அறிமுகம்

மனிதன் உயிர் வாழ்வதற்கு ஆக்ஸிஜன் மிகவும் இன்றியமையாதது என்பது அனைவருக்குமே தெரியும். மனித உடலில் ஓடும் இரத்தத்தில் போதுமான அளவு ஆக்ஸிஜன் இருந்தால் தான், உடலுறுப்புக்கள் சிறப்பாக இயங்கும். ஆனால் நுரையீரல் நோய், ஆஸ்துமா, இரும்புச்சத்து குறைபாடான இரத்த சோகை போன்றவற்றால், உடலில் ஆக்ஸிஜனின் அளவு குறைவாக இருக்கும். ஒருவரது உடலில் ஆக்ஸிஜன் குறைவாக இருந்தால், அது பதற்றம், தலைவலி, மூச்சுவிடுவதில் சிரமம், வெளிரிய தோல், உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றால் அவஸ்தைப்படக்கூடும். ஒருவரது உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க ஆக்ஸிஜன் தெரபி, உடற்பயிற்சி மற்றும் குறிப்பிட்ட சில உணவுகளும் உதவும்.

உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க உதவும் உணவுகள்

பழங்கள்

பழங்களுள் அவகேடோ, பெர்ரிப் பழங்கள், கேரட், கனிந்த வாழைப்பழம், செலரி, பூண்டு, பேரிச்சம் பழம் போன்றவற்றில் ஆக்ஸிஜன் அதிகம் உள்ளது. இந்த பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. இந்த பழங்களில் உள்ள pH அளவு 8 ஆகும். பெர்ரிப் பழங்கள், பூண்டு மற்றும் பேரிச்சம் பழம் போன்றவற்றில் உள்ள பண்புகள், இரத்த அழுத்தத்தை சிறப்பாக வைத்துக் கொள்ளும்.

ஆப்ரிகாட் மற்றும் ஆப்பிள்

இந்த பழங்களில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இந்த பழங்களில் உள்ள pH அளவு 8 ஆகும். மேலும் இவை எளிதில் செரிமானமாகும். மேலும் இவற்றில் உள்ள நொதிப் பொருள், உடலில் ஹார்மோன்களை சமநிலையில் பராமரிக்க உதவும். உங்கள் உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க நினைத்தால், இந்த உணவுகளை கட்டாயம் சாப்பிட வேண்டியது அவசியம்.

எலுமிச்சை

ஒருவரது உடலில் ஆக்ஸிஜன் போதுமான அளவு இருந்தால், உடல் புத்துணர்ச்சியுடனும், ஆரோக்கியத்துடனும் இருப்பது போன்ற உணர்வைப் பெறுவோம். எலுமிச்சையில் அமிலத்தன்மை அதிகமாக இருக்கலாம். ஆனால் அது உடலினுள் செல்லும் போது காரத்தன்மையாக மாறும். மேலும் இதில் உள்ள எலக்ட்ரோலைட்டிக் பண்புகள் தான், இதை காரத்தன்மை நிறைந்த உணவாக்குகிறது. இந்த எலுமிச்சையை அன்றாடம் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், உடலில் ஆக்ஸிஜன் அளவு சிறப்பாக இருக்கும்.

திராட்சை, பேரிக்காய், உலர் திராட்சை, அன்னாசி, காய்கறி ஜூஸ்கள்

இந்த பழங்களிலும் ஆக்ஸிஜன் அதிகம் உள்ளது. இந்த உணவுகளில் உள்ள pH அளவு 8.5 ஆகும். இந்த பழங்களில் வைட்டமின் சி, ஏ மற்றும் பி-யுடன் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் உள்ளன. இந்த உணவுகள் இரத்தத்தை சீராக வைத்து, இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இதய நோயின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும். காய்கறி ஜூஸ்கள் செல்லுலார்களை சுத்தம் செய்ய முக்கியமானவைகளாகும். ஏனெனில் இவற்றில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.

பழச்சாறுகள் மற்றும் கிவி

இந்த உணவுகளில் இருக்கும் pH அளவானது 8.5 ஆகும். இந்த உணவுகளில் ஃப்ளேவோனாய்டுகள் அதிகம் உள்ளது. மேலும் இவற்றில் உள்ள பண்புகள், உடலில் காரத்தன்மையை அதிகரித்து, உடலுக்கு அதிகளவு ஆற்றலை வழங்கும்.

