குதிக்காலையும் மற்றும் பாதத்தையும் சரியான கவனிப்புகளுடன் நோய் வராமல் தடுக்கக்கூடிய நிலைகளை உள்ளடக்கியது பாத கவனிப்பாகும். நோக்கங்கள் 1. தோல் முழுமையாக இருக்க செய்தல் 2. சௌகரியம் மற்றும் சுகத்தை அளித்தல் 3. பாத வேலைகளை அதே நிலையில் பாதுகாத்தல் 4. சுய கவனிப்பை ஊக்கப்படுத்துதல் 5. பாதப்புண்ணை தடுத்தல் 6. காலில் ஏற்படும் கால் ஆணி (calculus) ஆகியவற்றை கண்டறிந்து குணப்படுத்துதல் தேவையான பொருட்கள் 1. நீர் உறிஞ்சும் தன்மையுடைய பஞ்சு அடுக்கு 2. துவைத்த துணி 3. மென்மையான துண்டுகள் 4. கை கழுவும் பேசின் 5. மிதமான நீர் 6. சோப்பு 7. கரைசல்கள் (அ) லோசன் 8. கையுறைகளை பயன்படுத்திய பிறகு நீக்குதல் 9. நக கிளிப்ஸ் 10. பாலிஷ் நீக்கி (தேவை இருத்தல்) செய்முறை நோக்கம் 1. கைகளை கழுவ வேண்டும். 2. வசதியான நிலையில் நாற்காலியில் உட்கார வைக்க வேண்டும் . படுக்கையிலேயே இருப்பவர்களுக்கு தலைப்பாகத்தை உயர்த்த வேண்டும் 3. மிதமான நீரை பேசனில் 3/4 நிரப்பி (100F - 104F) பேசினுக்கு கீழ் நீர் உறிஞ்சும் பஞ்சு அடுக்கினை வைக்க வேண்டும். நீரழிவுகாரர் கால்கள் பேசினுக்குள் இருக்கும்படி வைக்க வேண்டும் 4. 20 நிமிடங்களுக்கு கால்களை நனைக்கவும் 5. சோப்பும் நீரும் கொண்டு கால்களை சுத்தம் செய்ய வேண்டும் 6. கால் நகங்களின் பகுதிகளில் மற்றும் விரல் இடுக்குகளில் மென்மையான துண்டை கொண்டு துடைத்து, உலர்ந்த பையில் வைக்க வேண்டும். 7. தோல் உலர்ந்த நிலையில் இருந்தால் ஈரப்பதமான லோஷன்களை போட வேண்டும் 8. சரியான முறையில் பொருட்களை அதனதன் இடத்தில் வைக்க வேண்டும். 9. கைகளை கழுவவும் 10. செய்முறையை பதிவு செய்ய வேண்டும். 11. பாத சிக்கல்கள் ஏற்படாமல் தடுக்க தினசரி செய்முறையை ஊக்கப்படுத்தி கற்பிக்க வேண்டும். 12. கொப்பளங்கள் மற்றும் வீக்கம், வெட்டுகள், சிவப்பு புள்ளிகள் கால்களில் இருக்கிறதா என்பதை காலின் கீழ்ப்பகுதியில் ஒரு கண்ணாடியின் மூலம் பார்வையிடவும் அல்லது யாராவது ஒரு துணையாளைக் கொண்டு வினவ வேண்டும் என கற்பிக்கவும். 13. வெறுங்காலோடு இருந்தால் அதன் அபாயத்தை விவரிக்க வேண்டும் 14. பொருத்தமான காலணிகளை அணிய புத்திமதி கூறவேண்டும் 15. வெப்பமான நீர் பாட்டில்களையோ மற்றும் வெப்பமான பஞ்சு அடுக்குகளையோ உபயோகிக்கக் கூடாது என்று புத்திமதி கூறவேண்டும். 16. உட்காரும்போது காலை கீழே வைக்க வேண்டும் என்று கற்பிக்க வேண்டும். 1 நாளைக்கு 2 அல்லது 3 தடவைகள் குதிக்காலையும் மற்றும் கால் விரல்களையும் மேலும் கீழும் நகர்த்த வேண்டும். 17. நீண்ட நேரம் உட்கார்ந்து மற்றும் கால்களை குறுக்கு வாட்டில் வைக்கக்கூடாது என்று கூறவேண்டும். 