குழந்தை ஆரோக்கியமும் ஊட்டச்சத்தும்

உகந்த வளர்ச்சியடைய குழந்தைகள் பிறந்தது முதல் ஆறு மாதத்திற்கு தாய்ப்பாலூட்ட வேண்டும்.

பின், தாய்ப்பாலோடு போதுமான பாதுகாப்பான கூடுதல் உணவையும் சேர்த்து அளிக்க வேண்டும்.

கூடுதல் உணவு ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும். ஆறாவது மாதத்தில் முதலில் கூடுதல் உணவை குறைந்த அளவில் அறிமுகப்படுத்தி பின்னர் வயதுக்குத் தகுந்தவாறு படிப்படியாக அதிகரிக்க வேண்டும்.

மென்மையான வேகவைத்த உருளைக்கிழங்கு, தானியங்கள், இறைச்சி, மீன், முட்டை போன்று பல வகையான உணவுகளைத் தரலாம்.

ஆறாவது மாதத்தில் இருந்து அரைத்த அரைதிட உணவைத் தினமும் முதலில் 2-3 தடவைகளும் பின்னர் ஒன்பதாவது மாதத்தில் இருந்து 3-4 தடவைகளும் கொடுக்கலாம்.

கரண்டியில் நிற்குமளவுக்கு அதன் அடர்த்தி இருக்கலாம். ஓர் ஆண்டிற்குப் பிறகு வீட்டில் அனைவரும் உண்ணும் உணவையே குழந்தைக்கும் வழங்கலாம். 1-2 பண்டங்களையும் உணவோடு சேர்த்துக் கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து

ஆதாரம்: தேசிய சுகாதார இணையம்