வரையறை வாய்வழியாக அல்லாமல் மற்ற முறைகளில் உணவூட்டுதலுக்கு "கூடுதல் வாய்வழி உணவளித்தல்” என்று பெயர். செயற்கை முறையில் உணவூட்டுதலின் பல வழிமுறைகள் மூக்கு துளை வழியாக உணவூட்டம் வயிற்று இரைப்பை குழாய் அல்லது வாய் இரைப்பை குழாய் மூலம் உணவளித்தல் இரைப்பையில் துளை அல்லது குடல் மூலம் உணவூட்டுதல் ஆசனவாய் வழியாக உணவூட்டுதல் சிரை வழி திரவம் செலுத்துதல் மூக்குத்துளை வழியாக உணவூட்டல் திரவ உணவை குழாய் மூலம், மூக்குத்துளை வழியாக இரைப்பைக்குள் செலுத்துவது மூக்குத்துளை வழியாக உணவூட்டல் எனப்படும். நோக்கங்கள் போதுமான அளவு அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொடுப்பதற்காக அதிக அளவு திரவ உணவை அளிப்பதற்காக இரைப்பையில் உள்ளவற்றை உறிஞ்சி எடுப்பதற்காக தேவைப்படுபவர்கள் வாய்வழியாக உணவு உட்கொள்ள முடியாதவர்கள் (எ.டு) சுயநினைவற்றவர்கள், பாதி சுயநினைவுடன் இருப்பவர்கள் மற்றும் சித்தபிரம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள். (Delirious) உண்ண மறுக்கும் நோயாளிகள் (எ.டு) மனநோயாளிகள் வாய் அல்லது தொண்டையில் வீக்கம் ஏற்பட்டு விழுங்குவதில் கடினம் அல்லது விழுங்க முடியாத நிலை. எ.டு. தாடை முறிவு, பிளவுபட்ட உதடு அல்லது அன்னசிகிச்சையின்போது, வாய், தொண்டை மற்றும் உணவுக்குழல் அறுவை சிகிச்சையின்போது, தொண்டை, முகம் மற்றும் உணவுக்குழல் வாதத்தின்போது. நோயாளி மிகவும் பலவீனமான நிலையில் வாய்வழியாக நிறைய உணவுகளை உட்கொள்ள முடியாத நிலை வ எண். பொருட்கள் நோக்கங்கள் 1 உணவு கோப்பை நீருடன் வாய் சுத்தம் செய்வதற்கு 2 கழிவுத்தட்டு (கழிவுக் கிண்ணம்) உணவூட்டுவதற்கு முன்னும் பின்னும் தேவையற்ற திரவங்களை கொட்டுவதற்கு 3 இரப்பர் விரிப்பு மற்றும் துண்டு படுக்கை துணிகளை பாதுகாப்பதற்கு 4 பஞ்சு சுற்றிய குச்சிகள் மூக்குத்துளையை சுத்தம் செய்ய 5 சலைன் அல்லது சோடியம் பைகார்பனேட் கரைசல் குழாயை சுத்தம் செய்ய. 6 லெவின் குழாய் அல்லது ரைல்ஸ் குழாய் ஒரு கிண்ணத்தில் பனிகட்டியுடன் குழாயை உட்செலுத்துவதற்காக. 7 உயவுப்பொருள் ஜெல்லி கிளிசரின் அல்லது பாரபின் பாதையின் உராய்வுதன்மையை தடுக்க 8 பிளாஸ்திரி மற்றும் கத்தரிக்கோல் குழாயை சரியான நிலையில் பொருத்துவதற்கு 9 ஒரு கிண்ணத்தில் துண்டுதுணிகள் சளி திரவத்தை துடைக்க 10 காகிதப்பை கழிவுகளை சேகரிக்க 11 தட்டில் சுத்தமான ஊசிக்குழல் (அ) புனல் இரைப்பை திரவங்களை உறிஞ்சி எடுக்க மற்றும் உணவூட்ட 12 ஒரு கிண்ண மிதமான நீரில் ஒரு டம்ளர் உணவு உடல் வெப்ப நிலையில் உணவை அளிக்க 13 அவுன்ஸ் குவளை உட்செலுத்தும் திரவ உணவுகளை அளவிட 14 ஒரு கிண்ணத்தில் நீர் குழாயின் நிலையை கண்டறிய 15 அடைப்பான் இரைப்பை திரவங்கள் கசிவதை தடுக்க, குழாயை மூடுவதற்கு 16 உறிஞ்சி எடுக்கும் கருவி சுய நினைவற்ற அல்லது மிகவும் மோசமான நிலையில் இருக்கும் நோயாளி வாந்தி எடுத்தால் அவை சுவாசப்பாதையில் செல்லும் போது, காற்றுப் பாதையை சரி செய்ய செயல்முறையின் படிகள் (Steps