18. நீரிழிவுக்காரர் குடிக்கவோ அல்லது புகைப்பிடிக்கவோ கூடாது என்று ஆலோசனை வழங்க வேண்டும். நோய்த்தொற்றை தடுத்தல் வசதியை உயர்த்துதல் மிதமான நீரைக் கொண்டு மென்மையான நகங்களையும் அப்பகுதியை இரத்த ஓட்டத்தினால் அதிகரிக்கலாம், கை கால்களில் உணர்ச்சி குறையும் நிலை நீரழிவுகாரர்க்கு உண்டு., தீப்புண்களை தடுக்க நீரின் வெப்பநிலையை கவனமாக பரிசோதிக்கவும். மென்மையான நிலையில் இருந்த எபிதீலியல் செல்களை நீக்கினால் நக வெடிப்புகளை சாத்தியமான முறையில் குறைக்கும் சோப்பும், நீரும் தூசிகளை நீக்கும் மென்மையாக இருந்தால் எளிதாக உறிஞ்சப்பட்டு மற்றும் அப்பகுதியை துடைத்து முக்கியமாக பாக்டீரியல் வளர்ச்சியை நகங்களில் ஏற்படுவதை குறைக்கும் ஆரம்ப நிலையை கண்டறிந்து ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் சரியான முறையில் சிகிச்சை அளிப்பது. புண்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவும். சில சமயங்களில் வெறும் கால் தோல். அல்லது கால் காயமாகும். பொருத்த மில்லாத காலணிகளை. அணிவதன் மூலம் காலில் உராய்வு மற்றும் காயங்களை ஏற்படுத்தும். கால்கள் எரிச்சல் தன்மையுடனும் மற்றும் கொப்புளங்கள் போன்ற அபாய நிலையும் ஏற்படும் இரத்த ஓட்டத்தை மிகைப்படுத்தும். இனி வரக்கூடிய சிக்கல்களை தடுத்தல் நகப்பராமரிப்பு நோக்கம் 1. நகத்தைச் சுற்றி தோல் முழுமையாக இருப்பதை காப்பாற்றுதல் 2. நோயாளிக்கு சௌகரியத்தையும், வசதியையும் அளித்தல் 3. பாதத்தின் வேலையை பராமரிக்க வேண்டும் 4. சுய பராமரிப்பை ஊக்குவித்தல் மதிப்பிடுதல் 1. உபயோகம் இல்லாத நிலை அல்லது பலவீனமாக நடக்கும் முறையை பார்வையிட வேண்டும். தசை குறைபாடுகளோ மற்றும் எலும்பு அல்லது வலியுடன் கூடிய கால்கள் இயற்கை தன்மையற்று நடக்கும் முறைக்கு காரணமாக அமைகிறது. 2. காலணிகளை அணிய சொல்ல வேண்டும். கால் உறைகளை அணிவதன் மூலம் அதிகமான வியர்வை உறிஞ்சும் மற்றும் காளான் நோய்த் தொற்றுகளை நீக்கும். 3. நக பிரச்சனைகளும் அல்லது பாதப் பிரச்சனைகளும் கண்டறிதல். அ) நீரிழிவுக்காரருக்கு இரத்த ஓட்டத்தினால் தோலில் இருக்கும் திசுக்களுக்கு மாற்றம் ஏற்படும். அதிகமான நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு தோல் முழுமையில்லாமல் போய்விடும் மற்றும் குறைந்த உணர்ச்சிகளுடன் கூடிய வலி ஏற்படும்போது நரம்பு சம்பந்தப்பட்ட குறைப்பாடுகள் இருக்கும். ஆ) வயதானவர் நகத்தையும் மற்றும் மாதத்தையும் கவனிக்க முடியாமல் போதல். ஏனெனில் ;பார்வை குறைபாடு, பருமன் அல்லது தசை எலும்பு நிலைகள் மற்றும் செயல்படுத்தும் திறன் குறைபாடு. இ) மூளை இரத்தக்குழாய்கள் விபத்தானது. அவர்களின் நடையை மாற்றும் அல்லது பாதம் தொங்கி போதல், தசை பலவீனமடைதல், பக்கவாதம் ஏற்படலாம். ஈ) முதிர்க்காலிலும் மற்றும் பாதத்திலும் ஏற்படுகின்ற வீக்கம் (சிறுநீரகக் கோளாறு, கன்ஜெஸ்டில் இதய செயலிழப்பு) இரத்த ஓட்டத்தை குறைக்கும். மேலும் பொருத்தமில்லாத காலணிகளை அணிவதன் மூலம் திசுக்களைச் சுற்றி இரத்தம் கசியும். உ) சுய கவனிப்புகளை செயல்படுத்த நோயாளியின் திறனை ஆய்வு செய்ய வேண்டும். ஊ) கால்கள் மற்றும் கால் விரல்கள், கைவிரல்கள், தோல் மற்றும் நகங்களை பார்வையிடுதல். வெடிப்புகள் மற்றும் கால் விரல்களில் உலர்ந்தப் பகுதியை மதிப்பிடுதல். எ) பாதம் மற்றும் நகப்பராமரிப்பு அளிக்க தேவையான அறிவோடு அவர்களை மதிப்பிடலாம். ஏ) நகத்தை ஒழுங்கான நிலையில் வெட்டிவிடுதல் திரும்பவும் அவ்விடத்தை சரி செய்தல். பலவகையான