அஸ்பாரகஸ் மற்றும் கடல் பாசி

இந்த உணவுகளில் pH அளவானது 8.5 உள்ளது. இந்த வகை உணவுகள், உடலில் அமில அளவைக் குறைக்கும். இந்த உணவுகளை ஒருவர் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், உடலில் ஆக்ஸிஜன் அளவு சிறப்பான அளவில் இருக்கும். மேலும் உடலும் ஆற்றலுடன் இருக்கும்.

மாம்பழம், பார்லி, பப்பாளி, தர்பூசணி, சாத்துக்குடி

இந்த உணவுகளும் உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும். இந்த வகை உணவுகளில் pH அளவானது 8.5 உள்ளது. மற்றும் இது சிறுநீரகங்களை சுத்தம் செய்ய உதவியாக இருக்கும். இந்த பழங்களில் உள்ள வைட்டமின்கள் அதிகமாக உள்ளது மற்றும் இவைகள் செரிமானத்தின் போது காரத்தன்மையை உருவாக்கும். பப்பாளி குடலை சுத்தம் செய்து, குடலியக்கத்தை சிறப்பாக வைத்துக் கொள்ளும்.

குடைமிளகாய்

இந்த உணவுகளில் pH அளவு 8.5 உள்ளது. இவற்றில் எண்டோக்ரைன் மண்டலத்திற்கு தேவையான நொதிகள் ஏராளமான அளவில் உள்ளது. குடைமிளகாயில் வைட்டமின் ஏ என்னும் ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடத் தேவையானவை அதிகம் உள்ளது. அதோடு இவற்றில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகளும் அதிகம் உள்ளது.

ஆர்கானிக் ஜெலடின்

இந்த உணவிலும் ஆக்ஸிஜன் அதிகம் உள்ளது. இந்த ஜெலடின் கடல் பாசியில் இருந்து தயாரிக்கப்படுவதாகும். இதில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. மேலும் இவற்றில் டயட்டரி நார்ச்சத்து ஏராளமான அளவில் உள்ளது மற்றும் இது எளிதில் செரிமானமாகக்கூடியதும் கூட. எனவே உங்கள் உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க நினைத்தால், இதனை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

கடல் உணவுகள் மற்றும் இறைச்சி

இறைச்சிகளில் புரோட்டீன், குறிப்பிட்ட பி வைட்டமின்கள், இரும்புச்சத்து போன்றவை அதிகம் உள்ளது. கடல் சிப்பி, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, ஈரல் போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. மீன்களில் சூரை, சால்மன் போன்றவற்றில் இரும்புச்சத்தை விட புரோட்டீன் அதிகம் உள்ளது. சிக்கன் முட்டையில் இந்த இரண்டு சத்துக்களும் மிதமான அளவில் நிறைந்துள்ளது. ஆகவே இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு, உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

தானியங்கள்

தானியங்களில் புரோட்டீன், பல்வேறு பி வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து போன்ற இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை மேம்படுத்தும் சத்துக்கள் உள்ளன. அன்றாட உணவில் தானியங்களை ஒருவர் சேர்த்து வந்தால், நிச்சயம் அவர்களது உடலில் ஆக்ஸிஜன் அளவு சிறப்பாக இருக்கும். எனவே உங்கள் உடலில் ஆக்ஸிஜனை அதிகரிக்க நினைத்தால், தானியங்களை அன்றாடம் சாப்பிட்டு வாருங்கள்.

பருப்பு வகைகள்

ஆக்ஸிஜன் நிறைந்த உணவுகளுள் ஒன்று பருப்பு வகைகள். பருப்பு வகைகளான பட்டாணி, உலர்ந்த பீன்ஸ், சோயா பீன்ஸ் போன்றவை உடலில் ஆக்ஸிஜன் செயல்பாட்டிற்கு உதவும். மேலும் பருப்பு வகைகளுள் அன்றாடம் தேவையான புரோட்டீன்கள், பல்வேறு பி வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து போன்றவை அடங்கியுள்ளது. எனவே அன்றாட உணவில் சிறிது பருப்பு வகைகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஆதாரம்: போல்ட்ஸ்கை வலைதளம்