அறிமுகம்

இயல்பான காதுகேட்கும் திறன் கொண்ட ஒருவரைப் போல் காதுகேட்க இயலாததே காதுகேளாமை என உலக சுகாதார அமைப்பு வரையறுக்கிறது. காது பாதிக்கப்பட்டவர்களுக்குக் கேட்கும் திறன் குறையும் அல்லது செவிட்டுத்தன்மை ஏற்படும். ஒருவருக்கு அறவே காதுகேட்கவில்லை என்றால் அவருக்குச் செவிட்டுத்தன்மை இருக்கிறது எனலாம்.

காது கேளாமை மரபு வழியாகவும், தாய்வழி ரூபெல்லா நோய்த்தொற்று அல்லது பிறப்பின்போது ஏற்படும் சிக்கல், மூளைக்காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள், கேள்திறனைப் பாதிக்கும் நச்சு மருந்துகள், மிகை ஒலி, மூப்பு போன்றவற்றாலும் உண்டாகலாம்.

கேதுகேளாமையால் உண்டாகும் பாதிப்புகள்

செயல்பாதிப்பு

பிறரோடு உரையாட இயலாமல் போவதே காதுகேளாமையின் முக்கிய பாதிப்பாகும். குழந்தைகளால் பேச்சுமொழியை வளர்க்க முடியாது.

காது கேளாமையும் இடைச்செவியழற்சி போன்ற காது நோய்களும் குழந்தைகளின் கல்வி பயிலும் முறையை அதிகமாகப் பாதிக்கும். எனினும் காதுகேளாமை குறைபாடு உள்ளவர்களுக்கும் தகவல் தொடர்புக்கான வாய்ப்பைக் கொடுத்தால் அவர்களும் பிறரைப்போல செயலாற்ற முடியும்.

தகவல் தொடர்பு பேச்சு/எழுத்து அல்லது குறி மொழியில் நடைபெற முடியும்.

சமூக மற்றும் உணர்வுத் தாக்கம்

தகவல் தொடர்பு தடைபடும் போது அது அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும். தனிமை, பிரிவு, அதிருப்தி போன்ற உணர்வுகள் உண்டாகும். குறிப்பாகக் காது கேளாத முதியோரை இது மிகவும் பாதிக்கும்.

பொருளாதாரத் தாக்கம்

வளர்ந்துவரும் நாடுகளில் காதுகேளாமை குறையுள்ள பிள்ளைகளுக்குப் பள்ளிப்படிப்பு கிடைப்பதில்லை. காது கேளாத பெரியவர்களில் பலர் வேலை வாய்ப்பின்றி துன்பப்படுகின்றனர். வேலையில் இருப்போர்களிலும் பெரும்பாலோனோர் பொதுவான உழைப்போரோடு ஒப்பிடும்போது கீழ்மட்ட வேலைகளிலேயே உள்ளனர்.

நோயறிகள்

காதுகேளாமையின் ஆரம்ப அறிகுறிகளாவன:

பிறர் பேசுவதைக் கேட்பதில் சிரமம்

மீண்டும் கூறுமாறு பிறரிடம் கூறுதல்

அதிக ஒலியில் இசைகேட்டல் அல்லது தொலைக்காட்சி பார்த்தல்

தொலைபேசி அல்லது அழைப்புமணியைக் கேட்க இயலாமை

குழந்தைகளில் அறிகுறி

பேசுவற்கு அதிக நாட்களாதல் அல்லது பேசும்போது தெளிவின்மை

திரும்பக் கூறும்படி கேட்டல்

சத்தமாகப் பேசுதல்

அதிக ஒலியில் தொலைக்காட்சி பார்த்தல்

இவை யாவுமே காது கேட்கும் திறனில் உள்ள குறைபாட்டைச் சுட்டிக்காட்டுகின்றன. உடனடியாக மருத்துவரைக் கலந்தாலோசிக்க வேண்டும்.

காரணங்கள்

கேட்கும்திறன் குறைபாடு அல்லது காதுகேளாமை ஒன்றில் பிறவியில் அல்லது பிறப்புக்குப் பின் உண்டானதாக இருக்கும்.

