அறிமுகம் மருந்து கொடுத்தலில் செவிலியரின் பங்கு அதிகமானதாக அமைகிறது. சரியான மருந்தை, சரியான அளவில், சரியான முறையை பயன்படுத்தி, தேவையான முன்னெச்சரிக்கைகளை கைக்கொண்டு மருந்து கொடுப்பது செவிலியரிடமிருந்து எதிர்ப்பார்க்கப்படுகிறது. நோயாளிக்கு மருந்து கொடுக்கும்போது சிகிச்சைக்கு எதிர்வினை இருக்கிறதா என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும். இதனால் சாதாரணமாக ஏற்படக்கூடிய ஒத்துக்கொள்ளாத் தன்மையையும், மருந்துகளின் செயல்கள் பற்றியும் அறியலாம். செவிலியர்களுக்கு மருந்துகளின் செயல்கள் மற்றும் பக்கவிளைவுகள் குறித்த அறிவு முக்கியம் மற்றும் மருந்து சிகிச்சையைப் பற்றிய சட்டவிதிகளும் நன்றாக தெரிந்திருக்க வேண்டும். செவிலியரின் அடிப்படை வேலை மருந்து கொடுத்தலாகும், அதற்கு அறிவும் திறமையும் தேவை, செவிலியர்களின் முக்கியமான பொறுப்புகளில் ஒன்று பாதுகாப்பாகவும், சரியாகவும் மருந்து கொடுத்தலாகும். பாதுகாப்பாக மருந்து கொடுப்பதற்கு செவிலியரின் 6 சரியான விதிமுறைகள் • எழுதப்பட்ட மருத்துவ ஆணையை மருந்து கொடுப்பதற்கு முன் செவிலியர் தெளிவாக சரிபார்க்க வேண்டும். * சரியான மருந்து, வழி மற்றும் அளவை சரிபார்க்க வேண்டும். • மருந்து பற்றிய குறிப்புகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும். * மருந்து கொடுப்பதற்கான விதிமுறைகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும். • பாதுகாப்பான முறையில் மருந்தை கொடுப்பதற்கும், பிரச்சனைகளை அறிவதற்கும் தெரிந்திருக்க வேண்டும். * மருந்து கொடுத்தலில் பிரச்சனைகளின் போது அதை நிறுத்தவும் தெரிந்திருக்க வேண்டும். பாதுகாப்பு முறைகள் (safety measures) 1. சரியான நோயாளி 2. சரியான மருந்து 3. சரியான அளவு 4. சரியான நேரம் 5. சரியான முறை வாய்வழியாக மருந்து கொடுத்தலில் செவிலியரின் பொறுப்புகள் • நோயாளியின் நோய் மற்றும் வயதை கவனிக்க வேண்டும். • நோயாளியை பெயர் மற்றும் படுக்கை எண்ணைக் கொண்டு கண்டறிய வேண்டும். * மருத்துவரின் ஆணைப்படி சரியான மருந்து, அளவு மற்றும் கொடுக்கும் முறையைக் கவனிக்க வேண்டும். * செவிலியரின் பதிவேட்டில் கடைசியாக மருந்து எப்போது கொடுக்கப்பட்டது என்பதை பார்க்க வேண்டும். * வாய்வழியாக மருந்து கொடுக்க தகுதியற்ற நிலைகளான குமட்டல், வாந்தி மற்றும் சுயநினைவற்ற நிலை போன்றவற்றை கவனிக்க வேண்டும். * நோயாளியின் சுயநினைவை பரிசோதித்து, சொல்லுவதை பின்பற்ற முடிகிறதா என்பதை பார்க்க வேண்டும். * நோயாளியின் தொகுதியில் கிடைக்கக்கூடிய பொருட்களை கவனிக்க வேண்டும். மருந்து வண்டியை தயார் செய்தல் தேவையான பொருட்கள் நோக்கங்கள் • ஒரு தள்ளு வண்டி ஒரு தட்டில் :• ஒரு கிண்ணத்தில் சுத்தமான நீர் * அவுன்ஸ் டம்ளர், அளவு டம்ளர், ஸ்பூன் மற்றும் டிராப்பர் • ஒரு டம்ளரில் குடிக்கும் தண்ணீர். * மருந்து அரைக்கும் கருவி * மருந்துகரண்டி மற்றும் ஸ்பட்சுலா * துவாலை (அ) டவல் • கழிவுத்தட்டு மற்றும் காகிதப்பை • பிளாஸ்டிக் அளவுகப் மற்றும் அளவுகள் குறிக்கப்பட்ட கப் பலவகையான மருந்துகள் மற்றும் பொருட்களை படுக்கையருகே கொண்டுசெல்ல. மருந்து டம்ளரை சுத்தம் செய்ய. தனித்தனி அளவுகளுக்கு பிரித்தல் மருந்து கொடுத்த பிறகு நோயாளிக்கு குடிக்க தண்ணீர் கொடுக்க வேண்டும் தேவைப்பட்டால் மருந்துகளை உடைத்து தூளாக்க மருந்தை பாட்டிலிருந்து ஊற்றிய பிறகு வெளிப்புறத்தை துடைக்க தேவையற்ற பொருட்களை போட நேயாளிக்கு தனித்தனியாக மருந்துகளை கொடுக்க. செய்முறை காரணம் செவிலியர் செயல்முறை • திரவ குறைப்பிற்கு நோயாளியின் தேவை மற்றும் மருத்துவரின் ஆணை, ஏதாவது இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க வேண்டும். மருந்தை தயார் செய்தல் : • கைகளை கழுவ வேண்டும். • ஒரு நேரத்தில் ஒரு நோயாளிக்கு மட்டும் மருந்தை தயார் செய்ய வேண்டும் • மருந்தின் அளவை கணக்கிட வேண்டும் .• மருந்தை விழுங்குவதற்கு சிரமப்பட்டால், மருந்தை தூளாக்கி, பவுடராக மாற்றி சிறிது தண்ணீரில் கலக்க வேண்டும். நுரையீரல், சிறுநீரக நோயாளிகளுக்கு திரவம் குறைவாக கொடுக்க வேண்டும். நோய்கிருமிகள் பரவுவதை குறைக்க வேண்டும் தவறுகளை குறைக்க வேண்டும். சரியான அளவீட்டிற்காக . உடைக்கப்பட்ட மாத்திரை சுலபமாக விழுங்குவதற்கு திரவங்களை தயாரிப்பதற்கு • பாட்டிலை கலக்க வேண்டும். • கண்மட்டத்திற்கு சரியான அளவில் மருந்தை ஊற்ற வேண்டும். 5 மி.லி. அல்லது 10 மி.லி.க்கும் .