சிறுநீரகம், யுரீட்டர், சிறுநீர்ப்பை மற்றும் யுரீத்ரா - இவை எல்லாமாகச் சேர்ந்துதான் சிறுநீரக அமைப்பை பூர்த்தி செய்கின்றன. சிறுநீர் வெளியேறும் பாதையில் ஏற்படும் தொற்றுதலானது பாக்டீரியாக்களால் ஏற்படுவது. சிறுநீர் வெளியேறும் பாதையில் எங்கு வேண்டுமானாலும் இது ஏற்படலாம். உடலிலேயே ஏற்படும் தொற்றுக்களில் இந்த தொற்றுதலே இரண்டாவது இடம் வகிக்கும் மிகவும் பொதுவான தொற்றுதல் ஆகும். இந்த தொற்றுதலின் அடையாளங்கள் யாவை? இந்த அடையாளங்கள் யாவும், தொற்றுதலின் தீவிரத் தன்மை, நோயாளியின் வயது, தொற்றுதல் உண்டாகும் இடம் ஆகியவற்றை பொறுத்து அமையும். மிக சாதாரணமாகக் காணப்படும் அடையாளங்கள் சிறுநீர் கழிக்கும்பொழுது ஏற்படும் எரிச்சல் அல்லது வலி சிறுநீர் எத்தனை தடவை கழிக்கப்படுகிறது என்ற எண்ணிக்கை காய்ச்சல், நாற்றம் எடுத்தலும் மேகமூட்டம் நிறைந்தது போலக் காணப்படும் சிறுநீர் சிறுநீர்ப்பை தொற்றுதலால் பாதிக்கப்பட்டு காண்பிக்கும் அடையாளங்கள் அடிவயிற்றில் அசெளகரியமான உணர்வு அடிக்கடி சிறுநீர் வலியுடன் கழித்தல், கழிக்கப்படும் சிறுநீற்றின் அளவும் கம்மி சற்று மந்தமான காய்ச்சல் சிறுநீரில் இரத்தம் கலந்து போதல் மேற்புறம் இருக்கும் சிறுநீர்ப்பாதை தொற்றுக்கு உள்ளாகி விடுதல் - அப்பொழுது காணும் அடையாளங்கள் முதுகின் மேற்புறம் வலி காய்ச்சல் சற்று அதிகமாக காணப்படுதல் வாந்தி எடுத்தல், நலிவான உடல்நிலை, அசதி மற்றும் பொதுவாக நோயுற்ற உணர்வு மனம் மாறிமாறி செயல்படுதல், மற்றும் குழப்பம் போன்றவை வயதானோரைத்தாக்குதல் இதுவே சிறுநீர்ப் பாதையில் மிகத் தீவிரமான தாக்கத்தைக் கொண்டு வரும் தொற்றுதலாகும். இந்த தொற்றுதல் ஏற்படக் காரணங்கள் யாவை? முக்கியமான காரணங்களில் சில கீழே தரப்பட்டிருக்கின்றன. 1. சிறுநீர் செல்லும் பாதை அடைபட்டிருப்பது - இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் ஏதோ ஒரு காரணத்தால் இந்த அடைப்பு ஏற்படலாம். 2. பெண்கள் அதிகம் பாதிக்கப்படுதல். பெண்களுக்கு இருக்கும் யுரீத்ரா ஆண்களை விட சற்று குறைவான நீளம் உடையதால், பெண்களே இந்த தொற்றுதலால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். 3. பாலியல் சேர்க்கை, உடலுறவு கொள்ளுதல். பாலியல் வேட்கை அதிகமாக உள்ள பெண்களுக்கே இந்த தொற்றுதல் அதிகமாக வருகிறது. 4. சிறுநீர்ப்பையில் கற்கள் சேர்தல். சிறுநீரகம், யுரீட்டர், அல்லது சிறுநீர்ப்பை-இவற்றில் சேரும் கற்கள் சிறுநீர் தடையில்லாமல் செல்லுவதைத் தடுக்கும். அதுவே இந்த தொற்றுதலின் தாக்கத்தின் சாத்தியக் கூற்றை அதிகப்படுத்தும். 5. உடலுக்குள் பதிக்கப்பட்ட கதீட்டர்கள் இவையே தொற்றுதலைத் தோற்றுவிக்கும் அதிக சாத்தியக் கூறுகளைக் கொண்டது. 