திரவநிலை கழிவுகள் சீழ் போன்று அல்லது திரவநிலை கழிவுகள் பொதுவாக காதுகளிலிருந்து வடியக்கூடியவை. இப்படி வடிவது திடீரென்றோ அல்லது நாட்பட்டளவிலோ காணப்படும். காதுகளிலிருந்து திரவம் வடிதல் என்பது, சிறுபிள்ளைகள் விடலைப் பருவத்தினர், சத்து பற்றாக்குறை உள்ள பிள்ளைகள் (அதாவது குவாஷியாக்கார், மராஸ்மஸ் போன்ற சத்து குறைவு நோய்களால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள்) மற்றும் சுகாதாரமற்ற சூழல்களில் வாழ்கின்ற பிள்ளைகளில் பொதுவாக ஏற்படும். காரணம் சளி போன்ற நோயுடன், இரண்டாம் நிலை பாக்டீரியா நோய்தொற்றுவினால், காதுகளிலிருந்து திரவம் வடிதல் ஏற்படுகிறது. அறிகுறிகள் ஒன்று அல்லது இரண்டு காதுகளிலும் வலி தோன்றுதல் நாற்றத்துடன் கூடிய திரவம் காதுகளிலிருந்து வடிதல் காய்ச்சல் முன்னெச்சரிக்கைகள் காதில் தண்ணீர் மற்றும் எண்ணெய் விடக்கூடாது குளிக்கும் போது, இரண்டு காதுகளிலும் காட்டன் (பஞ்சு) வைத்து அடைக்கவும். காதுகளிலிருந்து வடியும்போது, காட்டன் பஞ்சுவினை வைத்து காதுகளை தூய்மை செய்ய வேண்டும். சரியான மருத்துவ உதவிக்கு, காது மூக்கு தொண்டை மருத்துவரை அணுகவும். கேள்வி பதில்கள் காதில் சீழ் வடிதல் என்றால் என்ன? காதுமெழுகு, இரத்தம், சீழ் அல்லது ஏதாவது திரவம் காதில் இருந்து வடிவதே காதில் நீர் வடிதல் எனப்படும். நாம் நம் காதுகளை ஏன் பேண வேண்டும்? காது ஓர் உணர்வு உறுப்பாகும். கேட்கும் திறனே நம்மை உலகத்தோடு இணைக்கிறது. ஒருவருக்கு கேட்கும் திறன் இழப்பு இருக்கிறது என்பதை எப்போது உங்களால் சந்தேகிக்க முடியும்? ஒலி தூண்டலுக்கு ஒருவர் பதில்வினை ஆற்றாமல் இருக்கும்போது. அவர்களால் பிறருடைய பேச்சை புரிந்துகொள்ள முடியாது. பிறரை சத்தமாகப் பேசும்படி கூறுவார்கள். சொன்னதைத் திரும்பச் சொல்லக் கேட்பார்கள். எனது காதைச் சுத்தமாக வைத்துக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? காது தன்னைத் தானே சுத்தம் செய்து கொள்ளும் ஓர் உறுப்பு. பிரத்தியேகமாக நாம் அதைச் சுத்தம் செய்ய வேண்டியதில்லை. வெளிப்புறத்தில் மட்டுமே சுத்தம் செய்வது நல்லது. எந்த ஒரு பொருளையும் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் காதுக்குள் நுழைக்கக் கூடாது. ஆதாரம் : தேசிய சுகாதார வலைதளம்