அறிமுகம்

மூக்குப்பாதை திசுவளர்ச்சி என்பது மூக்கு அல்லது மூக்கெலும்பு உட்புழையின் சளிசவ்வில் இருந்து விழுது போன்ற திசு வளர்ச்சி ஏற்படுவதே. இது சளிச்சவ்வின் அதிகப்படியான வளர்ச்சியே. இதனுடன் ஒவ்வாமை நாசியழற்சியும் ஏற்படும். இவை மென்மையற்றவையும் கட்டற்று அசைவனவும் ஆகும்.

மூக்குப்பாதையிலும் மூக்கெலும்பு உட்புழையிலும் வளரும் அசாதாரண திசு வளர்ச்சியே மூக்குப்பாதை திசுவளர்ச்சி. எலும்பு உட்புழைகள் முக எலும்புக்குள் காணப்படும் சிறு காற்று நிரம்பிய துளைகளே. மூக்கின் இரு பக்கங்களிலும், கன்ன எலும்பு, கண்கள், நெற்றி ஆகியவற்றின் பின்புறமும் எலும்புப் புழைகள் இருக்கும். மூக்குப்பாதை திசுக்கள் ஒவ்வொன்றும் அளவில் மாறுபடும். அவை மஞ்சள், சாம்பல், அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். ஒவ்வொரு திசுவளர்ச்சியும் கண்ணீர்த் துளியின் வடிவத்திலும், நன்கு முதிர்ந்த திராட்சைப் பழம் கொடியில் தொங்குவது போலவும் காணப்படும். பெரிய திசுக்கள் உங்கள் மூக்குப் பாதையை அடைத்து, மூக்கடைப்பு, மூக்கொழுகல், நுகர்வு மற்றும் சுவையுணர்வு இழப்பு ஆகிய அறிகுறிகள் தோன்றும்.

நோயறிகுறிகள்

மூக்குப்பாதை திசு வளர்ச்சியின் அறிகுறிகளில் அடங்குவன:

மூக்கடைப்பு – மூச்சு விடுதலில் சிரமம்

குறட்டை

மூக்கொழுகுதல்

மூக்கின் பின்புறம் இருந்து சளி தொண்டைக்குள் சொட்டுதல்- பின் மூக்கு ஒழுகல்

நுகர்வு மற்றும் சுவை உணர்வு குறைதல் – கடுமையான நோயின்போது நுகர்வு மற்றும் சுவை உணர்வு முற்றிலுமாக இல்லாமல் போகலாம்.

காரணங்கள்

மூக்குப் பாதையிலும், எலும்பு உட்புழைகளிலும் உள்ள சளிச்சவ்வுகளில் ஏற்படும் அழற்சியால் மூக்குப்பாதை திசுவளர்ச்சி உண்டாகிறது என்று நம்பப்படுகிறது. சரியான காரணம் தெரியவில்லை.

ஆபத்துக்காரணிகள்

ஆஸ்துமா

ஒவ்வாமை நாசியழற்சி – ஒவ்வாமையினால் சளி போன்ற அறிகுறிகள் உருவாகும்.

வயது – நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களிடம் பொதுவாகக் காணப்படலாம்.

சிறுநீர்ப்பை நார்க்கட்டி – நுரையீரலும், செரிமான மண்டலமும் ஒட்டும் பாய்மத்தால் தடைபடும்

சுர்க் – ஸ்ட்ராஸ் நோய் – இரத்தக் குழாய்களில் அழற்சி ஏற்படும் அபூர்வமான நிலை

நோய்கண்டறிதல்

அறிகுறிகளைக் கொண்டே பெரும்பாலும் மூக்குப்பாதை திசுவளர்ச்சி கண்டறியப்படுகிறது.

மூக்கு அகநோக்கு

இதன் மூலம் மூக்குப்பாதை வளர்திசுக்களை இனங்கண்டு ஆராய இயலும்.

கணினி வரைவி ஊடுகதிர் (சி.டி.ஸ்கேன்) : எலும்பு உட்புழையும், மூக்குப் பாதையும் இதன் மூலம் ஆராயப்படும்.

சிறுநீர்ப்பை நார்க்கட்டி சோதனை: நோயாளி குழந்தையாக இருந்தால் மருத்துவர் இச்சோதனைக்குப் பரிந்துரைப்பார். குழந்தையின் வியர்வையில் உள்ள சோடியம் மற்றும் குளோரைடு அளவுகள் கணக்கிடப்படும். எலும்புப்புழை மற்றும் மூக்குப்பாதையின் எக்ஸ்-கதிர்ப் படங்கள் இன்னும் விவரங்களை அளிக்கும். எலும்பு உட்புழையிலும் மூக்குப்பாதையிலும் ஒளிபுகா பகுதிகளாக திசுவளர்ச்சி காணப்படும்.

சிகிச்சை

மூக்குப்பாதை வளர்திசுவுக்குப் பொதுவாக ஊக்கமருந்து ஸ்ப்ரே மற்றும் மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்படும்.

பாக்டீரியாக்களால் ஏற்பட்ட எலும்புப்புழை அழற்சி இருந்தால் மட்டுமே நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள் அளிக்க வேண்டும்.

திசு பெரியதாக இருந்தால் பலவிதமான அறுவை மருத்துவங்கள் செய்யப்படலாம்.

திசு அறுவை – மூக்கின் வழியாக அறுவை சிகிச்சை செய்யப்படும். மூக்குப்பாதை திசு அகற்ற இதுவே பொதுவான முறை

அகநோக்கு உட்புழை அறுவை – வளர்திசுக்கள் பெரிதாகாவோ, திரளாகவோ அல்லது உட்புழைகளைக் கடுமையாக அடைத்துக்கொண்டு இருந்தாலோ இம்முறை கையாளப்படுகிறது.

ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்.