6. பிறப்பிலிருந்தே வரும் கோளாறு - அசாதாரண அமைப்புக் கோளாறுகள். சில குழந்தைகளுக்கு இவ்வித பிறவிக் கோளாறு காணப்படும். அதற்கு ஆங்கிலத்தில் vesicourcteric reflux என்று சொல்லுவார்கள். இதன் காரணமாக கீழே செல்லவேண்டிய சிறுநீர் மேல் நோக்கிப் போகும். குதத்தின் பக்கம் இருக்கும் வால்வு மேலும் தொற்றுதலை அடைய அதிக வாய்ப்பு இருக்கிறது. 7. Benign prostatic hyperplasia. பிராஸ்டேட் சுரப்பி விரிந்து விடுவதால் 60 வயதைக் கடந்தவர்களுக்கு இந்த தொற்றுதல் வருவதற்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது. சிறுநீர் செல்லும் வழியில் ஏற்படும் தடையே இந்த தொற்றுதலுக்கு ஒரு முக்கிய காரணம் ஆகும். 8. நோய் எதிர்ப்புச் சக்தி எப்படியோ கட்டுப்படுத்தப் படுகிறது. நீரிழிவுநோய் உள்ள நோயாளிகள், எய்ட்ஸ் நோய் உள்ளவர்கள் அல்லது புற்று நோய் உள்ளவர்கள் ஆகியோருக்கு இந்த தொற்றினால் பாதிக்கப்படக் கூடிய சாத்தியக் கூறு அதிகமாக இருக்கிறது. 9. இதர காரணங்கள். யுரீத்ராவிட்டத்தில் சுருங்கி விடுவது, சிறுநீர் செல்லும் பாதையில் காசநோய் பீடிப்பது, அல்லது நியூரோ நோயால் பாதிக்கப்படும் சிறுநீர்ப்பை போன்ற காரணங்களும் இந்த தொற்றுதலைக் கொண்டு வரும். மீண்டும் மீண்டும் வரக் கூடிய இந்த தொற்றுதல் சிறுநீரகத்தை பாதிக்குமா? பொதுவாக இந்த தொற்றுதல் மீண்டும் மீண்டும் வருவதால் சிறுநீரகங்கள் வயது முதிர்ந்தவர்களை பாதிப்பதில்லை. சிறுநீரகங்களில் கற்கள் இருந்தாலோ அல்லது தடங்கல்கள் இருந்தாலோ அல்லது பாதை சிறியதாக ஆகிவிட்டாலோ அல்லது காசநோய் தொற்றியிருந்தாலோ அவை எல்லாம் சரிப்படுத்தப்படாத பொழுது இந்த தொற்றுதல் தொற்றிக் கொள்ளும், இருந்தாலும் சிறு குழந்தைகளைப் பொறுத்தவரை கால தாமதமோ அல்லது முறையில்லாத சிகிச்சையோ திருப்பி சாதாரண நிலைக்குத் திருப்ப முடியாத அளவுக்கு இந்த தொற்றுதலைக் கொண்டு விட்டு விடும். இதனால் சிறுநீரகம் செயலிழக்கும். உயர் இரத்த அழுத்தத்தை வயது முதிர்ந்த காலத்தில் கொண்டு வரும். ஆகவே இந்த தொற்றுதல், பெரியோர்களை ஒப்பிட்டுப்பார்த்தால் குழந்தைகளுக்கு தீவிர நிலையைக் கொண்டு வரும். இந்த நோயை எப்படிக் கண்டறிவது? சோதனைகள் நடத்தப்படும். தொற்றுதலின் தீவிரம் எப்படி இருக்கிறது என்பது ஆராய்ந்து பார்க்கப்படும். மீண்டும் மீண்டும் வந்தால், சிறப்பான சோதனைகள் செய்யப் பட்டு நோய் அறியப்படும். அடிப்படையான சோதனைகள் 1. சிறுநீர்ப் பரிசோதனை இது வழக்கமாகச் செய்யப்படும் சிறுநீர்ப் பரிசோதனையாகும். இதன் மூலம் சிறுநீர்த்துளிகள் மைக்ரோஸ்கோப்பின் கீழ் தீவிரமாக பரிசோதிக்கப்படும். குறிப்பாக இரத்த வெள்ளை அணுக்கள் தென்பட்டால் இந்த தொற்றுதல் இருப்பதை தெரிவிக்கும். இது சிறுநீர்ப் பாதை வீக்கமடைந்திருக்கிறது என்பதைக் குறிக்கும். சிறப்பு சோதனைகளிளும் - குச்சி வைத்துப் பார்ப்பது உண்டு. இதை அலுவலகத்திலோ அல்லது வீடுகளிலோ இருந்துகொண்டே செய்யலாம். இவ்வகை நோயாளிகளை மேலும் சோதனைகளுக்கு உள்ளாக்குதல் அவசியம். இந்தக் குச்சிகள் இந்தியாவில் அவ்வளவு அதிகம் கிடைப்பதில்லை. 