நேர்முக ஆலோசனையின் நுட்பங்கள்

அ. கணிணியின் மென்பொருள் (Software) நன்கு எழுதப்பட்டிருக்குமேயானால், கணிணி நோயாளியோடு தோழமை கலந்த விளக்கமான உரையாடலை நடத்த இயலும்.

ஆ செயல் திட்ட வடிவமைப்பில் (Program design) அடங்கியுள்ள பகுதி வேலைகளுக்கு கணிணியை பயன்படுத்துவதால், அனைத்து ஏற்புடைய (pertinent) வினாக்களுக்கும் விடையளிக்கப்படுகிறது.

இ. கணிணி மூலமாக ஆலோசனை நடைபெறுவதால் வல்லுநரின் நேரம் வீணாகாமல் தடுக்கப்படுகிறது. நோயாளியின் பதில்கள் மாறுபாடு இன்றி (biased) சரியான பதில்கள் கிடைக்கின்றன.

ஈ. தடுமாற்றமான கேள்விகளை (embarrassing questions), நேரிடையாக கேட்பதைவிட, கணிணி மூலமாக கேட்கும்போது, உண்மையான பதில்கள் கிடைக்கின்றன.

உ. ஆலோசனை நிகழ்வின் போது, நேரிடையாக செய்திகளை நோயாளியிடமிருந்து பெறவும், தேவையான உணவூட்ட விவரங்கள் தொகுக்கவும். அச்சிட்ட தொகுப்பு சுருக்கங்களை (Summary) நோயாளிகளின் நேர்காணலுக்கு முன்பாக தயாரித்து தரவும் இயலுகிறது.

செயற்கை அறிவுத்திறன்

கணிணியின் மூலம் திட்டமிடுவதால், முடிவு எடுக்கும் பணி (decisions) ஒரு எல்லைக்குள் வரையறுக்கப்படுகிறது. இம்முயற்சி, தாதியருக்கும், திட்டஉணவு வல்லுநருக்கும் நோய் அறுதியிட்ட (diagnosing) ஊட்டச்சத்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கும், நோய் அறுதியிடும் சோதனைகளை எளிதில் விளக்குவதற்கும், பிறப்பிலேயே காணப்படும் மரபியல் பிழைகளைக் கண்டறியவும், மருந்து மற்றும் ஊட்டச்சத்து சிக்கல்களை பிரித்தறியவும் உதவுகிறது.

உணவூட்ட காப்பு திட்டம்

நேர்முக ஆலோசனை முடிந்து ஊட்டச்சத்து நிலையைப் பகுத்தாய்ந்த பின் காப்பு திட்டத்தை உருவாக்க வேண்டும்.

அ. கணிணி தன்னுடைய அதிவேக செயல் திறனால் நோயாளியின் உணவு விவரங்கள், மற்றும் நோயாளியின் குறிப்பிட்ட ஊட்டச்சத்து தேவையை நிறைவு செய்யும் வகையில் பகுத்தாய்ந்து, திட்டஉணவை அமைத்து தருகிறது.

ஆ, கணிணி நோயாளிக்கு மருத்துவ கோளாறின் பின்னணியை விளக்கி, திட்டஉணவின் விவரங்களை வலியுறுத்துகிறது. அவர்களுடைய வாழ்க்கை முறைகளுக்கேற்ற, தேவையான ஊட்டச்சத்துக்கள் அடங்கிய திட்டஉணவை அமைத்தும் தேவைப்படும் திட்டஉணவு மாற்றங்களை செயல்படுத்தியும் நோயாளிக்கு உதவுகிறது.

நோயாளியின் படுக்கை அருகில் கண்காணித்தல் (Bedside monitering)

நோயாளியின் படுக்கை அருகில் கணிணியை செயல்படும்படி செய்தால், நோயாளியைக் குறித்த விவரங்களைச் சேகரிப்பது மட்டுமின்றி, ECG பகுத்தாய்தல், சிறுநீர் வெளியேறும் அளவை கணக்கிடல் மற்றும் மருந்தின் அளவை கணக்கிடல் போன்றவற்றைத் தொகுக்க இயலும்.

தொடர் பணிகள் (follow-up)

மிக சிறிய (Micro) கணிணி, தேவையான மருத்துவ பதிவேட்டின் விவரங்களை அறியவும், மருத்துவ பரிசோதனைகளை அட்டவணைப் (Schedule) படுத்தவும், அதன் விவரங்களை உடனடியாக அறியவும் உதவுகிறது.

சத்துணவு கல்வியில் கணிணியின் பயன்கள்

கணிணியின் துணையோடு சத்துணவு கல்வியை போதிக்கும் போது, நோய்க்கும், திட்ட உணவிற்குமுள்ள தொடர்பு, ஊட்டச்சத்து நிலை கண்டறியும் முறைகள், நோயாளியின் திட்ட உணவு வரலாறு மற்றும் நோயாளியின் நலனைப் பேணும் ஆய்வுகள் போன்றவற்றை விளக்கி, அறிவுரைகள் வழங்கலாம். சத்துணவு கல்வி ஒவ்வொருவருக்கும் தேவையானது. ஏனெனில், பல்வேறு வகையான நோய்கள் வராமல் பாதுகாக்க உதவுகிறது. உதாரணமாக, அயோடின் குறை நோய்கள் வராமல் தடுக்க, அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துவது எளிய மற்றும் ஆற்றல் மிக்க முறையாகும். சத்துணவு கல்வியை ஆர்வமுள்ளதாகவும், பயனுள்ளதாகவும் மாற்ற “மல்டிமீடியா” (Multi media) மற்றும் “வெப்” (web) துணையோடு திட்டமிடுதல் சாலச் சிறந்தது.