குறைவாக மருந்து தேவைப்பட்டால் ஊசிக்குழல் மூலம் கணக்கிடலாம். • மருந்து பாட்டிலின் மேல் ஒட்டப்பட்ட சீட்டை அலமாரியில் வைப்பதற்கு முன் சரிபார்க்க வேண்டும். மருந்து பாட்டிலின் மேல் இருக்கும் லேபிள் மீது மருந்து சிதறாமல் பார்க்க வேண்டும். சரியானவற்றை கணக்கிட வேண்டும் தவறு ஏற்படுவதை தடுக்க மூன்றாவது முறை பார்க்க வேண்டும். மருந்து கொடுத்தல் • சரியான நேரத்தில் மருந்தை கொடுத்தல் வேண்டும். * அட்டையில் இருக்கும் பெயரை சரியானதா என்று பார்க்க வேண்டும். * குறிப்பிட்ட மருந்துகளை கொடுக்க தேவையானவற்றை கணக்கிட வேண்டும். * மருந்தை சரியாகக் கொடுக்க வேண்டும். நோயாளி விருப்பப் பட்டால் கையில் மருந்து கப்பை கொடுக்க வேண்டும். * ஒரு நேரத்தில் ஒரு மருந்தை மட்டும் கொடுக்க வேண்டும். * மருந்து கொடுக்கும் போது ஒரு டம்ளர் நீர் குடிக்கக் கொடுக்க வேண்டும். *மருந்தை நாக்குக்கடியில் வைத்து அதை முழுவதுமாக கரைய விட வேண்டும். * நோயாளியை வாயில் கன்னத்துக்கு எதிரில் மருந்தை வைத்து அது கரையும் வரை வைத்திருக்க வேண்டும். * நோயாளியால் கையில் கப்பை பிடிக்க முடியவில்லை என்றால் நோயாளியின் உதட்டரு கேகப்பை வைத்து ஒவ்வொரு மருந்தாகக் கொடுக்க வேண்டும். * நோயாளியை சரியான நிலையில் இருக்க உதவ வேண்டும். * தேவையற்றவற்றை நீக்க வேண்டும். * கொடுக்கப்பட்ட மருந்தை தேதி, நேரம் மற்றும் கையெழுத்துடன் பதிவுசெய்ய வேண்டும். • திரும்ப 30 நிமிடங்களுக்கு பிறகு மருந்தின் பயனை மதிப்பிட வேண்டும். அந்த நேரத்தில் அந்த மருந்து தேவை என்பதைப் பற்றி அறிய வேண்டும். ஒரு சில மருந்துகள் விழுங்கும்போது இரைப்பை ஜூஸ் மூலம் விரைவாக கரைந்து ஜீரணித்துவிடும். கல்லீரலில் சிதைக்கப்பட்டு சிகிச்சை பலன் மாறலாம். ஒரு குறிப்பிட்ட சவ்வுப் படலத்தில் செயல்படுத்த ஒவ்வொரு மாத்திரையாக விழுங்குவதால், விழுங்குவதில் சிரமம் மற்றும் புரையேறுதல் தடுக்கப்படும் வசதியை சரிசெய்ய நுண்ணுயிரிகள் பரவுவதை தடுக்க கையெழுத்து கணக்கு ஒப்படைப்பை நிலைநிறுத்தும். சிகிச்சை பலன்கள் மற்றும் விளைவுகளைப் பற்றி கண்டறிய. நோயாளி மற்றும் பொருட்களின் பின் கவனிப்பு * துவாலையை எடுத்துவிட்டு முகத்தை துடைக்க வேண்டும். * நோயாளியின் உடல்நிலையை மேம்படுத்த நல்ல நிலையில் வைக்க வேண்டும். படுக்கையை சுத்தமாக வை. * எல்லாப் பொருட்களையும் கழுவி, உலரவைத்து அதற்குரிய இடங்களில் வைக்க வேண்டும். * கைகளை கழுவிக்கொள்ள வேண்டும். * கொடுக்கப்பட்ட மருந்துகளை பதிவு செய்ய வேண்டும் மற்றும் கொடுக்கப்படாத மருந்துகளுக்கு காரணத்தை பதிவு செய். மருந்துகள் கொடுத்த பிறகு எதிர்வினைகள் ஏதாவது இருந்தால் பதிவுசெய். * மருந்து அட்டையை அதற்குரிய இடத்தில் திரும்ப வைக்க வேண்டும். ஊசி செலுத்துதல் (Administration of injections) பரண்ட்டல் முறை(Parenterol route) என்பது மருந்துகள் ஊசிவழியாகவோ (அ) சிரைவழியாகவோ செலுத்துவதாகும். இது செரிப்புப்பாதைக்கு வெளியே ஏற்படுவதாகும். பாதுகாப்பு முறைகள் தொற்று நீக்க தட்டில் அ. நுண்ணுயிரறச் செய்யப்பட்ட ஊசிக்குழல் மற்றும் ஊசிகள் ஆ. நுண்ணுயிரறச் செய்யப்பட்ட தண்ணீர் இ. ஊசிப்போடுதலுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் நுண்ணுயிரறச் செய்யப்பட வேண்டும். ஈ. தொற்று நீக்க முறையில் மருந்துகளையும், பொருட்களையும் கையாள வேண்டும். உ. ஊசிப்போடப்படும் பகுதியை தொற்று நீக்க கரைசல் கொண்டு சுத்தம் செய்வதால் தோலில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை குறைக்கலாம். ஊ. நோயாளியின் படுக்கையருகே, ஊசிமருந்தையும் மற்ற பொருட்களையும் பாதுகாப்பான முறையில் எடுத்துச்செல்ல வேண்டும். ஊசிப்போடப்படும் இடத்தை தேர்ந்தெடுத்தல் ஊசிப்போடப்படும் பகுதியை தேர்ந்தெடுப்பது கீழ்கண்டவைகளைப் பொறுத்தது: அ. மருத்துவரால் ஆணையிடப்பட்ட முறை ஆ. கொடுக்கப்படக்கூடிய மருந்தின் அளவு. இ. கொடுக்கப்படக்கூடிய மருந்தின் பண்புகள் ஈ. உடற்கூற்றில் நரம்புகளைப் பற்றிய அறிவு. உ. மருந்தின் எதிர்பார்க்கக்கூடிய செயல் (அ) வினை ஊசி போடுவதற்கு பொருட்களை தயார் செய்தல்: ஊசிக்குழல்கள் மற்றும் ஊசிகளைப் பற்றிய விளக்கம் பொதுவாக காணப்படும் அளவுகள் 2, 5, 10, 30 மற்றும் 50 மி.லி. இன்சுலின் மற்றும் டுயூபர்குளின் ஊசிக்குழல்கள் சிறப்பானவை. அனைத்து ஊசிக்குழல்களும் 2 பகுதிகளால் ஆனவை. வெளிப்புற பகுதிக்கு குழல் (அ) பேரல் என்றும் உட்புற பகுதிக்கு அழுத்தி (அ) பிஸ்டன் என்றும் பெயர், எல்லா ஊசிக்குக்குழலின் மீதும் கியூபிக் செ.மீ (மி.மீ) ல் அளவீடுகள் குறிக்கப் பட்டிருக்கும். இன்சுலின் ஊசிக்குழலின் மேல் இருக்கும் அளவீடு அல்லது பயன்படுத்தும் இன்சுலின் மருந்தின் அடர்த்தியைப் பொறுத்தது. ஊசிகள் ஸ்டீல் (அ) மற்ற உலோகங்களால் ஆனது. 