2. சிறுநீர் கல்ச்சர் சோதனையும் இதர சோதனைகளும் இதுவே தொற்றுதலை சரியாகத் தெரிவிக்கும் தலையாய சோதனையாகும். ஆன்டிபயாடிக் மருந்துகளை கொடுக்கும் முன் செய்ய வேண்டிய சோதனையாகும் இது. ஒரு சில சிக்கலான சூழல்களில் கல்ச்சர் சோதனை பரிந்துரைக்கப்படுகிறது. ஒரு சில சூழல்களில் வெறும் மருந்து மாத்திரைகளே தீர்மானிக்கக் கூடும். சிறுநீர் கல்ச்சர் சோதனை சுமார் 48 லிருந்து 72 மணி நேரங்கள் எடுத்துக் கொள்ளும். கல்ச்சரின் மூலம் தெரியவரும் நுண்ணணு வளர்ச்சி, தொற்றுதலின் தீவிரத்தைக் காட்டிக் கொடுக்கும். இந்தக் கல்ச்சர் சோதனையே குறிப்பாக எந்த பாக்டீரியாவினால் தொற்றுதல் வந்திருக்கிறது என்பதைக் காண்பித்து விடும். சிறுநீர் சோதிக்கப்படும் முன்பே பாழடைந்துவிடாமல் இருக்க நோயாளி சிறுநீர் வெளிப்படும் இடங்களை சரியாக கழுவச் சொல்லி சிறுநீர் கழிக்கச் சொல்லப்படுவார். வரும் சிறுநீரை பாக்டீரியாக்கள் புகுந்திராத ஒரு சோதனைக் குழாயின் அல்லது பாட்டிலில் பிடித்து வைப்பார்கள். இதர வழிகளும் அப்படி சேகரிக்க உதவும். 3. இரத்த பரிசோதனை வழக்கமாக ஹீமாக்ளோபின், முழு சோதனை, வெள்ளை அணுவின் அளவு, இரத்தத்தில் யூரியா மற்றும் சீரம் கிரியேட்டினைன், இரத்தத்தில் சர்க்கரை மற்றும் புரோட்டினின் அளவு போன்றவை எல்லாம் இதில் பார்க்கப்படும். அபாய காரணிகள் வெளிப்படும் போது மேற்கொள்ள வேண்டிய சோதனைகள் மீண்டும் மீண்டும் தொற்றுதல் எழுந்து எந்தவித மருந்துக்கும் கட்டுப் படாமல் போனால் கீழ்க்கண்ட சோதனைகள் மேற்கொள்ளப்படும். 1. அல்ட்ரா சவுண்ட் சோதனைகள். எக்ஸ்-ரே படங்கள் மூலம் சோதனைகள். 2. சி.டிஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ. ஸ்கான்-அடிவயிற்றை படம் பிடித்தல் 3. Voiding cystourethrogram test 4. Intravenous urography 5. காச நோய் இருக்கிறதா என்று மைக்ராஸ்கோப்பின் கீழ் சோதனை. 6. Cystoscopy 7. பெண்கள் மருத்துவம் பார்க்கும் மருத்துவர் செய்யும் சோதனைகள் 8. இரத்தத்தை கல்ச்சர் சோதனைக்கு உள்ளாக்குவது 9. யூரோடைனமிக்ஸ் இந்த தொற்றுதலை தடுப்பது எப்படி? 1. அன்றாடம் (3-4 லிட்டர்கள்) குடிநீர் அல்லது திரவங்களைப் பருகவும். அது சிறுநீரை நீர்க்க வைக்கிறது. பாக்டீரியாக்களை சிறு நீர்ப்பையிலிருந்தும், சிறுநீர்ப் பாதையிலிருந்தும் வெளியேற்றுகிறது. இந்த தொற்றுதலை வெற்றிகரமாக சிகிச்சை முலம் அகற்ற அடிப்படைக் காரணங்களை ஆராய்தல் வேண்டும். 2. 2 அல்லது 3 மணி நேரத்திற்கு ஒரு முறை அவசியம் சிறுநீர் கழிக்கவும். பாத்ரூமுக்குப்போவதை தள்ளிப் போடவே கூடாது. சிறுநீர்ப் பையிலேயே சிறுநீரை நெடு நேரம் தங்க வைத்து விடுவதினால் பாக்டீரியாக்கள் வளர வாய்ப்பு அதிகம் உள்ளது. 