காரணங்கள்

மூக்கில் ஏற்படும் காயம்.

கடினமான வேலை செய்தல்

உயர் இரத்த அழுத்தம்.

உயரமான மலை பகுதிகளில் இருக்கும் போது

கடினமான முறையில முக்கு சிந்துதல்

மூக்கில் இரத்தம் வடிந்தால் என்ன செய்ய வேண்டும்

உட்கார்ந்து கொள்ள வேண்டும்.

மூக்கில் வடியும் இரத்தம் தொண்டை பகுதிக்குள் செல்லாமல் தடுக்க, தலையை லேசாக முன்பக்கமாக சாய்த்து கொள்ளவேண்டும்.

குளிர்ந்த நீரில் நனைத்த ஈரமான துணியினை முக்கில் வைப்பதன் மூலம் இரத்த குழாய்களை சுருங்கச் செய்து இரத்தம் வடிவதை நிறுத்தவும்.

இரத்தம் ஒரு மூக்கு துவாரத்திலிருந்து மட்டும் வடிந்தால் அந்த நாசித்துவாரத்தின் மேல்பகுதியில் லேசாக அழுத்தவும்.

இரத்தம் இரு நாசித்துவாரத்திலிருந்தும் வடிந்தால் இரண்டு நாசித்துவாரத்தையும் குறைந்தது 10 நிமிடங்கள் இருக்க பிடித்துக் கொள்ள வேண்டும்.

இரத்தம் வடிவது தொடர்ந்தால், அடுத்து 10 நிமிடங்கள் மூக்கை அழுத்தி பிடித்துக் கொள்ளவும்.

மூக்கில் ஏற்படும் நேரடி காயத்தால் இரத்தம் வடிதல் ஏற்பட்டால், மென்மையான அழுத்தத்தை மாத்திரம் பிரயோகிக்க வேண்டும்.

மூக்கிலிருந்து இரத்தம் வடிதல் நிற்காமல தொடர்ந்து இருந்தாலோ அல்லது திரும்ப திரும்ப மூக்கிலிருந்து இரத்தம் வடிந்தாலோ மருத்துவரை அணுகி ஆலோசிக்க வேண்டும்.