் மலம் மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்ய வேண்டும். நோய் சுமக்கும் மனிதனிடம் அதன் வீரியம் இருந்தால் கண்டிப்பாக பரிசோதனை செய்ய வேண்டும். அம்பிசிலின் அல்லது அமாக்சிலின் (1 - 2 கிராம் ஒரு நாளைக்கு) ஆறு வாரங்கள் கொடுக்க வேண்டும். அப்பொழுது தான் நோய் வராமல் பாதுக்காக்க முடியும். நோய் வராமல் தடுக்க தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். முக்கியமாக உணவு, நீர், பால் உள்ளிட்ட உணவுப் பொருட்களை நன்கு காய்ச்சி கொடுக்க வேண்டும். சரியான கழிப்பிடங்களை பயன்படுத்துதல். கைகளை நன்கு கழுவுதல் (மலம் கழிப்பதற்கு முன்னும் பின்னும்) வேண்டும். ii)கழிவுகளை அகற்றுதல் : நீரையும் பாலையும் கொதிக்க வைத்து குடித்தல் * தூய்மையான உணவை மீண்டும் உண்ணுதல் • சரியான கழிப்பிடங்களை பயன்படுத்துதல் நோய் தடுப்பு : பாலிசாக்ரைட்ஸ் -1 தவணை மேல் தோலுக்கடியில் அல்லது தசைவழியாக 28 நாட்களுக்குள் போடுதலின் மூலம் நோய் பரவும் வழிமுறைகளை தடுக்கலாம். குழாய் மாத்திரை லிவ்வுரல் Ty21 1,3,5 நாட்கள் வயதுக்கு ஏற்றாற்போல் சாப்பிடுவதற்கு முன் கொடுக்க வேண்டும். (பால், தண்ணீர்) குழாய் மாத்திரைகளை மூன்று வாரங்கள் தொடர்ந்து எடுக்கப்பட வேண்டும். காலாரா கடுமையான, மிகவும் தீவிரமாக பரவும் நோய் தொற்று. இதன் நுண்ணுயிர் பெயர் அல்லது நோய் பரப்பக்கூடிய நுண்ணுயிரின் பெயர் விப்ரியோ காலாரா. பரவும் விதம் : வாய் வழியாக, மலத்தின் மூலம் நோய் முற்றும் காலம் : சில மணி நேரம் முதல் - 5 நாட்கள் வரை. அறிகுறிகள் * அதிகமாக பேதி (அரிசி கஞ்சி போன்று மலம் கழிதல்) * வாந்தி * கண் சுருங்கி இருத்தல் * தோல் வெளிறிய நிலை * குரலில் மாற்றம் * கை, கால்கள் சில்லிட்டு போதல் * நாடித்துடிப்பு அதிகமாக இருத்தல், பலவீனமடைந்து இருத்தல் * குறைந்த இரத்த அழுத்தம் * சிறுநீர் வெளியேற்றம் குறைதல் * தசைப்பிடிப்பு குழந்தைகளுக்கு - காய்ச்சல், வலிப்பு அல்லது கோமா, குறைந்த தசைப்பிடிப்பு சிகிச்சை : * அதிகப்படியான திரவங்களை (Elctrolytes) கொடுத்தல் * ஆண்டிபயாடிக் டெட்ரோ சைக்கிளின் (அல்லது) செப்ட்ரான் 250mg - 500mg வாய்வழியாக (அல்லது) ஊசி வழியாக மருத்துவரின் உத்தரவின் பேரில் கொடுக்க வேண்டும். * ஊட்டச்சத்து அரிசி கஞ்சி) உப்பு கலந்த நீர், மோர் * தாய்ப்பால் குழந்தைகளுக்கு கட்டுப்படுத்தும் முறை நோய் அறிதல் : சந்தேகப்படுகிறநோயாளிகளை அறிந்து நோய்க்கான முறைகளை கையாள வேண்டும். முக்கியமாக விப்ரியோ காலரா மலத்தில் தங்கி இருக்கிறதா என்று நோய் கிருமியை கண்டறிய வேண்டும். அறிவித்தல் : காலரா போன்ற தொற்று நோய்கள் வந்தால் உடனேயே உள்ளூர் சுகாதார அலுவலருக்கோ, கிராம முனிசிப்புக்கோ செய்தியனுப்பப்பட வேண்டும். நோய் பரவுதலைத் தடுக்கவும், நோய்க்கான காரணங்களை அறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வழிவகை