குழந்தைகளிடம் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் டைப் 1 நீரிழிவு குழந்தைகளிடம் அதிக அளவில் டைப் 1 நீரிழிவு பாதிப்பை ஏற்படுத்துவதாக ஜிப்மர் எச்சரித்துள்ளது. வயது வந்தவர்களில் பொதுவாக காணப்படும் டைப் 2 நீரிழிவிலிருந்து மாறுபட்டு, டைப் 1 நீரிழிவு என்பது உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு இன்சுலின் உற்பத்தியை முழுமையாக பாதிக்கும் ஒரு தன்னைத்தாக்கும் நோயாகும். இது பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் இளம் வயதினரைக் பாதிக்கிறது. காரணமறியாத உடல் எடை குறைவு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிக தாகம், சோர்வு போன்ற ஆரம்ப அறிகுறிகளை கவனிக்காவிடில், ‘டையாபடிக் கேட்டோஅசிடோசிஸ்’ எனப்படும் உயிருக்கு ஆபத்தான அவசர நிலைக்கு விரைவாக மாறக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சரியான பராமரி அளிப்பதன் மூலம் இந்த நோயுடன் வாழும் குழந்தைகள் ஆரோக்கியமாகவும் நிறைவான வாழ்க்கையையும் நடத்த முடியும். மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2254226®=3&lang=2 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்