படுக்கையில் சிறுநீர் கழித்து விடுதல், அல்லது உணர்வு இல்லாமல் சிறுநீர் கழித்துவிடுதல், குழந்தைகளிடம் பொதுவாகக் காணப்படும் ஒரு நிலைமை. இதற்கு ஆங்கிலத்தில் "Nocturnal enuresis" என்று பெயர். இது சிறுநீரகக் கோளாறினாலோ அல்லது குழந்தைகளின் குறும்பு மனத்தாலோ வருவது அல்ல. பெருமாலான குழந்தைகளுக்கு இதுதானாகவே நின்று விடும். எந்த சிகிச்சையும் தேவை இருக்காது. குழந்தை வளர வளர இந்த பழக்கம் நின்று விடும். இருந்தாலும் குழந்தைகளுக்கும் பெரியோர்களுக்கும் இது ஒரு தொல்லைதான். தொடர்ந்த அசெளகரியத்தையும் மனதிற்கு கூச்சத்தையும் இது கொடுக்கும். இதனால் அவதியுறும் குழந்தைகள் எத்தனை சதவீதம் பாதிக்கப்படுகிறார்கள். இது பெரும்பாலும் எப்பொழுது நிற்கிறது? 6 வயதிற்குக் குறைவாக இருக்கும் சிறுவர்களுக்கு இது அனேகமாக இருக்கத் தான் செய்கிறது. 5 வயதில் இருக்கும் சிறுவர்களுக்கு 15 லிருந்து 20 சதவீதம் தாக்குகிறது. வயது ஆக, ஆக, விகிதாசாரப்படி இந்த பழக்கம் குறைகிறது. 10 வயதில் இந்தப் பழக்கம் 5 சதவீதமாகவும், 15 வருடங்களில் 2 சதவீதமே இருப்பதாகவும் தெரிகிறது. வயதானவர்களில் 1 சதவீதமே இந்தப் பழக்கத்தால் அவதியுறுகிறார்கள். எவ்வகை சிறுவர்களுக்கு இது பெரும்பாலும் ஏற்படும்? எந்தக் குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களுடைய குழ்ந்தைப் பருவத்தில் இந்தப் பழக்கத்தினால் அவதியுற்றார்களோ அந்தக் குழந்தைகளுக்கு இது வரும். எந்த குழந்தைகளுக்கு நரம்பியல் குறைபாடுகளால் சிறுநீர்ப்பை நிரம்புவதை அறிய முடியவில்லையோ, அந்தக் குழந்தைகளுக்கு இது ஏற்படும். மிக ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் குழந்தைகளுக்கு இது ஏற்படும். இது பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளையே பெரிதும் பாதிக்கிறது. பிரச்னையே மனஅழுத்தத்தாலோ அல்லது உடலுக்கு ஏற்பட்ட அழுத்தத்தாலேயோதான் ஆரம்பிக்கும் அல்லது பெரிதாகும். குழந்தைகளின் சிறு அளவு 2 சதவீதத்திலிருந்து 3 சதவீதம் உள்ளவர்களுக்கு மருத்துவ காரணங்களினால் இது ஏற்படும். அதாவது சிறுநீர்ப் பாதையில் வரும் தொற்றுதல்கள், நீரிழிவு நோய், சிறுநீரகங்கள் செயலிழத்தல், சின்னஞ்சிறு புழுக்கள், மலச் சிக்கல், சிறுநீர்ப்பை, முதுகுத்தண்டில் ஒரு அசாதாரண நிலைமை அல்லது யுரீத்ராவின் வால்வுகளில் குறைபாடு, அதுவும் ஆண் குழந்தைகளுக்கு ஏற்படுவது - போன்றவையே இந்த குறைபாட்டுக்குக் காரணம். இந்தக் குறைக்கு சிகிச்சைகள் எப்பொழுது செய்யப்படுகின்றன? எவ்வகை சோதனைகள் செய்யப்படுகின்றன? மருத்துவ பிரச்னைகளோ அல்லது அமைப்புக் கோளாறுகளால் பிரச்னை தோன்றும்பொழுது ஒரு சில குழந்தைகளை தேர்ந்தெடுத்து சோதனைகள் செய்யப்படுகின்றன. அதுவும் இரவில் படுக்கையில் சிறுநீர் கழித்து விடும் குழந்தைகளே தேர்வு செய்து சோதிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு பெரும்பாலும் செய்யப்படும் சோதனைகளாவன - சிறுநீர்ப் பரிசோதனை, இரத்தத்தில் க்ளூகோஸ், முதுகுத் தண்டின் எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்டு சோதனைகள் போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன. சிகிச்சை படுக்கையில் சிறுநீர் கழித்து விடுதல் என்பது மிக மிக தானாகவே ஏற்பட்டு விடும் நிகழ்வு. எந்தக் குழந்தையையும் தயவுசெய்து கூச்சலிட்டு, தண்டித்து அல்லது அடித்துவிடாதீர்கள். குழ்ந்தையை தண்டிப்பதை விட்டு விட்டு, கூடிய சீக்கிரம் இந்தப் பழக்கம் நின்று விடும். கவலைப் படாதே" என்று அவனுக்கு தைரியமூட்டுங்கள். இந்த சிகிச்சைக்கு ஆரம்பமே குழந்தைக்கு முறையான கல்வி புகட்டுதல், குறிப்பிட்ட நோக்கில் அதற்கு மனத்தை மாற்றுதல், மற்றும் குடி நீர்ப் பருகுவதில் மாற்றங்களைக் கொண்டு வருதல் போன்றியவை. இவற்றால் படுக்கையில் சிறுநீர் கழிப்பது நிற்கவில்லை என்றால், சிறுநீர் கழிக்க ஆரம்பித்தவுடன் ஒரு அலாரம் ஒலி எழுப்புவது அல்லது மருத்துவம் என்று முயற்சி செய்யலாம். முறையான கல்வி புகட்டுதலும் மனத்தை மாற்றும் முயற்சிகளும் குழந்தைக்கு முற்றிலுமாக தகுந்த கல்வியை இந்த நோக்கில் புகட்ட வேண்டும். இது குழந்தைகளிடம் இருக்கும் குறையினால் வருவது அல்ல என்பதைப் புரிந்துகொண்டு ஆத்திரமோ கோபமோ படவேண்டாம். குழந்தைகளை தண்டனைக்கு உள்ளாக்க வேண்டாம். படுக்கையில் சிறுநீர் கழிப்பதால் குழந்தைகளுக்கு வரும் மன அழுத்தத்தைக் குறைக்கவும். குடும்பமே ஒன்று சேர்ந்து குழந்தைக்கு எடுத்துச்சொல்லி தைரியப்படுத்தி ஆசுவாசப்படுத்துதல் முக்கியம். வந்திருக்கும் பிரச்னை மிகச் சிறியது என்று உணர்த்துதல் வேண்டும். அவசியம் அதை குணப்படுத்த முடியும் என்று தைரியப் படுத்துதல் வேண்டும். டிரேப்பர்களைக் காட்டிலும் ட்ரய்னிங் பேன்டுகளை உபயோகிக்கவும். படுக்கை அறையில் எரியும் விளக்கு இரவில் நன்றாகக் கண் தெரியும்படியாக வெளிச்சத்தைக் காட்டி, டாய்லட்டுக்கு வழியை எளிதாகக் காட்டட்டும். உபரியாக ஒரு ஜோடி பைஜாமாக்கள், பெட்வுட் மற்றும் ஒரு டவல் - இவற்றை எப்பொழுதும் கைவசம் வைத்திருக்கவும். ஒருவேளை சிறுநீர் கழித்த குழந்தை எழ நேர்ந்தால், இவற்றை மாற்று உடையாக அணியலாம். படுக்கும் படுக்கை மீது ப்ளாஸ்டிக் ஷிட்டை விரித்து, படுக்கை ஈரமாகாமல் பார்த்துக் கொள்ளலாம். படுக்கையில் பெட்ஷீட்டுக்குக் கீழே ஒரு பெரிய துண்டை விரித்து மேலும் சிறுநீரை உறிஞ்சுக் கொள்ள வசதியாக வைத்துக் கொள்ளவும் தினந்தோறும் அவசியம் குளிப்பதை ஊக்குவித்து உடலில் சிறுநீரின் நாற்றம் இல்லாமல் செய்யவும். என்றைக்காவது அவன் படுக்கையில் சிறுநீர் கழிக்க வில்லையானால் அன்றைக்கு அவனுக்கு ஒரு சிறு பரிசு ஒன்றைக் கொடுக்கவும். பரிசு சிறியதாக இருந்தாலும், குழந்தைக்கு அது