செய்ய வேண்டும். ஆரம்ப நிலையில் கண்டறிதல் : கொஞ்சம் நிரந்தரமாக மற்றும் மிகவும் அதிகமாக நோய் தொற்று இருப்பின் ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். சிகிச்சை கூடங்களை அமைத்தல் : சமுதாயத்தில் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் கொள்ளை நோயாக இருப்பதால் மிகவும் குறைவாக உள்ள நோயாளிகளுக்கு உடலில் நீரற்ற நிலை ஏற்படின் வீட்டிலேயே சிகிச்சை அளிக்க வேண்டும். அத்துடன் வாய் வழியாக நீர் ஆகாரம் கொடுக்கலாம் (Electrolytes) மிகவும் அதிகமாக நீருள்ள நிலையில் பாதித்து இருக்கும் நோயாளிகளுக்கு சிரை வழியாக திரவம் அளிப்பதோடு இல்லாமல் அருகில் இருக்கம் சிகிச்சை கூடத்திற்கோ மற்றும் மருத்துவ மனைக்கோ அனுப்புதல் வேண்டும். காலரா ஒரு கொள்ளை நோயாக இருப்பதால் சுகாதார பணியாளர் குழுவை அமைத்து நடமாடும் ஊர்தியின் துணையுடன் மாவட்ட அளவில் சென்று பணி செய்ய வேண்டும். அவசர சிகிச்சை : நீரற்ற நிலைக்கு குணப்படுத்தும் சிகிச்சை) : வாய் வழியாக அல்லது சிரை வழியாக ஆண்டிப்பயாடிக் கொடுக்க வேண்டும். அப்போது தான் வாந்தியை நிறுத்த முடியும். 3-4 மணிக்கு ஒரு முறை வாய் வழியாக நீரேற்றம் சிகிச்சை அளிக்க வேண்டும். ஆன்டிபயாடிக் - குழந்தைகளுக்கு - டெட்ராசைக்கிளின் 125mg 1 கிலோக்கு / 3 நாட்கள் - ட்ரைமெத்தோபிரிம் 5 மி.கி./கி.கி சல்ஃபாமெத்தோசோல் 25 மி.கி./கி.கி பெரியவர்களுக்கு - டாக்சிசைக்கிளின் உடனடியாக - டெட்ரா சைக்கிளின் 500 உடனடியாக - ட்ரைமெத்தோபிரிம் 160 3நாட்கள் - சல்ஃபா மெத்தோசோல் 600mg -ஃபில் ராஜொலிடோன் 100mg OIDx 3 நாட்கள் நோய் பரிசோதிக்கும் முறை : பரவும் வழிமுறைகள் எல்லாம் எப்படி தடுக்க வேண்டுமென்று கண்டறிதல் துப்புரவு பணிகள் a. நீரைக்கட்டுப்படுத்துதல் - தூய நீரும், கிணறுகளை பாதுகாத்தல் தூய நீரை பாதுகாக்கும் முறைகள் (மருந்துகள் தெளித்தல், தொற்று நீக்கம் செய்தல் (குடிக்க, துணி துவைக்க, குளிக்க, சமையல் செய்ய b. கழிவுகளை அகற்றுதல் மலம் கழிப்பிடங்களை பயன்படுத்துதல், கண்ட இடங்களில் கழிவுகளை கழிப்பது தவறு என்பதை உணர்த்துதல், குழி தோண்டி புதைக்கும் முறைகளை கையாளுதல். c. உணவு துப்பரவு முறைகள் : சுத்தமான இடங்களில் பொருட்களை விற்பனை செய்யப்பட வேண்டும், கண்ட இடங்களில் பயிரிடும் உணவுப் பொருட்களை தடுத்தல், உணவு சமைத்தல் விதிமுறைகளை கையாண்டு, உணவை பாதுகாத்து, உணவை எவ்வாறு கையாளுவது என்பதை தெரிந்து இருத்தல். d. தொற்று நீக்குதல் : நோயாளிகள் பயன்படுத்திய எல்லா பொருட்களையும் தொற்று நீக்கம் செய்ய வேண்டும். டெட்டால் கரைச்சலை பயன்படுத்த வேண்டும். e. மருத்துவ சிகிச்சை : டெட்ராசைக்கிளின் 3 நாட்கள் இரண்டு வேளை கொடுக்க வேண்டும் f. காலரா : தடுப்பு ஊசி பாதுகாப்பு தோல் தடுப்பு ஊசி மருந்து (Vaccine) : விப்ரியோ காலரே 01/m1 Total 12,000 மில்லியன் விப்ரியோஸ் Million Vibrios வாய்வழியாக : துணை பிரிவு காலரா டாச்சின் (welrBs) கொடுக்க வேண்டும். 