அறிமுகம் பித்தக்கற்கள் பத்தப்பையின் குழாயை அடைப்பதனால் பித்தப்பையிலே வீக்கம் /அழற்சி ஏற்படும்.இது பித்தப்பை அழற்சி எனப்படும். பின்வரும் காரணங்களினால் பித்தக் கற்கள் உருவாவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகரிக்கின்றன. அதிகரித்த உடற்பருமன். 40---50 வயதிற்கும் இடைப்பட்ட பெண்கள். கருத்தடைமாத்திரைகளைப் பயன்படுத்துதல். கர்ப்பமாக இருத்தல்.. குருதிக் கலங்கள் நீண்ட காலமாக உடைவடைதல் உதாரணம் தலைசீமியா (Thalasaemia) பித்தப்பை அழற்சியின் நோய்க்குறிகள் வயிற்றுவலி தொடக்த்தில் மேல்வயிற்றுப் பகுதியில் வலிகாணப்படும் பின்னர் வலதுபக்கமாக மேல்வயிற்றுப் பகுதியில் வலி காணப்படும். ஆரம்பத்தில் வலி விட்டுவிட்டு ஏற்படும் பின்னர் அது தொடர்ச்சியாகக் காணப்படும். வாந்தி வருவது போன்ற உணர்வு /வாந்தி ஏற்படலாம். காய்ச்சல் .(38—39 ‘c) அஜீரணத்தன்மை உணவு உண்டபின் விசேடமாகக் கொழுப்பு உணவுகளை உண்டபின் சமிபாடடையதாது போன்ற உணர்வு அல்லது வயிறு வீக்கமுற்றது போன்ற அசௌகரியம் ஏற்படலாம். வயிற்றின் வலது அமற்பகுதியில் வைத்தியர் அமத்திப்பார்க்கும் போது வலி ஏற்படலாம். பரிசோதனைகள் வயிற்றில் X—கதிர் பரிசோதனை 10% பித்தக் கற்கள் X—ray பரிசோதனையில் அவதானிக்க முடியும். வயிற்றுப் பகுதியில் செய்யபபடும் ஸ்கான் பரிசோதனை (Abdominal Ultra sound scan) மிகவும் முக்கியமான பரிசோதனை , இதன்மூலம் பித்தப்பபை பற்றியபல தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம். ஆதாரம் : ஆரோக்கியதகவல்