3. விட்டமின் C அதிகம் உள்ள உணவையும், அஸ்கார்பிக் அமிலம் இருக்கும் உணவையும் உண்டு வரவும். கிரான்பெர்ரி சாறுநிரம்ப உள்ள வகையில் உணவை தயாரித்து உண்ணவும். அதுவே சிறுநீரின் அமிலத் தன்மையைக் கூட்டும். அந்த அமிலத்தன்மை பாக்டீரியா வளர்வதைத் தடுக்கும். 4. மலச் சிக்கலை தவிர்க்கவும். அப்படி மலச்சிக்கல் எழுந்தால் அதற்கு மருந்து சாப்பிட்டு இல்லாமல் செய்யவும். 5. இளம் பெண்களும் சரி, வயதான பெண்மணிகளும் சரி, முன்புறத்திலிருந்து பின்புறத்திற்கு (மலம் கழித்த பிறகு) கழுவிக் கொள்ள வேண்டும். இந்தப் பழக்கம் பாக்டீரியாக்கள் பெண்குறியிலிருந்து யுரீத்ராவுக்குப் பரவுவதைத் தடுக்கும். 6. பிறப்பு உறுப்புப் பகுதியையும் மலவாய்ப் பகுதியையும் நன்றாக உடலுறவுக்கு முன்னும் பின்னும் கழுவிக்கொள்ளவும். உடலுறவுக்கு முன்னும் பின்னும் நன்றாக சிறுநீர் கழிக்கவும். உடலுறவுக்குப் பின் முழுமையாக ஒரு டம்ளர் நீர் பருகவும். 7. பெண்கள் பஞ்சினால் ஆன உள்ளாடைகளையே அணிய வேண்டும். அதுவே காற்று நன்றாகச் சென்று வர அனுமதிக்கும். மிக இறுக்கமாக உள்ள பேன்ட் சட்டை களையும், நைலான் உள்ளாடையையும் அணியக் கூடாது. 8. பெண்களுக்கு மீண்டும் மீண்டும் வரக் கூடிய சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் தொற்று உடலுறவுக்குப்பின் ஒருடோஸ் ஆன்டிபயாடிக் மருந்து உட்கொள்வதினால் தவிர்க்கப்படும். சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் தொற்றுக்கு எப்படி சிகிச்சை செய்வது? பொதுவான சில அறிவுரைகள் நிரம்ப குடிநீரைப்பருகவும். ஒருவர் மிக மோசமாக உடல்நிலை குன்றி இருந்தால், அல்லது உடலில் நீர்ச்சத்து வற்றிப்போயிருந்தால், அல்லது நீர் பருக முடியாமல் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தால், அவரை ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் சென்று செயற்கையாக ஸலைன் போன்ற திரவங்களை உடலுக்குள் செலுத்தவும். காய்ச்சலையும் வலியையும் மருந்துகள் மூலம் குறைக்கவும். உடலுக்கு சூடு கொடுக்கும் ரப்பர் பைகளையும் அட்டைகளையும் உபயோகித்து வலியைக் குறைத்துக் கொள்ளவும். காப்பி, மது போன்றவற்றை தவிர்க்கவும். புகைப்பதை நிறுத்தவும். காரமான உணவை அகற்றவும். இவை எல்லாம் சிறுநீர்ப் பைக்கு எரிச்சல் உண்டாக்கும். சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் தொற்றை தவிர்க்க எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளவும். சிறுநீர்ப்பாதையின் கீழ்ப் பகுதியை எப்படி சிகிச்சை செய்வது (சிஸ்டிடிஸ் மற்றும் சாதாரண தொற்றுதல்களை எப்படி நீக்குவது) ஆரோக்கியமாகவும் இளமையோடும் இருக்கக் கூடிய பெண்களுக்கு குறுகிய காலத்துக்கு (3 நாட்கள்) நீடிக்கக் கூடிய ஆன்டிபயாடிக் மருந்து கொடுக்கலாம். அதுவே போதும். ஒரு சில மருத்துவர்கள் 7 நாட்களுக்கு