1bd/10-14 days g, சுகாதார போதனை *வாய் வழியாக நீரேற்றம் சிகிச்சை மேற்க்கொள்ளுதல் . *ஆரம்ப நிலையில் சரியான முறைப்படி சிகிச்சை அளித்தல் *நல்ல உணவு பழக்கவழக்கங்களை மேற்க்கொள்ளுதல் *சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் மற்றும் மலம் கழிப்பிதற்கு முன்னும், பின்னும் கைகளை நன்கு கழுவுதல். *நன்கு சமைத்த உணவு உட்கொள்ளுதல் மற்றும் பாதுகாப்பான குடிநீர் வசதி. *1980-81 ஆண்டு தேசிய அளவிலான காலரா தடுப்பு முறை அமுலாக்கம் செய்யப்பட்டது. தற்போது அதை மாற்றி அமைத்து "பேதி நோய்க்கான தடுப்பு முறை" என்று மாற்றி வழங்கப்பட்டது. வாய் வழியாக நீரேற்றம் சிகிச்சையானது முதலில் கொண்டு வரப்பட்ட சிகிச்சையாகும். கல்லீரல் அழற்சி ஆரம்பநிலையில் கல்லீரலை பாதிக்கக்கூடிய சிஸ்ட்மிக் நோயாகும். நோய் பரப்பும் நுண்ணுயிரியின் பெயர் : ஹெப்படைட்டிஸ் வைரஸ் ,எண்ட்ரோ வைரஸ் பரவும் விதம் : மலம் - வாய் வழியாக, நேரடித் தொடர்பு நோய் முற்றும் காலம் : 15 to 50 நாட்கள் சாதாரணமாக 28 நாட்கள். அறிகுறிகளும் அடையாளங்களும் : காய்ச்சல், சளிபிடித்தல், அதிகப்படியான பசியின்மை , குமட்டல் மற்றும் வாந்தி, வலது ஹைப்போ காண்டிரிக் பகுதியில் வலி பரவும் விதம் : மலம் வாய் வழியாக, நேரடித் தொடர்பு நோய் முற்றும் காலம் : 15to 50 சாதாரணமாக 28 நாட்கள். அறிகுறிகளும் அடையாளங்களும் : காய்ச்சல், சளிபிடித்தல், அதிகப்படியான பசியின்மை, குமட்டல் மற்றும் வாந்தி, வலது ஹைப்போ காண்டிரிக் பகுதியில் வலி, சிறுநீர் அடர் மஞ்சள் நிறமாக வெளியேறுதல், வெளிரிய மலம் வெளியேற்றம். சிகிக்சை : நோயாளிக்கு முழு ஓய்வு தேவை. சமச்சத்துள்ள உணவு பரிந்துரை செய்யப்படுகிறது. தடுப்பு நடவடிக்கைகள் a. நோய் உற்றோரின் மலத்தை தகுந்த முறையில் அப்புறப்படுத்துவதின் மூலம் நோய் பரவுதலை தடுக்கலாம். b. அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிக்கு சிகிச்சை அளித்தல். C. மறக்காமல் தகுந்த முறையில் சிகிச்சை அளித்தல். d. குறைந்த சமுதாய பொருளாதார சூழ்நிலையை தெரிந்து அறிதல். தொற்று நீக்கம் செய்வதற்கு 0.5% சோடியம் ஹைப்போ குளோரைடு பயன்படுத்த வேண்டும். பரவும் விதத்தை தடுக்கும் முறை : நோயாளியை கவனித்த பின் கைகளை நன்கு சுத்தமாக கழுவுதலின் மூலம் நோயாளியிடமிருந்து மற்றவர்க்கு நோய் பரவுதலை தடுக்கலாம். பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் சுற்றுப்புறதூய்மை கழிவுகளை தகுந்த முறையில் அப்புறப்படுத்துதல். நீரை சுத்தப்படுத்தி அருந்துதல் வேண்டும். காய்ச்சி வடிகட்டி மற்றும் குளோரின் மருந்து கலத்தல். . c. சந்தேகப்படுகின்றநோயாளியின் தொற்று தடுக்க வழிகள் : சாதாரணமான இம்முனோ குளோபின் பயன்படுத்துவதற்கு தேவையான செய்முறைக்கு பூல்டு பிளாஸ்மா அதாவது உடல் நலமிக்க நபர் கொடுக்கும் போது மறைமுக எதிர்ப்பை பெற முடிகிறது. d. தடுப்பூசி (Vaccine): ஹெப்படைட்டிஸ் A தடுப்பு ஊசி 2 தவணைகள் (doses) 6 18 மாதங்களில் முறையாக போடப்பட வேண்டும். தீவிர பேதி நோய்கள் பேதி என்பது தீவிர நிலையிலோ அல்லது நாட்பட்ட நிலையிலோ ஏற்படுகின்ற ஓர் நோய் தொற்று ஆகும். மலம் திரவம் , வடிவில் கழிவது ஒரு நாளைக்கு மூன்று தடவைக்கு மேல் (24 hours) கழிக்கப்படுவது. நோய்பரப்பும் நுண்ணுயிர் பெயர்: பாக்டீரியா - எச்சரிஸ்சியா கோலை, ஷிஜில்லா சாலமொனெல்லா முதலியன வைரஸ்: ரோட்டா வைரஸ், அடினோ வைரஸ் முதலின், ஒட்டுண்ணி : எண்டமிபா ஹிஸ்லெட்டிகா, ஜியாடியா லேமலின் பரவும் விதம் : மலம் வாய் வழியாக, நேரடியான தொடர்பு நோய் முற்றும் காலம் : சில மணி நேரம் அறிகுறிகளும் அடையாளங்களும்: மலம் திரவ வடிவில் கழிவது. * பச்சை (அ) மஞ்சள் பச்சை கலர் அத்துடன் இரத்தமும், சீதமும் கலந்து இருப்பது * வாந்தி * காய்ச்சல் * தோல் பலவீனம் அடைதல், உலர்ந்த சருமம் மற்றும் உலர்ந்த வாய் • முள் தலைப் பகுதி குழிவுடன் குழந்தைகளுக்கு காணப்படுதல் * கண்களில் சுருக்கம் * வேகமான நாடிதுடிப்பு • எரிச்சல் மற்றும் ஓய்வுயின்மை * வெளிறிய நிலை * சுவாசம் அதிகரித்தல் * ஒழுங்கான முறையில் சிகிச்சை கொடுக்காவிடில் நோயாளி திடீரென்று சுயநினைவு அடைந்து விடுவார். சிகிச்சை: வாய் வழியாக நீரேற்றும் சிகிச்சை கையாளுதல் * அரிசி கஞ்சி வீட்டில் தயார் செய்தல் * வாய் வழியாக திரவங்களை செவிலியர்கள் தயார் செய்து அளிக்க வேண்டும். * கொதிக்க வைத்து ஆறிய நீர் 1 லிட்டர், ஒரு தேக்கரண்டி குளுகோஸ் சேர்த்து 1/4 அல்லது 1/2 கப் பேதி ஆனாலும் தொடர்ந்து குழந்தைக்கு கொடுக்க வேண்டும். Below 2 years 100-200ml கொடுக்க வேண்டும் வாய் வழியாக நீரேற்றும் சிகிச்சை ORS கரைசல் குறைந்த பட்சம் 24 மணி நேரம் கொடுத்து சரிசெய்ய வேண்டும். அதன் பிறகு அதனை சூடு படுத்துவோ அல்லது கொதிக்க வைக்கவோ கூடாது. உணவூட்டல் 1. தேங்காய் நீர் அல்லது இளநீர் 2. அரிசி கஞ்சி 3. பருப்பு நீர் 4. குழகுழப்பான வாழைப்பழம் 5. தேநீர் 6. காலை நேரம் உணவு தொடர்ந்து கொடுக்க வேண்டும். மருந்துகள் பாக்டீரியா நோய்த்தொற்று: ஆம்பிசிலின், குளோரோபிளிக்கால் அறிகுறிகளுடன் சிகிச்சை அளிப்பது காய்ச்சல், வாந்தி இருந்தால் மட்டுமே. புரோட்டோசோவா நோய்த்தொற்று : மெட்ரோனிடசோல் அதிக பேதி - இருக்கும் நோயாளிக்கு (அ) நபருக்கு சிரை வழி திரவம் அளிக்க வேண்டும். போலியோமைட்டிஸ்: (இளம்பிள்ளை வாதம்) இளம்பிள்ளை வாதம் என்பது தீவிர வைரஸ் நோய்த்தொற்றாகும். இது போலியோ வைரஸ் என்ற வைரஸினால் பரவுகிறது. இது ஒரு கிரிப்பிளிங் நோயாகும். நோய் பரப்பும் நுண்ணுயிர் பெயர்: 3 வகையான போலியோ வைரஸ்கள் (டைப்1,II,III0 ) நோய் முற்றும் காலம் : 7- 21 நாட்கள் சில சமயங்களில் 3 to 35 நாட்கள். பரவும் விதம் : மலம் வாய் வழியாக அழுக்கடைந்த உணவு, விரல்கள் சிதறல் வகை : இருமும்போதும் மற்றும் தும்மும்போதும் பரவுகிறது (தீவிர நிலையில் அறிகுறிகளும், அடையாளங்களும் 1. சுவாச சம்பந்தப்பட்ட - நீர்க்கட்டு கொரைஜா), தொண்டைப்புண் (அ) இருமல் 2. இரைப்பை குடல் - வாந்தி, பேதி (அ) மலச்சிக்கல் 3. இதர அறிகுறிகள் - காய்ச்சல், தலைவலி, மயக்கம், ஓய்வின்மை , எரிச்சல் மற்றும் வியர்த்தல் 4. வலி - கழுத்து, கால்கள், பின்புறம் பாதிக்கலாம். 5. ஹைப்பர் பேரஸ்தி சியா வாதம் மற்றும் தண்டுவடம் நெருக்கப்படல் 6. நாடித்துடிப்பு அதிகரிப்பு 7. அதிகப்படியான வியர்வை திமிர்வாதம் சிகிச்சை : வலி நீக்கிகள் மற்றும் உறக்கம் உண்டாக்கிகள் இவை எல்லாம் வலியைக் குறைத்து, தூக்கத்தை வரவழைக்கக்கூடும். மலச்சிக்கல் - இலேசான மலமிளக்கிகள் கொடுக்க வேண்டும். சுவாச சம்பந்தப்பட்ட கோளாறுகளை ஆண்டிபயாடிக் மருந்துகளை கொடுத்து தடுக்கலாம். சுவாசம் நின்று போய் விட்டால் செயற்கை முறையில் சுவாசம் கொடுத்தல். தடுக்கும் முறை : துப்புரவு: அனைவருக்கும் சுகாதார முறைப்படி அமைந்த கழிவறைகள் மற்றும் பாதுகாப்பான குடிநீர் மற்றும் உணவு தேவைகள். சுத்தத்தை கடைப்பிடிக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன்னும், பின்னும் கைகளைக் கழுவ வேண்டும். மலம் கழித்தப் பின் கைகளை கழுவுதல், நோயுற்றோரை தனிமைப்படுத்துதல், மற்றும் தொற்று நீக்கம் செய்தல் குழந்தையின் மலத்தை தகுந்த முறையில் அப்புறப்படுத்துதல் (புதைத்தல், எரித்தல் வேண்டும். சுகாதார போதனை : சுற்றுப்புற சுகாதாரத்தை பேணி பாதுகாக்க வேண்டும். சுகாதார பணியாளர்களை கொண்டு குழு அமைக்கப்பட்டு, பேதியை தடுக்கவும் மற்றும் குழந்தைகளுக்கு நோய்கள் வராமல் பாதுகாக்கவும், தாய்ப்பாலின் அவசியம் பற்றி போதனை அளிக்க வேண்டும். தாய்ப்பால் கொடுக்கும் முறையையும் கற்றுத்தருதல் வேண்டும். சுத்தமான நீர், அதிகப்படியான நீர் சுத்தமான முறையில் பயன்படுத்தல் வேண்டும். கழிவறைகளை பயன்படுத்துதல் தகுந்த முறையில் மலத்தை அகற்றுதல். நோய்த்தடுப்பு : தட்டம்மை நோய்த்தடுப்பு முறைகளை கையாள்வதின் மூலம் பேதியைக் கட்டுப்படுத்தலாம். பூச்சி தடுப்பு : மனிதனின் மலத்தில் உட்கார்ந்து விட்டு, உணவுப் பொருட்களை பூச்சிகள் அடையும் வழிமுறைகளை கட்டுப்படுத்துதல். தடுப்பு பராமரிப்புகள் : நோய்த்தடுப்பு அளிப்பதன் மூலம் இளம்பிள்ளை வாத நோயை தடுக்கலாம். நோய்த் தடுப்பு மருந்தை மிகவும் பாதுகாப்பான முறையில் பயன்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு 6 மாதங்களுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்க வேண்டும். இரண்டு வகையான வாக்சின்ஸ் பயன்படுத்தப்படுகிறது. 