அறிமுகம்

டாக்சிசைக்ளின் அல்லது டெட்ராசைக்ளின் போன்ற நுண்ணுயிர்க் கொல்லிகளைக் கியூ-காய்ச்சலுக்கு பயன்படுத்தலாம்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு, டாக்சிசைக்ளினும் சிப்ரோஃபிளாக்சாசினும் கர்ப்பகாலத்தில் முரண்குறிகளைக் காட்டலாம். இதற்காக ஐந்து வாரங்களுக்கு, கோ-டிரைமோக்சாசோல் சிகிச்சை அளிக்கப்படும்.

நோயிறிகுறிகள்

நோயரும்புகாலம் பொதுவாக இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஆகும். இலேசான சளிக்காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் இது வெளிப்படும்.

காய்ச்சல்

உடல்சோர்வு

அதிக வியர்வை

கடும் தலைவலி

தசைவலி

மூட்டு வலி

பசியின்மை

மேல் மூச்சு மண்டலக் கோளாறுகள்

வறட்டு இருமல்

நுரையீரல் படல வலி

குளிர்

மனக்குழப்பம்

குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு. இந்தக் காய்ச்சல் ஏறக்குறைய 7-14 நாட்கள் நீடிக்கும்.

காரணங்கள்

காக்சில்லா புர்னெத்தி பாக்டீரியாவால் (அல்லது c- புர்னெத்தி) கியூ-காய்ச்சல் ஏற்படுகிறது. பாக்டீரியா தொற்றுள்ள விலங்குகளினால் பொதுவாக இந்நோய் பரவுகிறது.

பரவலாக பாதிக்கப்படுவதும், மனிதர்களுக்கு ஆபத்தானதுமான விலங்குகள்:

செம்மறி ஆடுகள்

மாடுகள்

வெள்ளாடுகள்

நாய், பூனை, கினிப்பன்றிகள் போன்ற வீட்டு விலங்குகள்

நோய்கண்டறிதல்

இரத்தப்பரிசோதனை மூலம் கியூ-காய்ச்சலைக் கண்டறியலாம்.

இரத்தப்பரிசோதனை: கியூ-காய்ச்சலை உருவாக்கும் புர்னெத்தி பாக்டீரியா இரத்தத்தில் இருந்தால் நோய்த்தடுப்பு மண்டலம் எதிர்பொருட்களை உண்டாக்கும்

நோய்மேலாண்மை

டாக்சிசைக்ளின் அல்லது டெட்ராசைக்ளின் போன்ற நுண்ணுயிர்க் கொல்லிகளைக் கியூ-காய்ச்சலுக்கு பயன்படுத்தலாம்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு, டாக்சிசைக்ளினும் சிப்ரோஃபிளாக்சாசினும் கர்ப்பகாலத்தில் முரண்குறிகளைக் காட்டலாம். இதற்காக ஐந்து வாரங்களுக்கு, கோ-டிரைமோக்சாசோல் சிகிச்சை அளிக்கப்படும்.

ஆதாரம் : தேசிய சுகாதார தகவல் மையம்