கோட்பாடுகள் தேவைப்படுகிறது. ஐ) இவையெல்லாம் கண்டறிந்தால் அறுவை சிகச்சைக்கு செல்லலாம். நகச்சாயம் நீக்க வேண்டும். ஆக்ஸிஜனேஷன் மாற்றமில்லாமல் நகத்தை மதிப்பீடு செய்யலாம். பொருட்கள் 1. நீர் ஊறாத பஞ்சு அடுக்கி அல்லது நீர்க்காப்பு பஞ்சு அடுக்கு 2. கழுவும் துணி, துண்டுகள் 3. வாஷ்பேசின், மிதமான நீர், சோப்பு 4. லோஷன் 5. கையுறை 6. பைள், நக கிளிப்பர்ஸ் 7. ஆரஞ்சு ஸ்டிக் 8. பாலிஷ் நீக்கி (தேவையிருந்தால்) செய்முறை படிகள் பிரிவு 1.கைகளைக் கழுவு 2. சாத்தியம் இருந்தால் நோயாளியை நாற்காலியில் உட்கார உதவி செய். படுக்கையிலேயே இருக்கும் நோயாளிக்கு படுக்கையின் தலைப்பகுதியை உயர்த்தி வைக்க வேண்டும். 3. அறுவை சிகிச்சைக்கு செல்லும்போது கலர் நகப்பாலிஷை நீக்க வேண்டும். தெளிவான நகப் பாலிஷை போடுவதற்கு மறுப்பு யோசனை செய்து கோட்பாடுகளின் மூலம் தீர்மானம் செய்ய வேண்டும். 4. மிதமான நீரைக் கொண்டு வாஷ்பேசினில் நிரப்பு. பேசினின் அடியில் நீர்க்காப்பு பொருளாலான பஞ்சு அடுக்கை வை. நோயாளின் கால்களையும் அல்லது கைகளையும் பேசினில் நனை. 5. சென்றடையக்கூடிய குறிப்பை வை. 10-20 நிமிடங்களுக்கு கைகளையும் அல்லது கால்களையும் ஊறவை. 6. கைகளையும் கால்களையும் உலர்த்த வேண்டும். திரும்பவும் மிதமான நீரைக் கொண்டு அடுத்த கால்களை கழுவ வேண்டும். ஊறவைத்த கை, கால்களினால் வேலை செய்வதால் நகங்கள் மென்மை அடையும். 7. ஆரஞ்சு குச்சியை நகத்தில் அடியில் வைத்து மென்மையான தூய்மை செய்தல். 8. கட்டைவிரல் அல்லது பெரிய விரல் அல்லது பெருவிரலில் இருந்து நகங்களை சுத்தம் செய்ய வேண்டும். நகத்தினை இருபுறமும் வளைத்து நேராக வெட்ட வேண்டும். 9. ஆரஞ்சு குச்சியின் உதவியுடன் மெதுவாக பின்புற மேற்புற தோல் பகுதியை தள்ளு. 10. மற்றொரு நகத்திற்கு திரும்பவும் செய்முறையை மேற்கொள். 11. கைகள் அல்லது பாதத்தை மிதமான நீரைக்கொண்டு கழுவு. 12. துண்டைக் கொண்டு உலர்த்து. முக்கியமாக (இடுக்குப் பகுதிகளில்) 13. லோஷனைக் கொண்டு கைகளிலும் அல்லது கால்களிலும் தடவ வேண்டும் 14. வசதியான நிலையில் இருக்க உதவி செய்ய வேண்டும். 15. எல்லாப் பொருட்களை நீக்கி விட வேண்டும். 16. கைகளை கழுவ வேண்டும் கலர் நெயில் பாலிஷ் நகத்தில் மாற்றங்களை பார்க்க முடியாமல் தடுக்கலாம். அதோடு குறைந்த ஆக்ஸிஜனேஷனை தடுக்கலாம். மிதமான வெப்பநீரில் நனைத்தால் நோய்த்தொற்றை குறைக்கும் மற்றும் லோகல் (பகுதி) இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். நகத்தை மென்மையாக்கும். ஊறவைப்பதின் மூலம் எளிதாக இறந்த எபிதீலிய செல்களை நீக்கவும் மற்றும் நக வெடிப்பகளை ஏற்படாமல் தடுக்கும். முதல் படியில் செவிலியானவள் திறமை யோடு இரண்டாவது கையையோ அல்லது பாதத்தையோ நனைக்க வேண்டும். மேற்புறதோல் கவனிப்பை குறைத்து, தொற்றுள்ள மேற்புற தோல் மற்றும் மேற்புறநகம் உருவாவதைக் குறைக்கும் அதிகப்படியான ஈரத் தன்மையை நீக்கும் மற்றும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுக்கும் ஆதாரம்: தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்