1. செயலிழக்கப்பட்ட (சால்க் போலியோ வாக்சின் (IPV) 2. வாய் வழியாக போலியோ (சாபின்) வாக்சின். தடுப்பு பராமரிப்பு 1. தகுந்த துப்புரவு பணிகளை கையாளுதல். 2. நோயை தடுக்க கைக் கழுவும் முறை 3. சுகாதார முறைப்படி அமைந்த கழிவறைகள் பயன்படுத்துதல் மற்றும் பாதுகாப்பான குடிநீர் வசதி. 4. உணவினால் பரவும் நோய்களை தடுத்தல், அதிக நெருக்கடி, மிகவும் மோசமான கழிவறைகள் இவைகளை சரிசெய்து இந்நோய்கள் பரவாமல் , வராமல் பாதுகாக்க வேண்டும். உணவு நச்சடைதல் என்பது தீவிர இரைப்பை குடல் சம்மந்தப்பட்ட கோளாறு மட்டுமல்லாமல், இவை பாக்டீரியா (அ) நச்சுப் பொருட்களினாலும் பரவக்கூடியது. (எ.கா) சாலமொனெல்லா, ஸ்டெபாலோகாக்கஸ், க்ளாஸ்ட்டியம், பொட்டிலினம். நோய் முற்றும் காலம் :1 - 24 மணி நேரம் அறிகுறிகள்: வாந்தி, குமட்டல், அரிப்பு, தொட்டால் வயிற்றில் அதிக வலி, நீரற்ற நிலை ஜீரம் அதிகரிப்பு, தலைவலி, நாடித்துடிப்பு அதிகரிப்பு. மலத்தில் இரத்தம், சீதம் காணப்படுதல் ஜீரணக்கப்படாத உணவு பொருட்கள் காணப்படுதல். சிகிச்சை : வாய் வழியாக நீரேற்றம் சிகிச்சை மற்றும் சிரை வழி திரவம் அவசியம் தேவை. ஆன்டிபயாடிக் மருந்துகள் மருத்துவரால் உத்தரவிடப்படலாம். எளிதாக செரிக்கக்கூடிய சமச்சத்துள்ள திரவ ஆகாரம் கொடுத்தல். a.தடுப்பு பராமரிப்பு: i) இறைச்சியை பார்வையிடல் இறைச்சி வகைகளை நன்கு சமைக்கப்பட்டு உண்ணும் போது, நோய்த் தொற்று வராமல் பாதுகாக்க முடியும். ii) தன் சுத்தம் : தன் சுத்தத்தை கடைப்பிடித்து, கை சுத்தம் மற்றும் உணவை பாதுகாக்கும் வழிமுறைகளை மேற்க்கொள்ளுதல். iii) உணவு கையாளுதல் : தொற்றுள்ளவர்கள் சமைக்கும் போது நோய்கள் காயத்தின் மூலம் புண்ணின் மூலம், பேதி, சீதபேதி, தொண்டை நோய்த்தொற்றின் மூலம் பரவும் , அதனால் அதிகாரிகள் உணவை பரிசோதிக்கப் பட்ட பிறகு சாப்பிட வழி வகை செய்ய வேண்டும். iv) உணவு கையாள வழிமுறைகள்: சுகாதாரமாக உணவைக் கையாளுபவர்கள், சுத்தமான கைகள், பயன்படுத்தும் போது நோய்த்தொற்றை அதிகபட்சமாக குறைக்கலாம். vi) சுகாதார போதனை : உணவை கையாளும் போது சுகாதாரமாக உணவை கையாள வேண்டும். சுத்தமான கைகள், ஆடைகள், பாத்திரங்கள் போன்றவை தன் சுத்தம் முக்கியமானது. b. குளிர் சாதனப்பெட்டி, பாக்டீரியா உணவு நச்சடைதல் நிலையை போதுமான வெப்பநிலையில் பயன்படுத்தினால் கிருமிகள் இல்லாமல் தடுக்கலாம். மிதமான வெப்பநிலையில் உணவை சேமிக்கக் கூடாது. பாக்டீரியாக்களை வளர்ச்சியை தடுக்க குறைந்த பட்சம் 4C வெப்பநிலையில் வைக்க வேண்டும். அதற்கு மேல் வெப்பநிலையை அதிகப்படுத்தக் கூடாது. ஒட்டுண்ணிகளால் பரவும் நோய்கள் அமீபியாஸிஸ் அது ஒரு பொதுவாக காணப்படக்கூடிய நோய்த்தொற்று. இவை மனித இரைப்பை குடல் சம்பந்தப்பட்ட கோளாறு ஆகும். பரவும் நுண்ணுயிரி பெயர் : என்டமிபா ஹிஸ்டலைட்டிகா நோய் முற்றும் காலம் : குடலில் புண் இருந்தால் பல வருடங்கள் ஆகும். மேலும் சிகிச்சை