மரபியல் காரணங்கள்

காது கேளாமைக்கு இட்டுச்செல்லும் மரபியல் காரணங்களாவன:

தாய்வழி தொற்றுக்களான ரூபெல்லா, மேகநோய் அல்லது கர்ப்பகாலத்தில் ஏற்படும் பிற தொற்று நோய்கள்

பிறப்பில் எடைகுறைவு

பிறப்பின் போது உயிர்வளிக் குறைவு

கர்ப்ப காலத்தில் காதுநச்சு மருந்துகளை முறையற்று பயன்படுத்துதல் (அமினோகிளைக்கோசைடுகள், சைட்டோடாக்சிக் மருந்துகள், மலேரியா எதிர்ப்பு மருந்துகள், டையுரெட்டிக்ஸ் போன்றவை) பிறப்புக்கு முன்னான கடும் மஞ்சள் காமாலை பிறந்த குழந்தையின் காது நரம்பைப் பாதிக்கும்.

பிறப்புக்குப் பின்னான காரணங்கள்:

இது எந்த வயதிலும் ஏற்படும்

மூளைக்காய்ச்சல், தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி போன்ற தொற்று நோய்களால் சிறுவயதில் காதுகேளாமை ஏற்பட்டாலும் பின்னரும் உண்டாகலாம்.

வடிதலோடு கூடிய நீடித்த காது தொற்று நோய்கள் காது கேளாமைக்கு வழிவகுக்கும். மூளையில் சீழ் சேர்தல், மூளைக்காய்ச்சல் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கும் சில நேரங்களில் இது வழிவகுக்கும்.

காதில் நீர்கோத்தலும் காதுகேளாமையை உண்டாக்கும்.

சில நுண்ணுயிர்க்கொல்லிகளையும், எதிர்மலேரியா மருந்துகள் போன்ற காதுநச்சு மருந்துகளையும் பயன்படுத்தும்போது எந்த வயதிலும் அவை உட்காதைச் சேதப்படுத்தலாம்.

தலை அல்லது காதுக் காயத்தால் கேட்கும் திறனை இழக்கலாம்.

துப்பாக்கி அல்லது வெடி சத்தம் போன்ற அதிக ஒலி உள்ள இடங்களில் பணி செய்வதும் ஒருவரின் கேட்கும் திறனைப் பாதிக்கும்.

உணர்ச்சி உயிரணுக்கள் சிதைவதால் வயது தொடர்பான செவிட்டுத்தன்மை ஏற்படுகிறது.

மெழுகு அல்லது அயல் பொருட்கள் காதுப் பாதையை அடைத்துக்கொண்டால் எந்த வயதிலும் காதுதிறன் இழக்கும்

நோய்கண்டறிதல்

கேட்பதில் பிரச்சினை ஏற்பட்டவுடன் மருத்துவரை அணுக வேண்டும். அவர் காதுமானி கொண்டு அசாதரணமாக எதுவும் உள்ளதா என்று காதைச் சோதிப்பார்.

நோய் மேலாண்மை

உட்காதில் உள்ள அடைப்பால் கேட்புத்திறன் குறைந்தால் சொட்டுமருந்து அல்லது உறிஞ்சல் முறை மருத்துவம் அளிக்கலாம்

பாக்டீரியா தொற்றுக்கு நுண்ணுயிர்க்கொல்லிகளால் மருத்துவம் அளிக்கலாம்

எனினும், உட்காது அல்லது நரம்பு சிதைவால் ஏற்படும் கேட்கும்திறன் இழப்பு நிரந்தரமானது

காது கருவி கேட்க உதவுகிறதே தவிர அது மருத்துவம் அல்ல.

அது எல்லோருக்கும் ஏற்றதல்ல. மருத்துவர் ஆலோசனைப்படியே பயன்படுத்த வேண்டும்.

தடுப்புமுறைகள்

காது கேளாமையைத் தடுக்க முடியாது. எனினும் ஆபத்தான காரணிகளைத் தவிர்க்கலாம்.

தொலைக்காட்சியை அதிக ஒலியுடன் பார்க்கக் கூடாது.

அதிக ஓசையுள்ள இடங்களில் பணியாற்றும்போது காதடைப்பானைப் பயன்படுத்தவும்.

எந்தப் பொருளையும் காதுக்குள் நுழைக்கதீர்.

ஆதாரம் : தேசிய சுகாதார ஆணையம்