2 வகைகள் 1. ஒருமுறை பயன்படுத்தக்கூடியது 2. மறுபடியும் பயன்படுத்தக்கூடியது இவைகளின் நீளம் 3/8, 5/8 அங்குலம். ஊசியின் குறுக்களவு எண்களில் 14-27 வரை குறிக்கப்பட்டிருக்கும். ஊசிக்குழல் மற்றும் ஊசிகளை தேர்ந்தெடுப்பதற்கான காரணிகள் அ. ஆணையிடப்பட்ட முறை ஆ. மருந்தின் அடர்த்தி தன்மை இ. கொடுக்கப்பட வேண்டிய மருந்தின் அளவு ஈ. உடல்பருமன் மற்றும் கொழுப்பின் அளவு ஊசிகளை தெரிந்தெடுக்க செவிலியர் சரியான சிகிச்சையினை கண்டறிதல் அ. ஊசிமுனை கூர்மையானதாகவும், கொக்கிகள் இல்லாததாகவும் இருக்கவேண்டும். ஆ. மருந்துகளுக்கு ஏற்றவகையில் சிறிய gauge ஊசிகளை பயன்படுத்தவேண்டும். இ. ஊசியின் நீளம் செலுத்தப்படும் பகுதிக்கும், நோயாளிக்கும் ஏற்றவாறு இருக்க வேண்டும். ஊசி இறுக்கமாக ஊசிக்குழலுடன் இணைக்கப்பட வேண்டும். எனவே செலுத்தப்படும் திரவத்தின் அழுத்தம் ஊசிக்கு வெளியே வராது. தேவையான பொருட்கள் ஒரு தட்டில் • மருந்து அட்டை * நுண்ணுயிரறச் செய்யப்பட்ட மருந்து (ஆம்ப்யூல்/ வயல்) * தகுந்த ஊசிக்குழல் மற்றும் ஊசிகள் * தொற்று நீக்கம் செய்யப்பட்ட பஞ்சுகள் * ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் கையுறை. * கழிவுத்தட்டு நோயாளி மற்றும் சுற்றுப்புறத்தை தயார் நிலையில் வைத்தல் * நோயாளியை சரியாக கண்டுபிடிக்க வேண்டும். * செய்யவிருப்பதை நோயாளிக்கு விளக்கிச் சொல்லி அவர் ஒத்துழைப்பை பெற்றுகொள்ள வேண்டும். * படுக்கையை சுற்றி திரையிட வேண்டும். * ஊசிப்போடுவதற்கு வசதியான, ஓய்வான நிலையில் நோயாளியை படுக்கவை, நோயாளிக்கு புட்டத்தில் ஊசி போட வேண்டுமென்றால் பக்கவாட்டில் (அ) முழங்கால் மடக்கப்பட்ட நிலையில் படுக்கவைக்க வேண்டும். ஊசி கையில் போடப்படவேண்டுமென்றால் படுக்க வைத்த நிலையில் முழங்கையை மடக்க வேண்டும். தோலுக்கு அடியில் ஊசி போடுதல் மேல்கையின் வெளிப்புற பகுதி, ஸ்கேப்யூலாவுக்கு கீழ் முன்மார்பு பகுதியில், மார்பு பகுதிக்கு கீழிலிருந்து இலியாக் முகடுவரை உள்ள முன் வயிற்று தசை, மற்றும், முன் மற்றும் பக்கவாட்டு தொடை தசை போன்ற இடங்களில் தோலுக்கடியில் போடப்படும் ஊசி போடப்படும். தோலுக்குள் ஊசி போடுதல் இது கையின் கீழ் பகுதியில் உட்புறபரப்பிலும் மார்புப் பகுதியின் மேற்பரப்பில் மற்றும் மார்புப்பகுதியின் பின் மேற்புறப்பரப்பு போன்ற இடங்களில் கொடுக்கப்படலாம். செய்முறை நோக்கங்கள் • மருத்துவரின் ஆணையைப்படி மருந்தை எடுத்துவைக்க வேண்டும் •கைகளைக் கழுவ வேண்டும். • மருந்தை தயார் செய்ய வேண்டும் • தகுந்த ஊசிக்குழலையும் ஊசியையும் தெரிந்தெடுக்க வேண்டும் • அவைகள் சரியாக வேலை செய்யும் நிலையில் உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். • மருந்து கொடுப்பதற்கு முன்னால் அளவை கணக்கிட வேண்டும். • கரைசலை தெரிந்தெடுக்க வேண்டும். • கரைசலைக் ஊசிக்குழலில் எடுத்து அதை வையல் (அ) ஆம்ட்யூலில் செலுத்த வேண்டும். • பவுடரை நன்றாக கலக்கி, தேவையான அளவை ஊசிக்குழலில் எடுக்க வேண்டும். •நோயாளியை தெரிந்தெடுக்க வேண்டும். • நோயாளியின் பெயரை சொல்லி திரும்ப சொல்லச்சொல்ல வேண்டும். • ஊசி செலுத்துவதற்கான பகுதியை தயார் செய்ய வேண்டும். • சரியான இடத்தை தெரிந்தெடுக்க வேண்டும். *அந்த இடத்தை ஸ்பிரிட் பஞ்சு கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். • நோயாளி வசதியான முறையில் இருக்கிறாரா என்பதைக் கவனிக்க வேண்டும். • மருந்தை உட்செலுத்த வேண்டும். மருந்து கொடுத்தலில் 5 சரியான வகைகளைக் கவனிக்க வேண்டும். பாதுகாப்பை நிலைநிறுத்த வேண்டும் தொற்று நீக்க முறையை கடைபிடிக்க வேண்டும். நேரம், காலம், கருவிசிக்கனம் கைப்படிக்க வேண்டும் தொற்று நீக்க முறைக்காக குறை அளவு (அ) மிகு அளவு மருந்து கொடுப்பதை தவிர்க்க வேண்டும் மருந்து கரைசல் வடிவத்தில் இருக்க வேண்டும். சரியாக, தெளிவான திரவம் கட்டிகள் இல்லாமல் வரும்வரை நன்றாக கலக்க வேண்டும். தவறுகள் ஏற்படுவதை தடுக்க கூர்ந்து கவனிக்க வேண்டும்.. தோலின் மேற்பரப்பில் உள்ள பாக்டீரியாக்களை அகற்றவேண்டும். தசை வழயாக ஊசி போடுவதற்கு • கட்டைவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடைப்பட்ட தோல்பகுதியை உடலோடு அழுத்தி நீட்டி ஊசிக்குழலை பிடித்துக் கொண்டு தோலுக்கு செங்குத்தாக (90) ஊசி விரைவாகச் செல்லும் படி ஒரே குத்தில் நுழைக்கவும், தசையில் ஆழமாக ஊசி செல்ல வேண்டும். *வலது கையை ஊசிக்குழலின் மீது வைத்து இடகையினால் பிஸ்டனை பின்புறமாக இழுக்கவும் * ஊசிக்குழலில் இரத்தம் தென்பட்டால் ஊசியை உடனே வெளியே எடுத்து விடவும். * இரத்தம் தென்படவில்லை என்றால் பிஸ்டனை அழுத்தி மருந்தை மெதுவாக செலுத்து. * ஊசியை விரைவாக வெளியே எடுத்து அந்த இடத்தை நீவி விடுவதால் மருந்து உடனே உறிஞ்சப்படும். கீழ்கண்ட முன்னெச்சரிக்கைகளை பின்பற்று ஊசி