நீடிக்கும் சிகிச்சையைக் கொடுப்பார்கள். எப்பொழுதாவது ஒரே ஒரு முறை எடுத்துக் கொள்ளப்படும் ஆன்டிபயாடிக் மருந்தைக் கூட உபயோகிப்பார்கள். வயதான பெரியவர்களுக்கு 7 லிருந்து 14 நாட்கள் நீடிக்கும் சிகிச்சையை மேற்கொள்ளுவார்கள். பொதுவாக விழுங்கப்படும் மாத்திரைகள் trimethoprim, cephalosporins, nitrofurantoin or floursquinolones என்ற மருந்துகளாகும். தீவிரமடைந்த தொற்றுக்களை எப்படி சிகிச்சை செய்வது? மிதமான நிலையிலிருந்து மோசமான நிலைமை வரை தொற்றுக்கள் இருந்தால், பின்னதான நிலையை அடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை தருவார்கள். சிறுநீர் மற்றும் இரத்தத்தை எடுத்து கல்ச்சர் சோதனை செய்வார்கள். அதைச் செய்து தொற்றுதலைக் கொண்டு வரும் பாக்டீரியா எது என்று தீர்மானிப்பார்கள். அதை வைத்து சரியான ஆன்டிபயாடிக் மருந்தை தேர்ந்தெடுப்பார்கள். இரத்த நாளங்கள் வழியே உடலுக்குள் செலுத்தும் திரவங்களை அல்லது ஆன்டிபயாடிக் மருந்துகளை வைத்து சிகிச்சை செய்வார்கள். அப்படி பல நாட்களுக்குக் கூட சிகிச்சை செய்வதுண்டு. அதைத் தொடர்ந்து 10-14 நாட்களுக்கு வாய் மூலம் ஆன்டிபயாடிக் மாத்திரைகளை விழுங்கச்சொல்லுவார்கள். அப்படி அந்த ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு தொற்றுதல் கட்டுப் படவில்லையானால், எக்ஸ்ரே படங்கள் அல்லது எம்.ஆர்.ஐ. ஸ்கானிங் எடுக்கச்சொல்லுவார்கள். சிறுநீர்ப் பரிசோதனைகளைத் தொடர்ந்து சோதனைகள் செய்து மருத்துவத்தின் விளைவுகளைப் புரிந்து கொள்ளுதல் வேண்டும். அடிக்கடி வரக் கூடிய சிறுநீர்ப்பாதை தொற்றுக்கான சிகிச்சை இப்படி ஒரு நோயாளிக்கு ஏற்பட்டால், அடிப்படைக் காரணங்களை அனைத்தும் அறிந்து கொள்ளப்படுவது மிகவும் அவசியம். அந்த அடிப்படைக் காரணத்திற்கு ஏற்ப, குறிப்பான மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைகள் திட்டமிடப்படுதல் வேண்டும். இவ்வகை நோயாளிகளுக்கு தொடர்ந்த கவனம் அவசியம் தேவை. தடுப்பு மருத்துவம் அவசியம் தொடரப்படல் வேண்டும். நீண்ட நாள் தொடரக் கூடிய தடுப்பு வழிகளைக் கொடுக்கும் ஆன்டிபயாடிக் மருந்துகள் தேவைப்பட்ட தொடர்ச்சியோடு கொடுக்கப்படல் வேண்டும். சிறுநீர்ப் பாதையில் தொற்றுதல் ஏற்பட்டால் ஒரு நோயாளி மருத்துவரை எப்பொழுது தொடர்பு கொள்ள வேண்டும்? கீழ்க்கண்ட சமயங்களில் அவர் உடனடியாக மருத்துவரை தொடர்பு கொள்ளுதல் அவசியம். வெளியேறும் சிறுநீரின் கன அளவு அதிகமானால் அல்லது சிறுநீர் ஒரேயடியாக நின்று விட்டால் வெகு அதிகமான நிலையில் காய்ச்சல், உடல் சில்லிட்டுப் போதல், முதுகு வலி மற்றும் கலவையாக பழுப்பு நிறத்தில் சிறுநீர் போதல் அல்லது சிவப்பான நிறத்தில் சிறுநீர் கழித்தல் மிக மோசமாக வாந்தி எடுத்தல் மற்றும் தசைகளில் நலிவான உணர்வு இரத்த அழுத்தம் குறைதல் ஆதாரம் : http://kidneyeducation.com/Tamil/chapter/620