of Procedure) காரணிகள் (Reason) கைகளை கழுவுதல் குறுக்கு தொற்றை நீக்குதல் குழாயை எடுத்து அது நல்ல நிலையில் உள்ளதா என்பதை பரிசோதித்த பின் நீரை செலுத்தி பார்க்க வேண்டும். குழாயை செலுத்துவதற்கு முன் ஏதாவது அடைப்பு இருக்கிறதா அல்லது நீர் தேங்கி இருக்கிறதா என்பதை பரிசோதிக்க வேண்டும். ஏனெனில் நீர் மூச்சுக்குழலில் சென்று நோயாளிக்கு மூச்சடைப்பு ஏற்படலாம். குழாயை குறைந்தது 6 - 8 inch அளவுக்கு உயவுப் பொருளைத் தடவ வேண்டும். உயவுப்பொருள் சளிப்படலத்துக்கும் குழாய்க்கும் இடையே உராய்வுத் தன்மையை குறைக்கிறது. உயவுப் பொருள் அதிகமாக இருந்தால் அது மூச்சுக்குழலுக்குள் சென்று மூச்சுத் திணறலை ஏற்படுத்தலாம். குழாயை மூக்கின் நுனிப் பகுதியிலிருந்து காது வரை மற்றும் மார்பெலும்பின் ஜிப்பாய்டு (Xiphoid) முனை வரை அளந்து குறியிட வேண்டும். தோராயமாக குழாய் இரைப்பையை அடையக்கூடிய நீளத்தை கணக்கிடலாம். குழாயை எடுத்து வலது கையில் சுற்றிக் கொண்டு, முனைப் பகுதியை இடது மூக்குத் துளையினுள் செலுத்த வேண்டும். மூக்குத் தண்டு வலது பக்கமாக தள்ளப்படுகிறது. குழாயை மெதுவாக ஆனால் விரைவாக பின்புறமாக கீழ்நோக்கி செலுத்த வேண்டும். குழாய் மூக்குத் தொண்டைப்பகுதிக்கு செல்லும் போது சிறிய தடுப்பு ஏற்படலாம். நோயாளியின் தலையை மடங்கச் செய்து, 1 inch குழாயை வெளியே எடுத்து பக்கவாட்டில் உட்பக்கம் சுழற்சி முறையில் உள்ளே செலுத்தலாம். தலையை மடக்குவதால், உள்ளே குழாய் மடங்கி மூக்குத்தொண்டை இணைப்பிலிருந்து தொண்டைக்குள் செலுத்த உதவும். குறிப்பிடத்தக்க வகையில் தடுப்பு தென்பட்டால் உடனே நிறுத்திவிட்டு, தொண்டையின் பின் பக்கத்தில் குழாய் சுருண்டிருக்கிறதா? என்று கவனிக்க வேண்டும். குழாய் தொண்டையை அடையும் போது நோயாளி இருமினால், சிறிது ஓய்வெடுக்கச் செய்து விட்டு, ஆழ்ந்த சுவாசம் எடுக்க சொல்ல வேண்டும் ஆழ்ந்த சுவாசம் தொண்டைப் பகுதியை இளைப்படையச் செய்யும். சிறிய இடைவெளி வாந்தி எடுத்தலை தடுக்கும். நோயாளியை ஒரு மிடறு தண்ணீர் குடிக்கச் சொல். ஒவ்வொரு முறை விழுங்கும் போதும் 3-4 அங்குல குழாயை உள்ளே செலுத்து. முதலில் குறிப்பிட்ட அளவு குழாய் உள்ளே செல்லும் வரை தொடர்ந்து செய். விழுங்குவதினால் உணவுக் குழல் வழியாக குழாய் விழுங்கப்படும். குறிக்கப்பட்ட பகுதிவரை குழாயை இரைப்பைக்குள் செலுத்த வேண்டும். அதிகமாக திணறல், இருமல் மற்றும் நீலம் பாரித்தல் போன்றவை மூச்சடைப்பின் அறிகுறிகள். குழாய் ஒரு வேளை மூச்சுக்குழலில் இருக்கலாம். உடனே வெளியே எடுத்து விட வேண்டும். இரைப்பையில் குழாய் சரியான நிலையில் உள்ளதா என்பதை பரிசோதித்து பார்க்க வேண்டும். ஊசிக்குழல் மூலம் இரைப்பையில் உள்ளவற்றை உறிஞ்சி எடுக்க வேண்டும். ஊசிக்குழாயின் முனையை செருகு அல்லது கிண்ணத்தில் உள்ள நீரில் வைத்து, காற்றுக் குமிழ்கள் வெளி வருவதைக் கவனி. நோயாளியை முனங்க (Hum) அல்லது பேச சொல்ல வேண்டும். திரவங்கள் நுரையீரலிலிருந்து