விளக்கம்

மருந்தை இட்டு, தொப்புள் கொடியை சுத்தம் செய்யும் முறைக்கு தொப்புள் கொடி கவனிப்பு என்று பெயர்.

நோக்கம்

• உடலில் தங்கியிருக்கும் நோய்த்தொற்றை தடுக்கவும் மற்றும் கொடியை சுத்தம் செய்யவும்.

• கொடியில் இருக்கும் அறிகுறிகளுடன் கூடிய நோய்த்தொற்றை தணிக்கை செய்து பார்வையிடுதல்

தேவையான பொருட்கள்

1. பஞ்சு (தூய்மை செய்ய பயன்படும் உறிஞ்சு பொருள்)

2. ஸ்பிரிட்

3. மருந்துகள் (உத்தரவிடப்பட்டிருந்தால்)

4. காகிதப்பை (கழிவுகளை அகற்ற)

செய்முறை

* தேவையானப் பொருட்களை குழந்தையின் அருகில் வைக்க வேண்டும்.

* கொடியில் அறிகுறிகளுடன் கூடிய நோய்த்தொற்று இருந்தால் பார்வையிடுதல் மற்றும் சீழ் நிலை இருந்தால் மேற்கொண்ட நடவடிக்கை எடுத்து தீர்மானம் செய்ய வேண்டும்.

* ஸ்பிரிட்டை வைத்து இடையூறு இல்லாமல் கொடியை சுத்தம் செய்ய வேண்டும் மற்றும் நோய்த்தொற்று கொடியில் ஏற்படாமல் தடுக்க மருந்தை தடவ வேண்டும்.

* பயன்படுத்திய பஞ்சுடைகளை நீக்கி மற்றும் கைகளை நன்கு கழுவி, பொருட்களை அதனதன் இடத்தில் வைக்க வேண்டும்.

* செய்முறையை பதிவு செய்து, கொடியை கூர்ந்து கவனிக்க வேண்டும்.

ஆதாரம்: தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்