தசைக்குள் செல்ல வேண்டும். ஊசியை வெளியே எடுக்கும்போது தன்மையாகவும், வேகமாகவும் எடுப்பதால் வலி குறைந்து இருக்கும். பிஸ்டனை வெளியே இழுத்து பார்ப்பதன் மூலம் மருந்தின் சரியான நிலையை கண்டறியலாம். திசுக்கள் காயமடைவதை தடுக்க மென்மையாக செய்முறையைக் கையாள வேண்டும். ஊசிக்குழலில் இருக்கும் காற்றை வெளியேற்றுவதற்கு ஊசிக்குழலை கண்மட்டத்தில் பிடித்து கவனமாக வெளியேற்ற வேண்டும், மருந்தை வெளியேற்றக்கூடாது. ஊசிபோட்ட இடத்தை அழுத்தி தேய்க்க வேண்டும். அழுத்தி தேய்ப்பதால் திசுக்களுக்கு சேதம் ஏற்படும். நோயாளியிடம் பேசிக்கொண்டே செய்வது நோயாளி இளைப்படைய உதவிச் செய்யும். பாதை நுட்பம் • தோலை ஒருபக்கமாக, கீழ் அல்லது பக்கவாட்டில் இழுத்து செய்யவேண்டும். • செங்குத்தாக (90 கோணத்தில்) ஊசி மருந்தை செலுத்த வேண்டும். • ஊசியை வெளியே எடுத்து தோலை தளர்த்தி விடவும். சிரைவழியாக செலுத்துதல் பொது இரத்த ஓட்டத்தில் நேரிடையாக அடர்த்தி நிறைந்த ஒரே அளவு மருந்தை செலுத்த வேண்டும். தேவையான பொருட்கள் 1. Disposable கையுறை 2. ஆம்ப்யூல் (அ) வயல் மருந்து 3. நுண்ணுயிரற்ற ஊசி 4. தொற்று நீக்க பஞ்சு உருண்டைகள் 5. மருந்து செலுத்தக்கூடிய பதிவேடு செய்முறை செவிலிய செயல்முறை காரணங்கள் • மருந்து, அளவு மற்றும் மருந்து செலுத்தும் முறை குறித்து மருத்துவரின் ஆணையை கவனிக்க வேண்டும் • பாதுகாப்பாக மருந்து கொடுப்பதற்கு செயல், நோக்கம், பக்கவிளைவுகள் போன்றவற்றை பற்றிய குறிப்புகளை சேகரிக்க வேண்டும். • நோயாளிக்கு மருந்து ஒவ்வாமை அறிய வரலாற்றை கவனிக்க வேண்டும். • கைகளை கழுவி கையுறையை போட வேண்டும். • நோயாளியின் பெயரை மருந்து அட்டையுடன் ஒத்துப்பார்க்க வேண்டும். • நோயாளிக்கு செய்முறையை விளக்கி கூற வேண்டும். சிரைவழி ஊசிப்போட்ட இடத்தில் அறிகுறி ஏதாவது தென்படுகிறதா என்பதை கவனித்து சொல்லச்சொல் பாதுகாப்பு மற்றும் துல்லியமாக மருந்தை செலுத்துவதற்காக ஒவ்வாமை குறித்த எதிர் வினையை கண்டுபிடிக்க நோய்த்தொற்று பரவுவதை குறைக்க சரியான நோயாளிக்கு மருந்து கொடுக்கப்படுகிறதா என்பதை நிச்சயப்படுத்திக்கொள் திட்டமிட்டு சிகிச்சையை நோயாளிக்கு கூறு. அடித்தோல் வழியாக ஊசிபோடுவதற்கு அடித்தோல் வழியாக ஊசி போடுவதற்கு, எடை பருமன் அதிகமுள்ள நோயாளிகளுக்கு 90 கோணத்தில் பொதுவாக 5/8 அங்குல ஊசிகள் பயன்படுத்தப்பட வேண்டும். பருமன் குறைவு அல்லது சாதாரண நோயாளிகளுக்கு 45 கோணத்தில் 3/4 அங்குல ஊசிகள் பயன்படுத்தப்படலாம். தோலுக்கடியில் போடப்படும் ஊசி தசைக்குள் போடப்படும் ஊசியைப் போன்ற நுட்பத்தைக் கொண்டது. கீழ்கண்டவைகளை தவிர. 1. எரிச்சல் தராத மருந்துகளை மட்டும் பயன்படுத்த வேண்டும். 2. சிறிய அளவு மருந்துகளை மட்டும் பயன்படுத்த வேண்டும். 3. மேல்தோலையும் கொழுப்பையும் மேலே தூக்குவதன் மூலம் ஏற்படும் மடிப்புகளில் மருந்து கொடுக்கப்படுகிறது. 4. ஊசியை நுழைக்கும்போது, தோலுக்கு கீழ் சென்றுள்ளதா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளவும் தோலுக்குள் செலுத்தப்படும் ஊசி இந்த முறை, தோல் பரிசோதனையின் மூலம் ஒவ்வாமையை கண்டறிய பயன்படுகிறது. முன்னங்கையின் கீழ்பகுதியில் உள்ள தோலை இழுத்து பிடித்து மற்றும் ஊசியை 10-15• கோணத்தில் தோலுக்குள் செலுத்த வேண்டும். இந்த ஊசி தோலின் இரண்டு பகுதி (அ) மடிப்புகளுக்கு இடையில் செல்வதை கண்ணால் பார்க்கலாம். மருந்தை மெதுவாக செலுத்தவும் தோலின் மேல் ஒரு சக்கரம் வரையவும். தோலுக்குள் 0.01 மிலி மருந்து செலுத்தப்படும். ஊசியை உடனே எடுத்துவிடவும் சுத்தம் செய்வதற்கோ (அ) நீவிவிடுவதற்கோ முயற்சிக்க வேண்டாம். நோயாளி மற்றும் பொருட்களின் பின் கவனிப்பு 1. ஊசிபோட்ட இடத்தில் இரத்தக்கசிவு இருக்கிறதா என்பதை கவனிக்கவும். இரத்தக்கசிவு இருந்தால் அழுத்தம் கொடுக்கவும். ஆனால் அழுத்தி தேய்க்காதீர்கள். 2. நோயாளியை 15 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை இளைப்பாரச் செய்யவும். 3. நோயாளியை ஊசிபோட்ட கை, கால்களை அசைக்க சொல்லவும், நரம்பு பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்று பார்க்கவும். 4. ஒவ்வாமை எதிர்வினைக்கான அடையாள அறிகுறிகள் தென்படுகிறதா என்பதை கவனிக்கவும். 5. நோயாளிக்கு நரம்பு பாதிப்பின் மூலம் உணர்ச்சி அற்ற தன்மை அல்லது பலவினம் நடக்கும்போது ஏற்பட்டால் நோயாளியை ஓய்வு எடுக்க சொல்லிவிட்டு மருத்துவருக்கு அறிவிக்கவும். 6. நோளிக்கு ஊசிபோட்டு இடத்தில் வலி, தோலில் நிறமாற்றம் (சிவப்பு) மற்றும் கட்டி போன்றவை ஏற்பட்டால் மிதமான வெப்பம் கொடுக்கவும். அந்த இடத்தில் சீழ்கட்டி உருவாகிறதா என்பதை கவனிக்கவும். சரியான முறையில், ஊசிப்போடப்படும் பகுதியை மாற்றி போடுவதால் இந்த சிக்கலை செவிலியர் தடுக்கலாம். 