சுலபமாக உறிஞ்சப்பட முடியாது. மூச்சுப் பாதையில் குழாய் இருந்தால் ஒவ்வொரு வெளிமூச்சிலும் காற்றுக் குமிழ்கள் தோன்றும். குழாய் மூச்சுப் பாதையில் இருந்தால் நோயாளியால் பேசவோ, முனங்கவோ முடியாது. குழாயை சரியான நிலையில் வைத்து முகத்தின் பக்கவாட்டில் பிளாஸ்திரியால் ஒட்ட வேண்டும். உணவூட்டுவதற்கு முன் சிறிது நேரம் பொறுத்திருக்க வேண்டும். உணவு ஊட்டுவதற்கு முன்னால் புனல்வழியாக சிறிது நீரை ஊற்றி, புனலை கீழே சாய்ப்பதின் மூலம் காற்றுக் குமிழ்களை வெளியேற்ற வேண்டும். பிறகு உணவைக் கொடுத்துவிட்டு மருந்தை தயாராக வைத்திருக்க வேண்டும். உணவுக்கு பின் சிறிது நீரை ஊற்றி குழாயை மூடுவதால் திரவங்கள் வெளியேறுவதை தடுக்கலாம். குழாயை கவனமாக ஓட்டுவதின் மூலம் நிலை மாறாமல் இருக்கும். சில நிமிட ஓய்வு பெரிஸ்டால்ஸிஸ் அசைவுகளை குறைத்து குமட்டல் மற்றும் வாந்தியை தடுக்கும். காற்றை சரியாக வெளியேற்றாவிட்டால், திரவ உணவு முழுவதுமாக உள்ளே செல்லாது. ஒவ்வொரு முறை உணவு கொடுத்த பின்பு குழாயை மடக்குவதால் காற்று இரைப்பைக்குள் செல்வதை தடுக்கலாம். நோயாளி மற்றும் பொருட்களின் பின் கவனிப்பு வாயை சுத்தம் செய்ய வேண்டும். முகம் மற்றும் கைகளை சுத்தம் செய்து அவைகளை உலரவிட வேண்டும். இரப்பர் விரிப்பு மற்றும் துண்டை (Towel) நீக்க வேண்டும். நோயாளியை படுக்கையில் வசதியாக படுக்க வைக்க வேண்டும். சுய நினைவற்ற நிலை மற்றும் மிகவும் மோசமான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு வாயில் சேர்ந்துள்ள சளித்திரவங்களை உறிஞ்சி எடுக்க வேண்டும். எல்லாப் பொருட்களையும் பயன்படுத்தும் அறைக்கு (utility room) எடுத்துச் சென்று தண்ணீரை ஊற்றி விட்டு சோப்பு மற்றும் நீர் கொண்டு பொருட்களை சுத்தம் செய்ய வேண்டும். அவைகளை உலரவைத்து அவைகளுக்குரிய இடத்தில் வைக்க வேண்டும். கைகளைக் கழுவ வேண்டும். செவிலியரின் பதிவேடு மற்றும் I/o பதிவேட்டில் (உட்கொள்ளுதல் / வெளியேற்றுதல் பதிவேடு) நேரம், தேதி, உணவின் அளவு, உணவின் தன்மை, நோயாளியின் எதிர்வினை ஏதாவது இருந்தால் பதிவு செய்துவைக்க வேண்டும். குழாய் முறையில் உணவூட்டுதல் நிறுத்தப்படும்போது குழாயை எடுத்துவிட வேண்டும். இரைப்பை துளை மூலம் உணவூட்டுதல் (Gastrostomy Feeding) அறுவை சிகிச்சை மூலமாக வயிற்றில் ஒரு துளையை உண்டாக்கி இரைப்பைக்குள் திரவ உணவுகளை குழாய் மூலம் செலுத்துவதற்கு இரைப்பை துளை மூலம் உணவூட்டுதல் என்று பெயர். தேவையான பொருட்கள் சுத்திகரிக்கப்பட்டு, மூடிவைக்கப்பட்ட தட்டில் ஒரு புனல், இரப்பர் குழாய் மற்றும் கொதிக்க வைத்த திருகுடன் கூடிய கண்ணாடி இணைப்பு ஒரு கப் குடிநீர் மிதமான சுடுநீர் உள்ள பாத்திரத்தில் ஜாடியுடன் வைக்கப்பட்ட தேவையான அளவு உணவு. தொற்று நீக்கம் செய்யப்பட்ட உயவுப்பொருள் தொற்று நீக்கம் செய்யப்பட்ட தட்டில் சுத்திகரிக்கப்பட்ட கட்டுத்துணிகட்டு மற்றும் இடுக்கிகள் மருந்துகள் தேவைப்பட்டால் கழிவுத்தட்டு பல வால்கட்டுத்துணிகள் நோயாளியின் ஆடையை