அளிக்கப்படாத கண்டுபிடிக்கப்படாத கேஸ்களிலும்). பரவும் விதம் : மலம், வாய் வழியாக, பாலினத்தின் மூலம், ஒரே பாலினம் உறவு வைத்தல் ஆண் ஆணுடன்), ஈக்களினால், பூச்சிகள் எலிகள் மற்றும் அழுக்கடைந்த உணவு மற்றும் நீர். அறிகுறிகள்: வலி அதிகம் காணப்படுதல், அடி வயிற்றில் மந்தமான வலி, பேதி நீர்த்த, துர்நாற்றத்துடன், இரத்தமும், சீதமும் சேர்ந்து காணப்படுதல். சிகிச்சை : ப்ளாஜெல் 800mg tds/5-7 days (ஒரு நாளைக்கு மூன்று முறை தடுப்பு முறைகள் 1. மனித மலத்தை தகுந்த முறையில் அகற்றும் பணி. 2. போதுமான, பாதுகாப்பான நல்ல குடிநீர் வசதி 3. உணவை சுத்தமான முறையில் தயாரித்தல் 4. ஈக்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் உணவைப் பாதுகாத்தல். 5. குறிப்பாக குழந்தைக்களுக்கான உணவை தயாரிப்பதிலும், கையாளுவதிலும் சுகாதார முறைகளை மேற்கொள்ளல் 6. சுகாதார போதனை அளித்தல், கழிவு அறைகள் பயன்படுத்துதல் 7. பழவகைகளும், மற்றும் காய்கறிகளும், பாதுகாப்பான முறையில் பயன்படுத்துதல் 8. பூச்சிகள் வராமல் தடுத்தல் தடுப்பு பராமரிப்பு : நோய்க் கிருமிகளை தன்னுள் கொண்டவர்களுக்கு 2-3 மாதங்கள் சிகிச்சை அளிக்க வேண்டும் கொக்கை புழு நோய்த்தொற்று சிறுகுடலை பாதிக்கக் கூடிய ஒரு நாட்பட்ட வியாதி ஆகும். இதன் மூலம் மனிதனுக்கு ஒரு வகையான அ) பல வகைப்பட்ட நோய்த்தொற்று பாதிக்கலாம். நோய் பரப்பும் நுண்ணுயிரி: அன்சைக்லோடோமா டியோடினே ரெகிகேட்டார் அமரிகேனஸ் நோய் மற்றும் காலம் 6 வாரங்கள் பரவும் விதம்: தொற்றுள்ள முட்டை மண்ணிலிருந்து மனிதன் காலணி அணியாமல் இருப்பதால் தோலின் வழியாக மனிதனுக்குள் பரவுகிறது. அறிகுறிகளும், அடையாளங்களும் 1. சிறுகுடல் உள்ள ஜீனம் பகுதியை பாதிக்கும் 2. சிறுகுடலில் புண், நாட்பட்ட இரத்த இழப்பு, இரும்புச்சத்து குறையினால் இரத்த சோகை 3. பலவீனம், முகம் வீங்கிய நிலையில் இருத்தல் 4. வாயு நீக்கி, மலச்சிக்கல், பேதியின் போது வயிற்றில் வலி. 5.கால்களில் வீக்கம் மற்றும் தொடும் போது வலி 6.உடல், நாக்கு, கண் வெள்ளைப்பகுதி வெளிரிப்போதல் 7.மிதமான காய்ச்சல், போஷாக்கு குறை 8.பசியின்மை 9. தவறான உணவூட்டம் 10. உடல், மன வளர்ச்சி குறைவால் தாமதமான பூப்பு நிலை 11. குறைந்த நோய் எதிர்ப்பு திறன் காணப்படுதல். சிகிச்சை : - மருந்து மெபன்டசோல் - கொக்கிப் புழுவினால் பாதிக்கும் இரத்த சோகைக்கு இரும்புச் சத்தும் மற்றும் போலிக் அமிலம் கொடுத்தல் - தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளதல். - துப்புரவு நடவடிக்கைகள் -சுத்தமான கழிவறைகளை பயன்படுத்துதல் -சுத்தமான கால்வாய் வசதிகள். -மலத்தை தொற்று நீக்கம் செய்தல் மற்றும் அழுக்கடைந்த நீரினால் மற்றும் தூசியினால் பரவும் நோய்த்தொற்றை நீக்குதல். -தன் சுத்தம் மிக அவசியம் - வெளியில் செல்லும் போது காலணிகள் அணிதல் -சாப்பிடுவதற்கு