7. பயன்படுத்திய ஊசிகள்: ஊசிக்குழல் மற்றும் ஊசியை தனியாக பிரித்து ஒரு கிண்ணத்தில் உள்ள நீரில் போடவும். இது பிஸ்டன் ஊசிக்குழலோடு ஒட்டிக்கொளவதை தடுக்கிறது. ஊசிக்குழல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடியதாக இருந்தால், ஊசிக்குழலையும், பிஸ்டனையும் அகற்றிவிட்டு, ஊசியை எரித்துவிடவும். 8. வெதுவெதுப்பான நீரில் கழுவி உலர்த்தி, அதற்குரிய இடத்தில் வைக்கவும். எல்லா பொருட்களையும் சுத்தம் செய்து அதற்குரிய இடத்தில் வைக்கவும். 9. கைகளை கழுவிக்கொள்ளவும். 10. செய்முறையை செவிலியர் பதிவேட்டில் நேரம் மற்றும் தேதியுடன் மருந்தின் பெயர், வலிமை, கொடுக்கப்பட்ட அளவு மற்றும் முறை, விளைவு, ஏதாவது எதிர்வினை போன்றவற்றை பதிவு செய்யவும். ஏதாவது ஒவ்வாமை எதிர்வினை ஏற்பட்டால் அதனை பெரிய எழுத்துக்களில் பதிவு செய்ய வேண்டும். இவற்றை சிவப்பு மையினால் எழுதினால், மற்றவர்களுக்கு தெளிவாகத் தெரியும், எதிர்காலத்துக்கும் ஒப்பிட்டுப் பார்க்க பயனுள்ளதாக இருக்கும். சொட்டு மருந்து விடுதல் (Instiling) நோக்கங்கள்: * காதில் உள்ள மெழுகு போன்ற குறுமியை மென்மையாக்கி வெளியேற்றுவதற்கு. * அழற்சியை குறைப்பதற்கும், வெளிப்புற காதில் உள்ள தொற்று கிருமிகளை அழிப்பதற்கும். * வலியிலிருந்து நிவாரணம் பெற * காதினும் வெளிப்பொருட்கள் இருந்தால் அதை அகற்றுவதற்கு தேவையான பொருட்கள் 1. ஒரு கிண்ணத்தில் சாதாரண சலைன் கரைசல் 2. பஞ்சு சுற்றிய குச்சிகள் 3. மருந்து பாட்டிலும் டிராப்படும். 4. பஞ்சு உருண்டைகள் 5. கழிவுத் தட்டு செய்முறை செவிலிய செயல் காரணம் ஒவ்வாமை உடைய மருந்தை கண்டுபிடி பெயர், அளவு, நேரம், எவ்வளவு மற்றும் எந்த காதில் ஊற்ற வேண்டும் என்பதை அறிய மருந்து ஆணையைக் கவனி நோயாளியை ஒரு பக்கமாக படுக்க வைக்கவும், சிகிச்சையளிக்கப்படக் கூடிய காது மேலே இருக்கும்படியாகவும் படுக்கவைக்கவும். காதின் மியாடஸ் பகுதியை சுத்தம் செய்யவும். தேவைப்பட்டால், சாதாரண சலைன் கரைசலில் பஞ்சு சுற்றிய குச்சிகளை நனைத்து காதை சுத்தம் செய்யவும். டிராப்பரை பாதி அளவு மருந்தினால் நிரப்பவும். செவிக் குழாயை நேராக்கு மூன்று வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு பின்னாவை (செவி மடலை) கீழும் பின்னும் இழு, பெரியவர்களுக்கு செவிமடலை மேலும் பின்னுமாக இழு. மருந்து சொட்டு டிராப்பரை காது குழாயிலிருந்து 1/2 அங்குலம் மேலே வைத்து சரியான எண்ணிக்கை சொட்டுகளை விடு. நோயாளியை பக்கவாட்டில் படுத்த நிலையிலேயே 5 நிமிடம் படுக்கச்சொல் காதில் சிறிய பஞ்சு உருண்டையை வைத்து அடைத்து 15 - 20 நிமிடங்கள் அப்படியே இருக்க செய் மருந்தையும் மற்றப்பொருட்களையும் அதற்குரிய இடத்தில் வை. கைகளை கழுவு மருந்தின் பெயர், எத்தனை சொட்டுகள், மற்றும் நோயாளியின் எதிர் வினை போன்றவற்றை பதிவேட்டில் பதிவுசெய் ஹைடிரோ கார்டிசோன் சொட்டு மருந்து வைரஸ் மற்றும் பூஞ்சைக் காளான் தொற்று உள்ள நோயாளிகளுக்கு தவிர்க்கப்பட வேண்டும். காது சவ்வுப்படலமாகிய (Tymphani membrane) ல் துளை விழுந்துள்ள நோயாளிகளுக்கு மருந்து ஊற்றும் போது நுண்ணுயிரறச் செய்யப்பட்ட நுட்பத்தை கையாளவேண்டும். தவறுகள் ஏற்படுவதை குறைக்க மருந்து ஊற்றுவதற்கு முன்னால் ஏதாவது ஓழுக்குகள் இருந்தால் அவற்றை அகற்றுவதற்கு செவிக்குழாயை நேராக நீட்டுவதால் மருந்து குழாயின் முழுப்பகுதிக்கும் செல்லும். டிம்பனிக்க சவ்வு படலம் கிழிந்து போவதை தடுக்க சொட்டு மருந்து வெளியேறுவதை தடுப்பதற்காக மருந்தை உள்ளேயே வைத்துக் கொள்வதற்காக நுண்ணுயிரிகள் பரவுவதை குறைக்க தடவுதல் (மேல் தடவுதல்) லோஷன், களிம்புகள் (அ) தைலங்களை தோலின் மேற்பரப்பில் (அ) சவ்வுப்படலத்தின் மீது தடவுதலாகும். நோக்கங்கள் * மென்மையான பரப்புகளை பாதுகாப்பதற்காக • பாதிக்கப்பட்ட பரப்பை வெதுவெதுப்பாக வைக்கவும், * தசையை ஓய்வான நிலையில் வைக்கவும் * நமைச்சலை தடுக்கவும். தேவையான பொருட்கள் கையுறை, பஞ்சு உருண்டைகள், மருந்து, ஒட்டும் பிளாஸ்திரி, கட்டுகட்டும் திண்டு, கழிவுத்தட்டு செய்முறை காரணம் செவிலிய செயல் 1. செய்முறை விளக்கம் 2. கையைக் கழுவி, பயன்படுத்தும் கைக்கு கையுறை அணி 3. மருந்து போடப்படக்கூடியை பகுதியை மட்டும் திறந்துவை 4. தேவைப்பட்டால் அந்தப்பகுதியை சோப்பு நீரால் கழுவி, உலரவை அ. பவுடர் தோல்பரப்பு உலர்த்தும், பவுடர் பகுதி முழுவதும் ஒரே சீராக தூவப்பட்டுள்ளதா என்பதை நிச்சயப்படுத்திக் கொள் ஆ. லோஷன்: மருந்துபாட்டிலை நன்றாக குலுக்கி, சிறிய அளவு மருந்தை சல்லாத்துணியில் எடுத்து முடிவளர்ச்சி திசையில் சீராக தடவு. இ. கீரீம்கள், களிம்புகள் மற்றும் பசைகள்: கையுறை அனித்தகையில் சிறிய அளவு மருந்தை எடுத்துக் கொள் முடியின் வளர்ச்சி பரப்புக்கு நேர் திசையில் நீளவாக்கில் பரப்பு. ஈ. ஏரோசால் ஸ்பேரே மருந்து உள்ள பாட்டிலை நன்றாக குலுக்கி கலக்கு 15 - 30 செமீ ஸ்பேரே செய்யப்படப்போகிற பரப்பிலிருந்து தொலைவில் வை. இவற்றை கண்களிலோ (அ) மூக்கிலோ படாதவாறு பார்த்துக்கொள். உ. தோல்பற்று (Transdermal patch) சுத்தமான உலர்ந்த முடியில்லாத பகுதியை தெரிந்துகொள் பற்றை எடுத்து பசைப் பகுதியில் கைபடாதவாறு தோலில் பரப்பி வைத்து உள்ளங்கையைக் கொண்டு 10 நொடிகள் அழுத்து. ஏற்ற நேரத்தில் அந்த பற்றை எடுத்துவிடு. நிறமாற்றம், வீக்கம் மற்றும் நமைச்சல் போன்றவை தோன்றினால் உடனே கவனிக்கவும். நுண்ணுயிரிகள் பரவுவதை தடுக்க தோலின் மேல் பரப்பில் ஈரத்தன்மை இருந்தால் பவுடர் ஒட்டிக்கொள்ளும், சீரற்ற நிலை காணப்படும். மருந்து பாட்டிலை குலுக்குவதால் மருந்து சீராக கலக்கப்பட்டிருக்கும் சரியாக தடவுவதால் சீராக பரப்பப்படுகிறதா என்பதை நிச்சயப்படுத்தி கொள். இவை மூக்கிலோ அல்லது கண்ணிலோ பட்டால் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். தேவைப்படும் நேரத்தை தவிர அதிக நேரம் பற்றை விட்டு வைத்தால் உறிஞ்சிக் கொள்ளும் தன்மை அதிகம் ஏற்படலாம். வயிற்றுக்குள் (Intra abdominal) மூலக்கூறு எடை குறைவுள்ள மருந்துகளை செலுத்துவதில் முக்கிய கவனம் தேவை. தொப்புள் பகுதியிலிருந்து 2 அங்குலம் வலது (அ) இடது பக்க வயிற்று தசையை பயன்படுத்தலாம். ஊசிபோடப்படக்கூடிய பகுதியை கிள்ளினாற்போல எடுக்கக்கூடாது. இந்த மருந்து (low molecular weight hepariun) முன்பாகவே ஊசிக்குழலில் நிரப்பப்பட்டு இருக்கும். இதில் இருக்கும் காற்றை ஊசிப்போடும் போது வெளியேற்றக் கூடாது. முதுகு தண்டுவடத்துக்குள் (Intratheral) இன்ட்ராதீகல் மருந்துகள் சாப்அரக்னாய் பகுதி (அ) ஏதாவது ஒரு வென்ட்ரிக்கிளில் நீண்டகால சிகிச்சைக்காக அறுவை சிகிச்சை முறையில் பொருத்தப்பட்டு அதன்மூலம் செவிலியர் மருந்துகளை செலுத்துவார்கள். பொதுவாக மருத்துவர்கள் தான் இந்த முறையில் மருந்துகளை செலுத்துவார்கள். முகர்தல் (Inhalation) Inhalation என்பது காற்று, ஆவி (அ) வாயுக்களை நுரையீரலுக்குள் இழுக்கும் செயலாகும். குறிப்பிட்ட பகுதியின் விளைவுக்காக இந்த மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. (எ.டு ஆவிபிடித்தல் மூச்சுப்பாதை அழற்சிக்கு நிவாரணம் அளிக்க). ஆவிபிடித்தல் (Steam Inhalation) நுரையீரலில் உள்ள காற்றுபைகள் (அ) பொது விளைவுக்காக வெப்பமான (அ) ஈரமான காற்றை ஆழ்ந்து சுவாசிப்பதாகும். நோக்கங்கள் * மூச்சுப்பாதையிலுள்ள சளிபடலத்தின் அழற்சியிலிருந்து நிவாரணம் பெற * சளியை இளகவைத்து நுரையீரல் பாதையிலிருந்து சளியை வெளியேற்ற • தொண்டைப்பகுதி (அ) மூச்சுக்குழலில் ஏற்படும் இறுக்கத்தை தடுக்க • மூச்சுப்பாதையில் தொற்றுநீக்க செயலை கொடுக்க தேவையான பொருட்கள் ஒரு தட்டில் டவல், நெல்சன் உட்சுவாசக் கருவி, தொற்று நீக்க கரைசல், சல்லாத்துணி, பஞ்சு உருண்டைகள், அவுன்ஸ் டம்ளர், முகம் துடைக்கும் துவாலை, கழிவுத் தட்டு, இதயமேசை, தலையணைகள், டிங்சர் பென்சாயின், கொதிக்கும் நீர் (160°F) செய்முறை செவிலிய செயல் காரணங்கள் மருத்துவர் ஆணையை கவனித்து செவிலிய கவனிப்பை திட்டமிடு. நோயாளிக்கு செய்முறையை விளக்கி கூறு. செய்முறைக்கு முன் சிறுநீர், மலம், கழித்து விட்டாரா என்பதை நிச்சயப்படுத்திக் கொள். உட்சுவாசக் கருவியை வெதுவெதுப்பாக்க சிறிது வெந்நீரை ஊற்றி, ஒரு நிமிடத்துக்குப்பின் அதை காலி செய். நெல்சன் உட்சுவாசக் கருவியால் காற்று உட்செல்லும் துளைக்கு கீழே கொதிநீரை ஊற்றவேண்டும். தண்ணீர் துணைக்கு கீழ்தான் இருக்க வேண்டும். நுண்ணுயிரறச் செய்யப்பட்ட வாய்ப்பகுதியை கொண்டு உட்சுவாசக் கருவியை இறுக்கமாக மூடு, வாய்ப்பகுதி காற்று உட்செல்லும் பகுதிக்கு எதிரில் இருக்கிறதா என்பதை கவனி. வாய்ப்பகுதியை சல்லாத் துணியை கொண்டு மூடு. மற்றகாற்று உட்செல்லும் பகுதியை பஞ்சு உருண்டை கொண்டு அடை. உட்சுவாசக்கருவியை ஒரு துவாலையால் சுற்றி ஒரு கிண்ணத்தில் வை. மின்விசிறியை நிறுத்த வேண்டும். நோயாளியை உட்கார்ந்த நிலையில் (அ) பவுலர் நிலையில் உட்கார வை. உட்சுவாசக் கருவியை இதய மேசையின் மேல் நோயாளிக்கு எதிரே வைத்து, காற்றுத் துளை எதிரே இருக்கும் படியாகவும் வை. பஞ்சு உருண்டையை எடுத்து கழிவுத் தட்டில் போடு நோயாளியை வாய்பகுதியில் உதட்டை வைத்து காற்றை உள்ளிழுத்து மூக்கின் வழியாக வெளியே விடச்சொல் சிகிச்சையை நீராவி வெளிவரும் வரை 15 20 நிமிடங்கள் தொடர்ந்து செய் குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு உட்சுவாசக் கருவி யை நீக்கி விட்டு, நோயாளியின் முகத்தை துடை மார்பு பிசியோதெரபி கொடுத்து இருமி, சளியை வெளியேற்றச் சொல். நோயாளியை படுக்கையிலேலே 1/2 மணி நேரம் இருக்கச் சொல் எல்லாப் பொருட்களையும் பயன்படுத்தும் அறைக்கு எடுத்துச்சென்று, உட்சுவாசக் மயக்கம் மற்றும் வெப்ப நிலை கருவியை காலி செய். கருவியின் உட்பகுதியில் இருக்கும் டிங்சர் பென்சாயின் கரையை ஆல்கஹால் கொண்டு நீக்கு. செவிலியர் பதிவேட்டில் செய்முறை, தேதி, நேரம், நோக்கம் மற்றும் நோயாளி யின் எதிர் வினை போன்றவற்றை பதிவுசெய். ஓய்வு நிலையை அதிகப்ப டுத்த உதவுதல் செய்முறையின்போது உட்சுவாசக் கருவியின் வெப்பம் இழத்தலை குறைக்க. உட்சுவாசக் கருவியின் துளைக்கு மேல் வெந்நீர் ஊற்றினால்,நோயாளி உறிஞ்சும்போது வெந்நீர் வாய்க்கால் சென்று கொப்புளங்களை உண்டாக்கலாம். காற்று உட்செல்லும் பகுதியில் நீர்நிரம்பியிருந்தால் அதனுள் காற்று செல்ல முடியாது. இந்த அமைப்பில், நோயாளியிடிமிருந்து தொலைவில் இருப்பதால் சல்லாத் துணியைக் கொண்டு வாய்ப்பகுதியை மூடுவதால் உதடுகளில் தீப்புண் ஏற்படுவதை தடுக்கலாம். பஞ்சு உருண்டை நீராவி வெளியேறுவதை தடுக்கும். உட்சுவாசக் கருவியிலிருந்து வெப்பம் வெளியாவதை தடுக்க காற்றுத்துளை எதிரில் இருப்பதால் கொப்புளங்கள் ஏற்படுவதை தடுக்கலாம். பஞ்சு உருண்டையை அகற்றுவதால் காற்று உட்செல்லும். மூக்குதுளை வழியாக நீராவி, காற்று வெளி யேறு வதால், மூக்குத்துளை சிலேட்டும் படல் அழற்சி நீக்கப்படும். செய் முறையின் விளைவு நன்றாக இருப்பதற்கு நோயாளியை வசதியான நிலையில் வைக்க. மயக்கம் மற்றும் வெப்ப நிலை மாற்றத்தை தடுப்பதற்காக பொருட்களை சுத்தம் செய் வதால் கெட்டுப் போவதையும், குறுக்கு தொற்று ஏற்படுவதையும் தடுக்கலாம் சிரைவழி திரவம் செலுத்துதல் அதிக அளவு திரவத்தை சிரை வழியாக சொட்டுக்கருவியின் மூலம் செலுத்துவதற்கு சிரைவழித் திரவம் செலுத்துதல் என்று பெயர். செவிலிய செயல் காரணம் மருத்துவ ஆணையில் மருந்தின் பெயர், அளவு மற்றும் செலுத்தப்படும் முறைபோன்றவற்றை கவனி. ஏற்கனவே இருக்கும் சிரைவழியாக திரவம் செலுத்தப்படவேண்டுமென்றால், கொடுக்கப்படும் திரவத்தை கண்டுபிடி ஊசிகுத்திய இடத்தில் அழற்சி அறிகுறிகள் தென்படுகிறதா என்று பார் மருந்துக்கு ஒவ்வாமை பற்றிய வரலாற்றைகவனி. கைகளைக் கழுவிக்கொண்டு கையுறையை அணி ஆம்ப்யூல் (அ) வயிலிலிருந்து மருந்தை தயார் செய் நோயாளியின் பெயரை மருந்து அட்டையுடன் ஒப்பிட்டுப்பார் மூடப்படாத ஊசியையும், ஊசிக் குழலையும் சரியான பெட்டியில் போட்டு அகற்றி விடு கையுறையை கழற்றி விட்டு கைகளை கழவு மருந்து செலுத்தும்போதும் செலுத்திய சில நிமிடங்களுக்குப் பிறகும் நோயாளிக்குக்கு பக்கவிளைவுகள் ஏற்படுகிறதா என்பதை உற்று கவனி. மருந்து, அளவு, முறை, நேரம் மற்றும் மருந்தின் வடிவம் போன்றவற்றை பதிவேட்டில் பதிவுசெய் ஏதாவது பக்கவிளைவுகள் ஏற்பட்டால் பொறுப்பிலிருக்கும் செவிலியருக்கோ (அ) மருத்துவருக்கோ அறிவிக்க வேண்டும் பாதுகாப்பாகவும், துல்லியமாகவும் மருந்து உட்செலுத் தப்படுவதை நிச்சயப்படுத்திக்கொள். கொடுக்கப்படும் மருந்து ஒத்துப் போகாதா நிலை. வீக்கமுற்ற பகுதியில் மருந்தைசெலுத்தக்கூடாது. சிரைவழியாக கொடுக்கப்படும் முழு அளவு (போலஸ்) விரைவாக செயல்புரியும் நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்க சரியான நோயாளிக்கு மருந்து. கொடுக்கப்படுகிறதா என்பதை நிச்சயப் படுத்திக்கொள்ள எதிர்பாராதவிதத்தில் ஊசி குத்துவதை தடுக்க. நோய்க்கிருமிகள் பரவுவதை தடுக்க சிரை வழியாக மருந்து கொடுத்தல் வேகமாக செயல்புரியும் நேரத்தை சரியாக பதிவு செய்தால் மருந்து கொடுப்பதில் தவறுதல் ஏற்படாது. சிரைவழியாக மருந்துகளை போலஸ் முறையில் கொடுக்கும் போது.பக்கவிளைவுகள் ஏற்பட்டால் அவசர.சிகிச்சை தேவைப்படும். சிரைவழியாக ஊசிபோடுவதற்கு : சிரையை கண்டு பிடித்து இறுக்கட்டுப்போடும் மென்மையான இரப்பர் குழாயைக் கொண்டு தேர்வு செய்யப்பட்ட பகுதிக்கு இடையில் கட்டவேண்டும். இந்தப்பகுதி இரத்த ஓட்டத்திற்கு நேராக இருக்க வேண்டும். நோயாளியை கை மடக்கி நீட்டச்சொல். தோலை இழுத்து ஊசியை. கோணத்தில் ஊசியை செலுத்தவேண்டும். சிரை செல்லும் பாதையை கண்டுபிடித்து ஊசியை நேராக சிரைக்குள் செலுத்த வேண்டும். ஊசிக்குழலில் இரத்தம் தென்பட்டால் இரப்பர் கட்டை மெதுவாக தளர்த்திவிட்டு மருந்தை மிகவும் மெதுவாக செலுத்து. ஊசியை எடுத்தபிறகு அந்தப் பகுதியில் அழுத்தம் கொடு. சிரைவழியாக ஊசிபோடுதல் சிரை வழியாக ஊசி போடுதல் என்பது மருந்தை நேரிடையாக சிரைக்குள் ஊசிக்குழல் மற்றும் ஊசியின் மூலம் செலுத்துதலாகும். நோக்கங்கள் • உடனடியாக மருந்து செயல்பட வேண்டிய நேரத்தில், எ.