பாதுகாப்பதற்காக சிறிய இரப்பர் விரிப்பு மற்றும் துவாலை (Towel) செய்முறை செய்முறையை நோயாளிக்கு விளக்கிக்கூறி, படுக்கையை சுற்றி திரையிட வேண்டும். தேவையான பொருட்களை படுக்கையருகே கொண்டுவர வேண்டும். நோயாளியின் படுக்கை மற்றும் ஆடைகளை பாதுகாப்பதற்காக இரப்பர் விரிப்பையும், துவாலையும் பயன்படுத்த வேண்டும். கட்டுகளை திறந்து வைத்துவிட்டு கைகளைக் கழுவ வேண்டும். மருந்துகட்டை நீக்கிவிட்டு, அதைச் சுற்றியுள்ள பரப்பை சுத்தம் செய்து, காயத்தை நுண்ணுயிரறச் செய்யப்பட்ட சல்லாத்துணியால் மூடு. இரைப்பை குழாயின் திருகை திறந்து, இரப்பர் குழாயுடன் கூடிய கண்ணாடி இணைப்பையும், புனலையும் இணைக்க வேண்டும். காற்று உள்ளே செல்வதை தடுப்பதற்காக குழாயை விரல்களினால் இறுக்கி பிடிக்க வேண்டும். சிறிது சுத்தமான நீரை புனலில் ஊற்றி, புனலை கீழே சாய்ப்பதின் மூலம் காற்றை வெளியேற்றவேண்டும். புனல் காலியாவதற்குள், உணவை ஊற்றிவிட வேண்டும். ஏதாவது மருந்து கொடுக்கப்பட வேண்டியிருந்தால் அதையும் ஊற்று. இதைத் தொடர்ந்து சிறிது நீரை ஊற்றி குழாயை சுத்தம் செய். இரைப்பை குழாயிலிருந்து கண்ணாடி இணைப்பு குழாயையும் புனலையும் பிரித்தெடுக்க வேண்டும். சுத்தம் செய்து, மருந்தை போட்டு கட்டுகட்டும். பின் பொருட்களை சுத்தம் செய்து அவைகளுக்குரிய இடத்தில் வைக்க வேண்டும். உணவு ஊட்டியபின், நோயாளியை அமைதியாக படுக்கையில் இருக்கச்செய்ய வேண்டும். பெரிஸ்டால்டிக் அசைவுகளை தடுப்பதற்காக குழயை சிறிது நேரம் வைத்துவிட்டு எடுக்க வேண்டும். பிறகு மெதுவாக குழாயை எடுக்க வேண்டும். நேரம், உணவின் அளவு மற்றும் தன்மை மற்றும் வயிற்று துளையின் சுற்றுப்புறபகுதியின் நிலை போன்றவற்றை பதிவேட்டில் பதிவு செய். வாய்வழியாக இரைப்பை குழாய் மூலம் உணவளித்தல் வாய்வழியாக இரைப்பை குழாயை செலுத்துவதற்கும், மூக்கு வழி குழாய் போன்ற அதே செய்முறையை பின்பற்றவேண்டும். உதட்டிலிருந்து மார்பெலும்பின் ஜிப்பாய்டு (Xphoid) பகுதியின் நுனி வரைகுழாயின் நீளத்தை முன்பே அளவிட வேண்டும். குழாயை வசதியாக உள்ளே செலுத்துவதற்கு நோயாளியை குழாயை உறிஞ்சி அதே நேரத்தில் விழுங்கச்செய். தொகுப்பு வாய்வழியாக அல்லாமல் மற்ற முறைகளில் உணவூட்டுதலுக்கு ''கூடுதல் வாய்வழி உணவளித்தல்” என்று பெயர். செயற்கை முறையில் உணவூட்டும் முறைகள் மூச்சு குழாய் வழியாக உணவூட்டல் வயிற்று இரைப்பைக் குழாய் அல்லது வாய் இரைப்பைக் குழாய் மூலம் உணவளித்தல் இரைப்பையில் துளை அல்லது குடல் துளை மூலம் உணவூட்டுதல் ஆசனவாய் வழியாக உணவூட்டுதல் சிரைவழி திரவம் செலுத்துதல் மூக்குத்துளை வழியாக திரவ உணவு இரைப்பைக்குள் செலுத்தப்படுவதற்கு மூக்கு வழி உணவூட்டல் என்று பெயர் அறுவை சிகிச்சை மூலமாக வயிற்றில் ஒரு துளையை உண்டாக்கி இரைப்பைக்குள் திரவ உணவுகளை குழாய் மூலம் செலுத்துவதற்கு இரைப்பை துளை மூலம் உணவூட்டுதல் என்று பெயர். ஆதாரம்: தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்