பெரிதாகத் தோன்றும். மலச்சிக்கலை அலட்சியம் செய்யக் கூடாது. அதை உடனுக்குடன் கவனிக்க வேண்டும். பருகப்படும் திரவங்களின் அளவு. பருகப்படும் எந்த திரவத்தையும் படுப்பதற்கு இரண்டு மூன்று மணிநேரங்களுக்கு முன்னரே பருகி விடவும். ஆனால் ஒவ்வொரு நாளும் எடுத்துக் கொள்ள வேண்டிய நீரின் அளவைக் குறைக்க வேண்டாம். காபி, டீ, கோலா பானங்களையும் சாக்லேட்டுக்களையும் மாலையில் தவிர்க்கவும். அவை சிறுநீர் கழிக்க வேண்டிய உணர்வைத் தூண்டும். படுக்கப் போகும் முன் சிறுநீர் கழித்தல் படுக்கச் செல்லும் முன் இரு முறைகள் சிறு நீர் கழிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கவும். முதல் முறை படுக்கை அறைக்குள் செல்லும் முன்னும் இரண்டாவது முறை தூக்கம் வருவதற்கு சற்று முன்பும் சிறுநீர் கழிக்கச் சொல்லவும். நாள் முழுவதுமே டாய்லட்டுக்குப் போகும் பழக்கத்தை முறையான இடைவெளிகளில் உருவாக்கிக் கொடுங்கள். குழந்தை தூங்கச் சென்றபின் மூன்று மணி நேரங்கள் கழித்து அவனை தூக்கத்தில் எழுப்பி சிறுநீர் கழிக்கச் சொல்லவும். தேவைப் பட்டால் இதற்காக ஒரு அலாரம் ஒலியை ஒலிக்கச் செய்யலாம். அலாரம் மணி ஓசை இவை குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்து விடாமல் இருக்கச் செய்யும் சாதனங்களில் மிக முக்கியமான ஒன்றாகும். 7 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்காகவே இந்த மணி ஓசை ஒலிக்கச் செய்யப்படும். இந்த அலாரத்தை இயக்க குழந்தையின் உள்ளாடையோடு ஒரு 'உணரும் சாதனம் பொறுத்தப் படுகிறது. படுக்கையில் குழந்தை சிறு நீர் கழிக்க ஆரம்பித்தவுடன், அதன் முதல் துளி இந்த சாதனத்தால், "உணரப்படுகிறது. அப்படி உணர்ந்தவுடன் அலாரம் மணி ஒசை எழுப்புகிறது. குழந்தை விழித்துக் கொண்டு விடும். விழித்தவுடன் உடனே அது டாய்லட்டை நோக்கி ஒடும். அதுவரை அது பொறுத்துக்கொள்ளும், இந்த அலாரம் மணி ஓசையே குழந்தைக்கு ஒரு பயிற்சியைக் கொடுத்து விடும். சிறுநீர்ப்பையைச் சார்ந்த ஒரு பயிற்சி படுக்கையில் சிறுநீர்கழிக்கும் குழந்தைகளுக்குப் பெரும்பாலும் சிறுநீர்ப்பை மிகச்சிறியதாக இருக்கும். இந்த பயிற்சியின் நோக்கம் அதன் அளவைப் பெருக்குவதாக இருக்கும். ஒரு நாளில் குழந்தையை நிரம்ப அளவு குடிநீரைக் குடிக்கச் சொல்லி, சிறுநீர் கழிப்பது போன்ற உணர்வு வரும்பொழுது, அடக்கிக் கொள்ளச் சொல்லி அறிவுரை சொல்லப் படுகிறார்கள். இந்த பழக்கமே சிறுநீர்ப் பையை வலிமைப் படுத்தி அதன் கொள்ளளவை அதிகரிக்கச் செய்யும். பயிற்சியால் நாள் செல்லச்செல்ல அந்தப்பையில் சிறுநீர் அதிகமான அளவைக் கொண்டதாகிவிடும். மருந்து சிகிச்சை கடைசியாக, எதுவும் பலனளிக்காவிட்டால், மருந்துகளை உபயோகித்து படுக்கையில் சிறுநீர் கழிப்பதைத் தடுக்கலாம். 