டு இருதயம் மற்றும் மூச்சுமண்டலத்தை ஊக்குவிப்பவை பொதுவான மயக்க மருந்து. * மருந்தின் செயலுக்காக இரத்தத்தில் அல்லது இரத்தக்குழாயில் செலுத்தப்படுவது * மற்ற முறைகளில் மருந்து கொடுக்கப்பட முடியாத நிலை * தேவையென கருதி குறிப்பிட்ட இடத்தில் சிகிச்சைக்காக பொதுவாக வேரிகோஸ் சிரைசிகிச்சை * நோய் அறி சோதனைக்காக இரத்த ஓட்டத்தில் மருந்து செலுத்தப்பட வேண்டியிருந்தால் (எ.டு) சிரை வழியாக பைலோகிராம் * உடலுக்கு ஊட்டசத்தை திரவ நிலையில் கொடுப்பதற்காக சிரைகளை கண்டுபிடித்தல் சிரைவழியாக ஊசி போடுவதற்கு சிரைகள் முழங்கையின் உட்பகுதியில் (Cephalic or Median Basilie) அல்லது மணிக்கட்டுக்கு மேலே கண்டுபிடிக்கப்படும். கணக்காலுக்கு மேலுள்ள சஃப்ஹினஸ் சிரையிலும் (saphenous) ஊசிபோடலாம். இளங்குழந்தை மற்றும் சிறிய குழந்தைகளுக்கு ஜூகுலர், பெமோரல் மற்றும் தலையிலுள்ள சிரைகளை பயன்படுத்தலாம். கணக்கிடுதல் (Assessment) • நோயாளியை எல்லாவிபரங்களுடன் தெரிந்தெடு * மருந்து கொடுக்க வேண்டிய நேரம், வகை, மருந்தின் அளவு போன்றவற்றை மருத்துவரின் ஆணையிலிருந்து பிடி. * மூத்த செவிலியரிடம் இருந்து அறிவுரைகளையும் உதவிகளையும் பெற்றுக்கொள் * சிரைகளின் நிலையை தெரிந்துகொண்டு எதைக் குத்தலாம் என்பதை முடிவுசெய் * ஊசிப் போடப்படுவதன் நோக்கத்தை கண்டுபிடி * மருந்தின் பெயர், அளவு, மருந்தின் கால அளவு இயற்பியல் பண்புகள் போன்ற மருந்துகளைப் பற்றிய விளக்கங்களை கவனி. தேவையான பொருட்கள் ஒரு தட்டில் • இறுகக் கட்டும் இரப்பர் குழாய் (Tourniquet), கழிவு தட்டு . * ஸ்பிரிட் (அ) அல்லது ஆல்கஹாலில் தோய்த்த பஞ்சுகள் • சிறிய ஜாடியில் நுண்ணுயிரறச் செய்ய தண்ணீர் * ஒட்டும் பிளாஸ்திரி * தொற்று நீக்கம் செய்யப்பட்ட ஊசிக்குழல்கள் 5 cc அல்லது 10 cc ஊசிக்குழல் மற்றும் ஊசிகள் * பஞ்சு * தேவையான மருந்து * கொடுக்கப்பட வேண்டிய மருந்து * மருந்து ஆம்ப்பியூலில் மருந்தால் அரம் (File) தேவைப்படும். செய்முறை: செய்யவிருப்பதை சரியாக விளக்கிக் கூறி நோயாளியின் நம்பிக்கையையும், ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள். எல்லாப்பொருட்களையும் படுக்கையருகே சேர்த்து வை . செவிலிய செயல் காரணம் கைகளை கழுவிக்கொண்டு கையுறையை அணி நோயாளியை வசதியான நிலையில் படுக்கவைத்து, கைகள் நீட்டப்பட்டு தாங்கப்படவேண்டும். இறுக்க கட்டும் இரப்பர் குழாறைநோயாளியின் கையில் கட்டவும் (அ) உன் கை யால் இறுகப்பற்றி கொள். சிரைபுடைப்பாகத் தெரிய இப்படி செய்யலாம். மெத்திலேட் ஸ்பிரிட் (அ ) ஆல்ஹகாலில் நதைத்த பஞ்சைக் கொண்டு தோலை சுத்தம் செய்து, பின் அதை கழிவுத் தட்டில் போட வேண்டும். ஆம்ப்யூல் (அ) வயலில் உள்ள மருந்தை, ஊசிக்கு ழலில் நிரப்ப தயாராக வைத்துக்கொள்ள வேண்டும் ஊசிக் குழலை மருந்தால் நிரப்பி காற்றை வெளியேற்றியவுடன் ஊசியை சிரையினுள் செலுத்த வேண்டும். ஊசி சிரைக்குள் நுழைக்கப்படுகிறது. இரத்தம் வருவது தெரிந்தால் உடனே இரப்பர் குழாயை தளர்த்தி விடவும் மற்றம் மருந்தை மெதுவாக செலுத்த வேண்டும். மருந்து செலுத்திய பிறகு ஒரு துண்டு பஞ்சு (அ) சல்லாத்துணியை குத்தப்பட்ட பகுதியின் மேல் வைத்துவிட்டு மெதுவாக ஊசியே வெளியே எடுக்க வேண்டும். நோயாளியை கைகளை 1 அல்லது 2 நிமிடங்களுக்கு மடக்கிவை. கசிவு ஏற்பட்டால் டிங்சர் பென்சாயின் கொண்டு கட்டுப்போடு நோயாளியை சரியான இடத்தில் வசதியாக வை. மூடப்படாத ஊசியையும் ஊசிக் குழலையும் தகுந்த கலத்தில் போடு கையுறையை நீக்கிவிட்டு கையை கழுவு. பொருட்களை அதற்குரிய இடத்தில் வை. மருந்து செலுத்தும் போது ஏற்படும் பக்கவிளைவுகளை பல நிமிடங்களுக்கு கூர்ந்து கவனி. மருந்து, அளவு, முறை மற்றும் மருந்தின் வடிவத்தை பதிவு செய் ஏதாவது பக்கவிளைவுகள் ஏற்பட்டால் பொறுப்பு செவிலியர்களுக்கோ (அ) மருத்துவருக்கோஅறிவிக்கவும். இரப்பர் கட்டை போட மற்றும் தளர்ந்த (அ) கையை பற்றிப்பிடிக்க ஒரு உதவியாளர் இருப்பது நல்லது. தொற்று பரவுவதை தடுப்பதற்கு சரியாக சிரையில் ஊசிபோடுவதற்கு தொற்று பரவுவதை தடுப்பதற்காக காற்று இரத்த குழாய்களில் சென்று ஏற்படுவதை தடுப்பதற்கு, மருந்து தேங்கிவிடுவதை தடுப்பதற்காக. எதிர்பாராத விதவிதமாக ஊசிகுத்துதலை தடுப்பதற்காக நோய் நுண்ணுயிரிகள் பரவுவதை தடுக்க சிரைவழியாக செலுத்தப்படும் மருந்துகள் வேகமாகசெயல் அரிவதால் அதிர்ச்சிக்கான அறிகுறிகளை கவனிக்கவேண்டும். குறித்த நேரத்தில் பதிவு செய்வது மருந்து கொடுத்தலில் தவறுதல்களை தடுக்கும். பின்னர் ஏற்படும் சிக்கல்களை தடுத்து உடனடியாக சிகிச்சையளிக்க. ஆதாரம்: தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்