சர்வதேச யோகா தினம் சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21, 2021 அன்று உலகெங்கிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. “யோகாவுடன் இணைந்திருங்கள், வீட்டிலேயே இருங்கள்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெற்ற ஏழாவது சர்வதேச யோகா தினத்தன்று உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து ஆயுஷ் அமைச்சின் மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம் உருவாக்கிய “எம்-யோகா” (mYoga) செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. எம்-யோகா (mYoga) செயலி பொது யோகா செயல்முறையின் அடிப்படையிலான பல்வேறு யோகா பயிற்சி காணொலிகளை உலகின் பல மொழிகளில் எம்-யோகா (mYoga) செயலி வழங்கும். நவீன தொழில்நுட்பத்துடன் பண்டைய அறிவியலை இணைப்பதற்கான சிறந்த உதாரணம் இதுவாகும். யோகாவை உலகெங்கிலும் விரிவுபடுத்தவும், ‘ஒரே உலகம், ஒரே சுகாதாரம்’ முயற்சிகளின் வெற்றிக்கும் எம்-யோகா செயலி முக்கிய பங்காற்றும் என்று பிரதமர் தெரிவித்தார். இந்த செயலியை iOS அல்லது Android ஆகியவற்றின் மூலம் பெறலாம்: iOS: https://apps.apple.com/app/id1549821346 Android: https://play.google.com/store/apps/details?id=org.who.APPMYOGA ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்