முன் காய்கறிகளையும், பழவகைகளையும் கழுவிய பிறகு உண்ணுதல். -நோய் பரவக்கூடிய, தடுக்கக்கூடிய வழிமுறைகள் எல்லாம் மக்களுக்கு கற்றுத்தருதல் நாடாப்புழு நோய்த்தொற்று பொதுவாக காணப்படக்கூடிய நோய்த்தொற்று ஆகும். இவை மனித இரைப்பை குடல் சம்பந்தப்பட்ட கோளாறு ஆகும். நாடாப்புழு நோய்த்தொற்று: என்பது (அ) டினியனிசிஸ் என்பது ஒருவகையான செஸ்டோடு நோய்த்தொற்று, முக்கியமான ஒரு சுனோட்டிக் நோய்த்தொற்றாகும். நோய் பரப்பும் நுண்ணுயிரி பெயர்: டினியா சோலியம் நாடாப் புழு மற்றும் டினியா சாஜனேட்டா (மாட்டு நாடாப்புழு டினியா எக்லிமின்டோகாக்கஸ் பரவும் விதம் : நோய்த்தொற்றுள்ள உணவை உட்கொள்வதாலும், சீராக, சமைக்காத மாட்டு மற்றும் பன்றி இறைச்சியினாலும் பரவுகிறது. நோய் முற்றும் காலம் 8-14 வாரங்கள் அறிகுறிகளும் அடையாளங்களும் -வயிற்றில் வலி -ஜீரணக் கோளாறுனால் அஜீரணம், பசியின்மை மற்றும் வாந்தி - நரம்புத் தளர்ச்சி மற்றும் தூக்கமின்மை - எடைக் குறைதல் -தலைவலி -கிருமிகள் மலத்தில் காணப்படும். சிகிச்சை மாத்திரை அல்பன்டசோல் மாத்திரை குயிளாக்குயிரிள் நோயாளிக்கு தரலாம். நீண்ட தொடர்ச்சியாக மருந்து எடுப்பதால் நல்ல முன்னேற்றம் தெரியும் நோயாளியின் வயிறு மற்றும் குடல் காலியாக வைத்துக் கொள்ள வேண்டும். திரவ ஆகாரம் மட்டுமே உட்கொள்ள வேண்டும். மலத்தின் கடினமான தன்மையை நீக்குவதற்கு மருந்துகள் தரலாம். 2 மணி நேரத்திற்கு பிறகு 240 grams மெக்னீஷியம் சல்பேட் தரவேண்டும். அஸ்காரியாசிஸ் மனிதனுக்கு குடல் புழுவினால் பொதுவாக பரவக்கூடிய அ) தொற்றக் கூடிய ஒரு நோய் நோய் பரப்பும் நுண்ணுயிரி: அஸ்காரியாசிஸ லம்பிரிகாய்ட்ஸ் (Lumbricoids) நோய் முற்றும் காலம்: 2 மாதங்கள் பரவும் விதம் : மலம் வாய் வழியாக, உணவிலும், நீரிலும், முட்டைகள் காணப்பட்டு நோய்த் தொற்றை உண்டாக்கக் கூடும். அறிகுறிகளும், அடையாளங்களும் பொதுவான பலவீனம், உடல் முழுவதும் வெளிறிய நிலை, பசியின்மை , வாந்தி, வாயு நீக்கி, மலத்தின் வழியாகவோ (அ) வாந்தியின் மூலமோ புழு வெளியேற்றப்பட்டால் சில சமயங்களில் நோயாளி ஆஸ்மா நோயால் பாதிக்கக் கூடும். சிகிச்சை : பெப்ரிசின் சிட்ரேட், மெபன்ட்டஸோல் தடுப்பு முறை: 1. கழிவறைகளை பாதுகாப்பான முறையில் பயன்படுத்துதல் 2. கால்வாய் வசதிகளை ஏற்படுத்தி தருதல். தன் சுத்தத்தை பேணி காத்தல் : 1. உணவுக்கு முன், பின் கைகளை கழுவ வேண்டும். மலம் கழித்த பின்பு கை, கால்களை சோப்பு நீர்க் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். 2. காய்கறிகளை சுத்தப்படுத்திய பின் சமைக்க வேண்டும். மேலும் பழவகைகளை கழுவிய பின் உண்ண வேண்டும். 3. ஈக்களினால் பரவும் நோய்த்தொற்றை தடுத்தல் (உணவில் 4. அதிக நெருக்கடியை தவிர்த்தல் நல்ல சுத்தமான நீரை பயன்படுத்துதல். ஆதாரம் - தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்