காசநோய் மற்றும் எச்ஐவி நோயாளிகளுக்கான தொடர் கண்காணிப்பு 99-டாட்ஸ் திட்டம்

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் காசநோயாளிகள் மற்றும் எச்ஐவி தொற்று நோயாளிகள் தவறாமல் மருந்துகளை எடுத்துக் கொள்கின்றனரா என்பதைக் கண்காணிக்கவும், அவர்களை தொடர் சிகிச்சையில் உள்படுத்தவும் 99-டாட்ஸ் எனும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நோய் பாதித்த நபர் தினமும் மாத்திரை எடுத்துக் கொண்டவுடன், மாத்திரை அட்டையில் உள்ள கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு அழைக்க வேண்டும். அந்த அழைப்பு பெங்களூருவில் உள்ள கட்டுப்பாட்டு அறையின் தானியங்கிக் கணினியில் பதிவு செய்யப்படும்.

நோயாளி மருந்து எடுத்துக் கொண்டிருப்பதை மருத்துவமனைப் பணியாளர்கள் எங்கிருந்தாலும் கணினி மூலம் கண்காணித்து மாத்திரையை எடுக்காமல் இருப்பது தெரியவந்தால் களப் பணியாளர்கள் நேரில் சென்று அவர்களுக்கு விடுபட்ட மருந்துகளை வழங்குவார்கள்.

முதற்கட்டமாக, இத்திட்டம் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்காக முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆதாரம்: தினமணி நாளிதழ்