10 வருடங்களுக்கு மேல் இருக்கும் குழந்தைகளுக்குத்தான் மருந்துகள் கொடுக்கப்படும். அவை திறன் மிக்கவையே. ஆனால் அவை சிறு நீர் கழிக்கும் உணர்வை நிறுத்தப் போவதில்லை. இது ஒரு தாற்காலிக சாதனம், மருந்தை நிறுத்தியவுடன், படுக்கையில் சிறுநீர் கழிப்பது தொடர ஆரம்பிக்கும். நிரந்தர குணப்படுத்தலுக்கு அலாரம் போன்ற வசதிகளே சிறந்தவை. A. Desmopressin Acetate (DDAVP) இந்த மாத்திரை எல்லாக் கடைகளிலும் கிடைக்கிறது. இவற்றையே வேறு எந்த வழியும் வெற்றி தராத பொழுது உபயோகிக்கலாம். இந்த மருந்து இரவு வேளைகளில் வரும் சிறுநீரின் அளவைக் குறைக்கிறது. ஆகவே எந்த குழ்ந்தைகள் வெகு அதிகமான அளவில் சிறுநீர் கழிக்கிறார்களோ அவர்களுக்கே இந்த மருந்து உதவும். இந்த மருந்தை குழந்தைகளுக்குக் கொடுக்கும்பொழுது மாலை வேளைகளில் குழந்தை குடிக்கும் திரவங்களின் அளவைக் குறைக்கவும். வழக்கமாக படுக்கச் செல்லும் முன்னரே இந்த மருந்து கொடுக்கப் படுகிறது. குழந்தை ஏற்கனவே திரவங்களை அதிக அளவில் குடித்திருந்தால், இந்த மருந்தை இரவில் கொடுக்க வேண்டாம். இந்த மருந்து திறன் வாய்ந்தது. பக்க விளைவுகள் குறைவு. ஆனால் இதன் விலை மிக அதிகமாக இருப்பதால், பல பெற்றோர்களால் இது வாங்க முடியாதநிலை இருக்கலாம். B. Imipramine (tricyclic antidepressants) 355 LDQ55g fu5i பையை தளர்த்திக் கொடுக்கும் சக்தி உடையது. அதன் மூலம் சிறுநீர்ப் பையின் கொள்ளளவு அதிகரிக்கும். இந்த மருந்து வழக்கமாக 3 முதல் 6 மாதங்கள் வரைக்கும் உபயோகிக்கப் படுகிறது. இதன் விளைவு விரைவாகவே செயல்படுவதால், இந்த மருந்து படுக்கப் போவதற்கு 1 மணி நேரம் முன்பாகவே எடுத்துக் கொள்ளப் படும். இந்த மருந்து மிக உயர்ந்த திறன் கொண்டது. ஆனால் இதற்கு அதிக பக்க விளைவுகள் இருப்பதால், இதை தேவைப்பட்டாலொழிய உபயோகிப்பதில்லை. C. Oxybutynin (anticholinergic drugs) என்ற இந்த மருந்தை பகல் பொழுதில் உபயோகிக்கலாம். இந்த மருந்து சிறு நீர்ப் பை சுருங்குவதை குறைத்து அதன் கொள்ளளவைக் கூட்டுகிறது. பக்க விளைவுகளாக வாய் உலர்ந்து போதல், முகம் வெளிறிப் போதல் மற்றும் மலச்சிக்கல் போன்ற விளைவுகள் எழலாம். படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை நிறுத்த எப்பொழுது மருத்துவரின் ஆலோசனையை நாட வேண்டும்? பகல் பொழுதிலேயே படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருந்தால், குழந்தைக்கு 7 அல்லது 8 வயதிற்கு மேலும் பழக்கம் தொடர்ந்தால், இடையே பழக்கம் நின்று விட்டு குறைந்த பட்சம் 6 மாதம் கழித்து குழந்தைக்கு மீண்டும் அந்தப் பழக்கம் வந்தால், மலம் கழிப்பதில் எந்தவித கட்டுப் பாடும் அற்றுப் போய் விட்டால், காய்ச்சல், வலி, எரிச்சல் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல், அசாதாரணமான அளவில் தாகம், முகம், பாதங்கள் வீங்குதல், வெளியேறும் சிறுநீரின் அளவு குறைவு, வலியோடு சிறுநீர் கழித்தல். ஆதாரம் : http://kidneyeducation.com/Tamil