‘வெப்’ மூலமாக உணவூட்ட கல்வி கற்பித்தல்

இந்தியா போன்ற நாடுகளில், வறுமை கோட்டிற்குக் கீழும், ஊட்டக் குறைவுள்ள மக்கள் தொகை அதிக அளவில் இருப்பதால், “வெப் (Web) போன்ற பயனுள்ள தொழில் நுட்பம், உணவூட்ட வல்லுநருக்கு பேருதவி புரிகிறது. அது மட்டுமின்றி, நெடுந்தொலைவிலுள்ள சுகாதார மையங்களோடு (Health care centre) தொடர்பு கொள்ள உதவுகிறது. உணவூட்ட வல்லுநர், சத்துணவியல் கருத்துக்களை பிறரின் ஆர்வத்தை தூண்டும் வகையில் வெளியிட "மல்டிமீடியா மற்றும் “வெப்' துணைப் புரிகிறது. கணிணியை அடிப்படையாகக் கொண்டு சத்துணவைப் பற்றிய கருத்துச் செறிந்த, ஆர்வத்தைத் தூண்டக்கூடிய மற்றும் ஒன்றோடொன்று செயலாற்றும் வகையில் அமைக்கப்பட்ட நிகழ்ச்சிகள் (Programme) பெருவாரியாக உள்ளன.

உதாரணமாக ‘நியூட்ரிசன் டிஸ்கவரி” (Nutrition Discovery) என்ற CD-ROM - ஐ அடிப்படையாகக் கொண்ட நிகழ்ச்சி, ஒரு மனிதன் உட்கொள்ளும் ஊட்டச்சத்து மற்றும் உணவின் தரத்தை மதிப்பிடுகிறது. இந்நிகழ்ச்சி ஆர்வமுடன் தொடர்ந்து பார்க்கும் படியாக அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைக்காக அமைக்கப்பட்ட மற்றுமொரு CD யை அடிப்படையாக கொண்ட நிகழ்ச்சி” (5A Day adventure). காய்கறிகளையும் அதிகமாக உண்ணுமாறு வலியுறுத்தும் படியாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் கருத்துகளும், செயல்பாடுகளும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் அடங்கியுள்ள சத்துக்கள், பரிமாறும் அளவுகள், சத்துக்களைப் பற்றிய துண்டு குறிப்பு தயாரித்தல் போன்றவையாகும். சுருக்கமான ஒளி-ஒலி படத் துண்டுகள் (short video clips) பயிர்களை வளர்க்கும் முறை மற்றும் பழங்களைப் பதப்படுத்தும் முறைகளை விவரிக்கின்றது.

சத்துணவியல் பற்றி அறிந்து கொள்ள அநேக தளங்கள் (sites) உள்ளன. அவைகளில் சில.

www.kidsfood.org

www.healthyinformation.com

www.eatright.org

உணவூட்டம் மற்றும் திட்டஉணவில் கணிணியின் பயன்கள்

ஊட்டச்சத்து கல்வி மற்றும் திட்டஉணவு ஆலோசனைகளுக்கான மென்பொருள் தொகுப்புகளை (software package) உருவாக்கி பயன்படுத்துதல்.

உணவக செயல் மேலாண்மையில் (Food Service Management) உணவு திட்டங்களைக் கற்பிக்க கணிணி முக்கியச் சாதனமாக உள்ளது. கணிணி மென்பொருள் தொகுப்பான, "கம்ப்யூட்டர் எய்டட் லர்னிங் இன் டயட்டிக்ஸ்” (Computer Aided learning in dietetics - CALID) கணிணியின் துணையோடு திட்ட உணவை கற்பித்தல்) என்னும் மென்பொருளை அருண்மொழி பாலாஜி என்பவர் உருவாக்கி, நிலைப்படுத்தியுள்ளார். கணிணியைப் பயன்படுத்துவர்களுக்கு அறிவுரைகள் கீழ்க் கண்டவாறு பிரிக்கப்பட்டுள்ளது.

நோயாளியின் பெயர், பாலினம், விலாசம், உயரம், எடை நோயாளியின் எண் மற்றும் நோயாளியின் நிலை போன்றவற்றைப் பாதுகாத்து வைத்துள்ள "மாஸ்டர் ஃபைல்” (Master file)

உணவு தளத்தில் (foodsite) உணவு வகைகளின் விவரங்களும் அதன் கலோரி, கார்போஹைட்ரேட் புரதம் மற்றும் கொழுப்பின் மதிப்புகள் அடங்கியிருக்கும். உணவு வகைகள், அவற்றின் உணவு வேளைகளைப் பொருத்து அகர வரிசையில் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும். நோயாளிகளுக்குத் தேவையான உணவு வகைகளைச் சேர்ப்பதற்கும், தேவையில்லாதவற்றை தவிர்ப்பதற்கும் வசதி செய்யப்பட்டள்ளது.

திட்ட உணவு ஆலோசனையைத் திட்டமிடுதல் (diet counselling system), (personal) விவரங்களைச் சேகரிப்பதில் துவங்குகிறது.

இது 3 பிரிவுகளை உள்ளடக்கியது.

அ. ஒரு நாளின் உணவு உட்கொள்ளுதலைப் பகுத்தாய்தல் (analysis)

ஆ. தொகுத்தல்

இ) அச்சிட்டு வெளியிடல்

ஆதாரம்: நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூட்ரிசன்